ஒரு நாளில் ரூ.4,000 கோடி டர்னோவர்!! இந்திய சந்தையை கலக்கும் புதிய நிறுவனம்...

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ஒரு நிறுவனத்தை துவங்குவது என்றால் எவ்வளவு கஷ்டம் என்பது, பெரு நகரத்தில் சிறு நிறுவனத்தை துவங்கியவர்களை கேட்டால் தெரியும். அவர்களின் கதை அனைத்தும் ரத்த களறியாக மட்டுமே இருக்கும். ஆனால் மும்பையில் ஒரு நிறுவனம் எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் ஒரு நாளுக்கு 4,000 கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்து வருகிறது.

 

ரூ.4,000 கோடி தானே என்று நினைக்காதிற்கள் இவர்கள் நிறுவனத்தை துவங்கி வெறும் 2 வருஷம் தான் ஆகிறதாம். அப்படி என்னயா பிஸ்னஸ் பன்றிங்க....

ஆர்.கே.எஸ்.வி

ஆர்.கே.எஸ்.வி

இது என்ன எழுத்துகளை பிச்சு போட்ட மாதிரி.. இதுதான் இந்நிறுவனத்தின் பெயர் RKSV. இது ஒரு டிஸ்கவுன்ட் புரோக்கிங் நிறுவனம். "எல்லோருக்கும் ஒரு நிறுவனத்தை துவங்கும் முதல் வருடம் மிகப்பெரிய சவலாக இருக்கும். ஆனால் அப்படி எந்த ஒரு சவலையும் நாங்கள் சந்திக்கவில்லை" என இந்நிறுவனத்தின் நிறுவனர் ரகு குமார் தெரிவித்தார்.

டிஸ்கவுன்ட் புரோக்கிங் நிறுவனம்

டிஸ்கவுன்ட் புரோக்கிங் நிறுவனம்

சாதாரண புரோக்கிங் நிறுவனத்திற்கும் இதற்கும் பெரிய வித்தாயசம் இல்லை, ஒரு சின்ன வித்தியாசம் தான். டிஸ்கவுன்ட் புரோக்கிங் நிறுவனம் தனது வாடிக்கையாளருக்கு பங்கு சந்தை குறித்து எவ்விதமான ஆலோசனைகளையும் வழங்காது, இதனால் இத்தகைய புரோக்கிங் நிறுவனத்தில் வர்த்தக கட்டணங்கள் (கமிஷன்) மிகவும் குறைவு. சாதாரண புரோக்கிங் நிறுவனம் இதற்கு தலைகீழ், ஆலோசனை வழங்கும், கட்டணங்களும் அதிகம்.

ரூ.4,000 கோடி டர்னோவர்
 

ரூ.4,000 கோடி டர்னோவர்

குறைவான கட்டணங்களால் பங்கு சந்தையில் முதலீடு செய்ய ஆர்வமுள்ள ஆதிகளவிலான வாடிக்கையாளர்களை இந்நிறுவனம் கவர்ந்துள்ளது. இதனால் இந்நிறுவனத்தின் வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்து தற்போது சுமார் 4000 கோடி ரூபாய் ஒரு நாளில் வர்த்தகம் செய்கிறது.

ஆயுத எழுத்து

ஆயுத எழுத்து

இந்நிறுவனத்தை துவங்கியது முன்று அமெரிக்க நன்பர்கள் ரகு குமார், ரவி குமார் (சகோதரர்கள்) மற்றும் ஸ்ரீநிவாஸ் விஸ்வநாதன் ஆகியோர்.

இந்திய பங்கு சந்தை

இந்திய பங்கு சந்தை

2008ஆம் ஆண்டு இந்திய பங்கு சந்தையில் வாடிக்கையாளர் நேரடியாக முதலீடு செய்ய செபி அனுமதித்தது. இதன் பின் பங்கு சந்தையில் வர்த்தகம் செய்ய பலர் ஆரவமுடன் களம் இறங்கினர். இதில் ஆழம் தெரியாமல் கால்களை விட்டு சிக்கிக் கொண்டது பல பேர். அதேபோல் எட்டிப்பார்த்துக் கொண்டே பல இலட்சங்கள் சம்பாதித்தது பல பேர்.

முன் அனுபவம்

முன் அனுபவம்

2006-2008ஆம் ஆண்டுகளில் கல்லூரி படிப்பை முடித்துவிட்ட நியூயார்க் பங்கு சந்தையில் ஈடுப்பட்ட அனுபவம் அதிகம் என ரகு குமார் தெரிவித்தார்.

நிறுவன தகவல்

நிறுவன தகவல்

நிறுவன துவக்கம்: 2012 (சில்லறை வணிகம்)

நிறுவனர்: ரகு குமார், ரவி குமார், மற்றும் ஸ்ரீநிவாஸ் விஸ்வநாதன்

வாடிக்கையாளர் எண்ணிக்கை: 20,000

தினசரி விற்றுமுதல்: ரூ.4,000 கோடி

லாபம்: தகவல் அளிக்க மறுப்பு

ஊழியர்களின் எண்ணிக்கை: 50

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How a two-year-old firm is hitting a daily turnover of Rs 4,000 crore today

Within two years of starting operations and largely operating in a dull market, RKSV is now clocking daily turnover of Rs 4,000 crore.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X