ரஷ்யாவிற்கு கைகொடுக்கும் எஸ்ஸார் நிறுவனம்!! 10 வருட எண்ணெய் இறக்குமதி ஒப்பந்தம்...

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: உலக சந்தையில் எண்ணெய் விலை குறைந்ததாலும், சவுதி நாடுகள் எண்ணெய் உற்பத்தியை அதிகரித்தாலும், எண்ணெய் வளம் இல்லாத நாடுகள் அனைத்தும் அமெரிக்கா மற்றும் சவுதி நாடுகளில் இருந்து எண்ணெயை வாங்குகின்றன. இதனால் ரஷ்யாவின் எண்ணெய் விற்பனை கடுமையாக பாதித்துள்ளது.

 

இந்நிலையில் ரஷ்யாவிற்கு கைகொடுக்கும் வகையில் எஸ்ஸார் நிறுவனம் ரஷ்யாவிடம் எண்ணெய் இறக்குமதி செய்யும் நீண்ட கால ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது.

 
ரஷ்யாவிற்கு கைகொடுக்கும் எஸ்ஸார் நிறுவனம்!! 10 வருட எண்ணெய் இறக்குமதி ஒப்பந்தம்...

இதற்கான ஒப்பந்தம் இரு நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் நடந்தது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அடுத்த 10 வருடத்திற்கும் எஸ்ஸார் நிறுவனம் ரஷ்யாவிடம் எண்ணெய் இறக்குமதி செய்து கொள்ளும்.

எஸ்ஸார் நிறுவனம் இந்தியாவில் இருக்கும் தனது குஜராத் சுத்திகரிப்பு ஆலையில் ஒரு நாளிற்கு 405,000 பேரல் கச்சா எண்ணெயை பயன்படுத்தி வருகிறது. இது மட்டும் அல்லாமல் இங்கிலாந்தில் இருக்கும் ஸ்டான்லோவ் சுத்திகரிப்பு ஆலையில் 296,000 பேரல் எண்ணெயை பயன்படுத்தி வருகிறது.

மேலும் வருகிற நவம்பர் 30ஆம் தேதி முதல் ரஷ்யா எண்ணெய் ஏற்றுமதிக்கு ஈரான் நாட்டுடன் செய்திருந்த ஒப்பந்தம் முடிவடைகிறது. மேலும் இந்த ஒப்பந்தம் நீட்டிக்க எவ்விதமான எண்ணமும் இல்லை என்று ஈரான் எண்ணெய் வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது ரஷ்யாவின் எண்ணெய் எற்றுமதிக்கான அனைத்து வழிகளையும் முடக்கிய அமெரிக்கா தான். எப்படி???

இத படிங்க தெரியும்... பெட்ரோல் விலை சரிவின் பின்னணியில் சர்வதேச அரசியல் உள்குத்து!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Essar Oil set to ink 10-year deal to import crude from Russia

The Essar Group will sign a long-term crude oil import deal with Russia's Rosneft during President Vladimir Putin's visit to New Delhi on Thursday, government and industry sources said on Wednesday.
Story first published: Thursday, December 11, 2014, 17:08 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X