விமான எரிபொருளை விட சாதாரண பெட்ரோல் விலை ரூ.6.50 அதிகம்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியதன் காரணமாக இந்தியாவில் விமான எரிபொருளை விட பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது.

இன்றைய நிலவரப்படி டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 58.91, விமானத்திற்கு பயன்படுத்தும் ஏவியேஷன் டர்பைன் எரிபொருள் ATF விலை ரூ. 52.42 மட்டுமே. கிட்டதட்ட 6.50 ரூபாய் வித்தியாசம்.

கலால் வரி உயர்வு

கலால் வரி உயர்வு

விமான எரிபொருளைவிட தரத்தில் குறைவானது சாதாரண பெட்ரோலின் விலை உயர்வாக இருப்பதற்கு காரணம், மத்திய அரசு தொடர்ந்து 4 முறை பெட்ரோல் மீதான கலால் வரியை உயர்த்தியதே முக்கிய காரணமாகும்.

விலை உயர்வு

விலை உயர்வு

பெட்ரோல் மீதான கலால் வரி அதிகரிக்கப்பட்டதால் லிட்டருக்கு ரூ. 7.75 அதிகரித்துள்ளது. இதன்மூலம் எப்போதும் இல்லாத வகையில் பெட்ரோலுக்கு ரூ.16.95 என்ற அதிகபட்ச கலால் வரி விதிக்கப்பட்டுள்ளது.

தொடர் உயர்வு

தொடர் உயர்வு

மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் 12-ம் தேதி கலால் வரியை ரூ.1.50, டிசம்பரில் 2-ம் தேதி ரூ. 2.25, ஜனவரி 2ம் தேதியும், 16-ம் தேதியும் வரியை ரூ. 2 ஆக தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.

வருவாய்

வருவாய்

பெட்ரோலிய அமைச்சம் அளித்த தகவலின் படி, கலால் வரி உயர்வு மூலம் அரசுக்கு ரூ. 94,164 கோடி அரசுக்கு வருவாய் கிடைத்தது என்று தெரிவிக்கின்றன. இந்த ஆண்டிலும் கலால்வரி அதிகரிப்பு மூலம் அரசுக்கு ரூ.18,000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விமான நிறுவனம்

விமான நிறுவனம்

இந்தியாவின் அனைத்து விமான நிறுவனங்களும் கடுமையான நிதிநெக்கடியில் பாதிக்கப்பட்டுள்ளது, இதில் ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட் போன்ற நிறுவனங்கள் அதிகளவில் பாதித்துள்ளது.

2,500 கோடி ரூபாய்

2,500 கோடி ரூபாய்

கச்சா எண்ணெயின் விலை 50 டாலருக்கும் குறைவான விலையை அடைந்துள்ளதால் விமான எரிபொருளின் விலை லீட்டர் 52.42 ரூபாய் என்ற அளவில் குறைந்துள்ளது. இதன் மூலம் இந்திய விமான நிறுவனங்கள் 2,500 கோடி ரூபாய் வரை பணத்தை சேமித்துள்ளது என ஏசியா பசிபிக் ஏவியேஷன் தெரிவித்துள்ளது.

குட்ரிட்டன்ஸ்

குட்ரிட்டன்ஸ்

இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Petrol Costs More Than Aviation Fuel in India

Perhaps for the first time, petrol in India costs more than the superior aviation turbine fuel (ATF) or jet fuel used in airplanes, as the government has levied a record excise duty on the fuel used in two-wheelers and cars.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X