அமெரிக்க டாலரும்.. இந்திய ரூபாயும்..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்திய ரூபாயின் மதிப்பு மட்டுமல்ல, உலகின் பெரும்பான்மையான நாடுகளின் பண மதிப்புகளும் அமெரிக்க டாலரைக் கொண்டே கணக்கிடப்படுகின்றன.

 

சர்வதேசச் சந்தைகளில் அன்னியச் செலாவணியின் ஏற்ற இறக்கங்களைப் பொருத்து, ஒவ்வொரு வினாடியும் இந்திய ரூபாயின் மதிப்பும் அமெரிக்க டாலரின் மதிப்பும் மாறிக் கொண்டே இருக்கும்.

குறிப்பாக, தங்கம் மற்றும் பெட்ரோல் விலைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்படும் போது, இரு நாடுகளின் பண மதிப்பும் எகிறும் அல்லது அடியாகும். எல்லாம் சரி எதை கொண்டு ஒரு நாட்டின் பணத்தை அமெரிக்க டாலருக்கு எதிராக கணக்கிடப்படுகிறது. இந்த கேள்வி பலருக்கு தோன்றியிருக்கும் என்பது நிதர்சனமான உண்மை. உதரணத்திற்கு நம் இந்தியா ரூபாயை எடுத்துக் கொள்வோம்

தமிழ் குட்ரிட்டன்ஸ் பேஸ்புக் பக்கத்தில் இணைந்திடுங்கள்!!

நடப்பு கணக்கு பற்றாக்குறை

நடப்பு கணக்கு பற்றாக்குறை

இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கும் போதெல்லாம், ரூபாயின் மதிப்புக்கு அடியாகும். அப்படித்தான் கடந்த 2013 ஆகஸ்ட்டில், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 68.86 என்ற அளவுக்கு அதல பாதாளத்தில் வீழ்ந்தது.

அமெரிக்காவில் முதலீடு

அமெரிக்காவில் முதலீடு

உலகின் பெரும் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை அமெரிக்க சந்தைகளில் அதிக அளவில் முதலீடு செய்யும்போது, டாலரின் மதிப்பு கிடுகிடுவென உயரும். டாலரின் மதிப்பு உயர்ந்தாலே போதும், இந்திய ரூபாயின் மதிப்பு மளமளவென்று குறைந்து விடும்.

அரசியல் குழப்பங்கள்
 

அரசியல் குழப்பங்கள்

உலகில் எந்த நாட்டில் அரசியல் குழப்பங்கள் நடந்தாலும், அது உலக அளவில் திடீர் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தி விடும், இதில் குறிப்பாக எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் அதிகளவில் பாதிக்கும். இதனால் அமெரிக்க டாலரில் ஏற்படும் பாஸிட்டிவ்- நெகட்டிவ்களைப் பொருத்து, ரூபாயின் மதிப்பு மாறுபடும்.

கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கும் போதெல்லாம், டாலருக்கு எதிரான ரூபாயின் விலை அடியாகும்.

ஏற்றுமதி-இறக்குமதி

ஏற்றுமதி-இறக்குமதி

நாம் வெளிநாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்யும்போது, அவர்களுக்கு அமெரிக்க டாலரில்தான் நாம் பணத்தைச் செலுத்த வேண்டும். அதனால், இறக்குமதிகள் அதிகரிக்கும் போதெல்லாம் டாலரின் மதிப்பு அதிகரிக்கும்; தானாகவே, ரூபாயின் மதிப்பு குறைந்து விடும். நம் நாடு செய்யும் ஏற்றுமதிகளை விட இறக்குமதிகள் மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கரண்ட் அக்கவுண்ட் பண வீக்கமும் அதிகரிக்கும்.

ரிசர்வ் வங்கியின் குறுக்கீடு

ரிசர்வ் வங்கியின் குறுக்கீடு

சில சமயம், அன்னியச் செலாவணிச் சந்தைகளின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த, அமெரிக்க டாலர்களை ரிசர்வ் வங்கி வாங்கும். அப்படி வாங்கும் போதெல்லாம், ரூபாயின் மதிப்பு குறைந்து விடுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் பேஸ்புக் பக்கத்தில் இணைந்திடுங்கள்!!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How is the Dollar to Rupee Value Determined?

Over the last few months dollar has risen against a basket of currencies as economic recovery in the US gathers momentum. The rupee value against the dollar is determined on a second-by-second basis as the currency is traded on the interbank forex markets, where the rupee vs dollar value is determined.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X