கோயம்புத்தூர் நிறுவனத்தில் ரத்தன் டாடா முதலீடு!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: கோயம்புத்தூர் மாவட்டத்தில் சூலூர் பகுதியில் அமைந்துள்ள ஏம்பர் நிறுவனத்தில், ரத்தன் டாடா மிகப்பெரிய அளவில் முதலீடு செய்துள்ளார்.

 

ஆட்டோமொபைல் பொருட்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்குப் பெயர் போன கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஏம்பர், எலக்டிரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் ஒரு துவக்க நிறுவனமாகும். இந்த முதலீட்டுச் செய்தியின் மூலம் ஒட்டுமொத்த நிறுவனமும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளது.

ஹேமலதா அண்ணாமலை

ஹேமலதா அண்ணாமலை

இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிறுவனரான ஹேமலதா அண்ணாமலை கூறுகையில், இன்னும் நிறுவனம் செய்ய வேண்டிய பணிகள் அதிகம் உள்ளது எனத் தெரிவித்தார்.

2 வருட பணிகள்

2 வருட பணிகள்

கடந்த 2 வருட போராட்டத்தில், மகிழ்ச்சி அடையும் வகையில் தற்போது நிறுவனம் உள்ளது என ஹேமலதா கூறினார். இம்முதலீட்டை நிறுவனத்தில் பதிய திறமையுள்ள பணியாளர்கள் பெறவும், நிறுவன விரிவாக்க பணிகளுக்காகவும் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ரத்தன் டாடா

ரத்தன் டாடா

டாடா குழும நிறுவனங்களின் நிர்வாகப் பொறுப்புகளில் இருந்து விலகிய ரத்தன் டாடா, தற்போது தனது சொந்த முதலீட்டு நிறுவனத்தின் மூலம் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார்.

ஏம்பர் நிறுவனம்
 

ஏம்பர் நிறுவனம்

இந்நிறுவனம் அடுத்தத் தலைமுறை வாகன உற்பத்தியில் களமிறங்கியுள்ளது. உலகில் பேட்டரி மூலம் இயங்கும் கார் மற்றும் இரு சக்கர வாகன தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சியில் மிகப்பெரிய நிறுவனங்களும் ஈடுப்பட்டு வரும் நிலையில், ஏம்பர் நிறுவனத்திற்கு நிதியுதவி அளிப்பது ரத்தன் டாடாவின் சரியான முடிவே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Ratan Tata invests in Coimbatore electric vehicle start-up Ampere

The mood was upbeat at Ampere, an electric vehicle start-up in Coimbatore, as news that Ratan Tata, chairman emeritus of Tata Sons had made an undisclosed investment in this company.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X