இந்திய ராணுவத்தை வலிமைப்படுத்தும் புதிய ஆயுதங்கள்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய ராணுவத்திற்கு 155எம்எம்/52 காலிபர் ரக துப்பாக்கிகளை வாங்க மத்திய அரசு அனைத்து விதமான ஒப்புதல்களையும் வழங்கியுள்ளது. இத்தகைய ரக துப்பாக்கிகள் தரையில் நிற்கவைத்துச் சுடக்கூடியவை. இதன் மதிப்பு மட்டும் சுமார் 15,750 கோடி ரூபாய் என இந்தியா ராணுவ நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.

 

டிஏசி எனப்படும் பாதுகாப்பு கொள்முதல் அமைப்பு இதைத் தவிர இந்திய விமானப்படையின் அனைத்து வான் மற்றும் தரைவழி சமிக்ஞை கருவிகளையும் ஒன்றிணைக்கும் ஐஏசிசிஎஸ் எனப்படும் ஒருங்கினைந்த வான்வெளி கட்டுப்பாட்டு மற்றும் உத்தரவுக் கருவிக் கட்டமைப்புகளுக்கான மாற்றப்பட்ட செலுத்துகை அட்டவணைக்கும் அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிகிறது.

நிலுவை உள்ள விண்ணப்பங்கள்

நிலுவை உள்ள விண்ணப்பங்கள்

எனினும், விமானப்படையிலுள்ள 56 அவ்ரோ போக்குவரத்து விமானங்களை மாற்றுவதற்கான டாடா சன்ஸ் மற்றும் ஐரோப்பிய விமான கட்டமைப்பு நிறுவனமான ஏர்பஸ் நிறுவனங்கள் இணைந்து அளித்துள்ள விண்ணப்பத்தின் மீது எந்த விதமான முடிவுகளும் எடுக்கப்படவில்லை.

பிற திட்டகளும் நிலுவையில்

பிற திட்டகளும் நிலுவையில்

டாடா நிறுவனத்தின் விண்ணப்பம் மட்டும் அல்லாமல் 106 ஸ்விஸ் பிலாடஸ் ரக பயிற்சி விமானங்கள் வாங்குவதற்கான விண்ணப்பத்தின் மீதும் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை.

மனோஹர் பாரிகர்

மனோஹர் பாரிகர்

இந்த முடிவுகள் மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோஹர் பாரிகர் தலைமையிலான டிஏசி குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டன. இது பாரிகர் தலைமையிலான முதல் கூட்டம் என்பதும் இது இரண்டு மணி நேரங்களுக்கு நீடித்ததும் குறிப்பிடத்தக்கது.

“பை அண்ட் மேக்(இந்தியா)”
 

“பை அண்ட் மேக்(இந்தியா)”

மனோஹர் பாரிகர் கூறுகையில் 814 துப்பாய்க்கிக் கருவிகள் இராணுவத்திற்காக "பை அண்ட் மேக்(இந்தியா)" பிரிவின் கீழ் வாங்கப்படுவதாகக் கூறினார். அவர் மேலும் கூறுகையில், 814 துப்பாய்க்கிகளில் 100 நேரடிக் கொள்முதலாகவும், மீதம் இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

25 ஆண்டுகள்

25 ஆண்டுகள்

இந்திய இராணுவம் கடந்த 25 ஆண்டுகளாக எந்த ஒரு புதிய கருவிகளையும் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

7,160 கோடி ரூபாய்

7,160 கோடி ரூபாய்

ஐஏசிசிஎஸ் கொள்முதலுக்கான செலுத்துகை அட்டவணை முன்பிருந்த முடிக்கப்பட்ட வேலையின் சதவிகிதத்தின் அடிப்படையில் அல்லாமல் திட்ட பகுதிகள் நிறைவினைச் சார்ந்து இருக்கும் எனவும் இதன் மொத்த மதிப்பு சுமார் 7160 கோடி ரூபாயாகும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐஏசிசிஎஸ் கட்டமைப்பு

ஐஏசிசிஎஸ் கட்டமைப்பு

அதிகாரிகள் இந்த ஐஏசிசிஎஸ் கட்டமைப்பு விமானப்படை கட்டுப்பாட்டுப் பணிகளை ஒரு மையப்பகுதியில் வைத்து கட்டுப்படுத்த அனுமதிக்கும் எனவும், உண்மையான போக்குவரத்து நிழற்படங்கள், விவரங்கள் மற்றும் குரல் பரிமாற்றங்களை செயற்கைக் கோள்களிடமிருந்து பெற்றுத் தருவதுடன் விமானத்திற்கும் தரைக் கட்டுப்பாட்டிற்கும் இடையே தொடர்பையும் ஏற்படுத்தித்தரும் எனவும் தெரிவித்தனர்.

மேக் இன் இந்தியா

மேக் இன் இந்தியா

மேலும் அரசின் மேக் இன் இந்தியா எனப்படும் இந்தியாவிலேயே அனைத்தையும் தயாரிக்க உதவும் திட்டத்தினைக் குறித்து டிஏசி விவாதித்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

முதலீடு

முதலீடு

அரசு உள்நாட்டு உற்பத்தியில் முனைப்புக் காட்ட விரும்புவதாகவும் இந்த முயற்சியில் முதலீடு செய்வோரை ஈர்க்கும் இருக்கும் வகையில் அமைய விரும்புவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mounted Gun System For Indian Army

The Indian Army will get the 155mm/52 caliber mounted gun system as its acquisition has been cleared for 15,750 crore, an official said. 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X