பங்கு சந்தையில் இறங்க தயாரானது மைக்ரோமேக்ஸ் !!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய மொபைல் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமேக்ஸ், பங்கு சந்தையில் இறங்க தயாரானது. இதன் மூலம் இந்நிறுவனம் 500 மில்லியன் டாலர் ஆதாவது 3,162 கோடி ரூபாய் நிதியை திரட்ட உள்ளது.

மேலும் இந்நிறுவனம் 2015ஆம் நிதியாண்டின் துவக்கத்தில் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட உள்ளது. இதனால் சில்லறை முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்ய புதியதாக ஒரு நிறுவனம் கிடைத்துள்ளது.

மைக்ரோமேக்ஸ்

மைக்ரோமேக்ஸ்

2008ஆம் ஆண்டில் குறைந்த விலையில் பெரிய திரைகளை கொண்ட மொபைல்களை விற்பதன் மூலம், சந்தையில் மிகப்பெரிய இடத்தை இந்நிறுவனம் பிடித்தது. முதலில் இந்நிறுவனத்தின் குறைந்த அளவான பங்குகளை மட்டும் சந்தையில் விற்க மைக்ரோமேக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

14 மடங்கு உயர்வு

14 மடங்கு உயர்வு

இந்நிறுவனம் பங்குகளை விற்பதற்காக பன்னாட்டு வங்கிகளான மோர்கன் ஸ்டான்லி மற்றும் கோல்டுமேன் சேச்சஸ் ஆகிய நிறுவனங்களை தேர்ந்தெடுத்துள்ளது. இந்நிறுவனத்தின் பங்குமதிப்பீடு 14 மடங்கு அதிகாமாக இருக்கும் என நம்புகிறது.

முதல் முயற்சி தோல்வி

முதல் முயற்சி தோல்வி

2010ஆம் ஆண்டு இந்நிறுவனம் டிஏ அசோசியேட்ஸ் மற்றும் சிகோயா கேப்பிடல் துணையுடன், சில வங்கி உதவிகளுடன் சந்தையில் இறங்க தயாரானது, ஆனால் சந்தையில் மோசமான நிலையில் காரணமாக சந்தையில் இறங்கும் திட்டத்தில் இருந்து பின்வாங்கியது மைக்ரோமேர்ஸ்.

போட்டி

போட்டி

இந்நியா மற்றும் சில உலக நாடுகளில் சாம்சங், மோட்டோரோலா மற்றும் ஜியோமி ஆகிய நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை அளிக்கிறது.

வளர்ச்சி

வளர்ச்சி

நடப்பு நிதியாண்டில் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் இந்தியாவில் மொபைல் விற்பனை 64 சதவீதம் உயர்ந்தது, இதில் 25 சதவீதம் சாம்சங் கைபற்றியது, இதை தொடர்ந்து 20 சதவீதத்தை மைக்ரோமேக்ஸ் நிறுவனம் கைபற்றியது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Micromax Plans to Raise Up to $500 Million Through IPO

Micromax Informatics, India's second-largest smartphone maker, plans to raise as much as $500 million (roughly Rs. 3,162 crores) through a stock market listing in its financial year beginning in April, the Economic Times newspaper reported on Saturday.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X