கட்டண உயர்வால் கொள்ளை லாபம் பார்த்தது ஏர்டெல்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், டேட்டா மற்றும் வாய்ஸ் சேவைகளில் தனது கட்டணத்தை உயர்த்தியதால் ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த காலகட்டத்தில் இந்நிறுவனம் 40 சதவீத லாப உயர்வைச் சந்தித்தது.

 

ஏர்டெல் நிறுவனம் சந்தை கணிப்பிற்கும் அதிகமான லாபத்தைப் பெற்றுள்ளதால், இந்நிறுவன பங்குகள் புதன்கிழமை வர்த்தகத்தில் 3.35 சதவீதம் வரை உயர்ந்தது.

40% லாப உயர்வு

40% லாப உயர்வு

இக்காலகட்டத்தில் ஏர்டெல் நிறுவனம் ஆப்பிரிக்காவில் உள்ள தனது டவர் சேவைகளின் விற்பனை மூலம் அதிகளவிலான லாபத்தைப் பெற்று.

இதனால் இந்தியா மற்றும் பிற நாடுகளில் வாய்ஸ் சேவையில் ஏற்பட்ட வருவாய் சரிவு அதிகளவில் குறைக்கப்பட்டது.

ஸ்பெக்ட்ரம் மற்றும் சேவை வரி

ஸ்பெக்ட்ரம் மற்றும் சேவை வரி

சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ஏர்டெல் நிறுவனம் அதிகளவில் முதலீடு செய்தது, இதைத்தொடர்ந்து மத்திய அரசின் சேவை வரி உயர்வு ஆகிய காரணங்களால் இந்நிறுவனம் தனது டேட்டா மற்றும் வாய்ஸ் சேவைகளின் கட்டணத்தை அதிகளவில் உயர்த்தியதால் இந்நிறுவனத்தின் லாபம் 40% வரை உயர்ந்துள்ளது.

1,500 கோடி லபாம்
 

1,500 கோடி லபாம்

ஜூன் 30ஆம் தேதி முடிவடைந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் லாபம் 1,554 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த வருடம் இதேகாலகட்டத்தில் இதன் அளவு 1,108 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

வருவாய்

வருவாய்

அதேபோல் இக்காலகட்டத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் வருவாய் அளவு 3.1 சதவீதம் உயர்ந்து 23,671 கோடி ரூபாயாக உள்ளது.

டேட்டா சேவை மற்றும் வாய்ஸ் சேவை

டேட்டா சேவை மற்றும் வாய்ஸ் சேவை

கடந்த 3 மாத காலகட்டத்தைக் கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது, இந்நிறுவனத்தின் டேட்டா சேவை 83.4 சதவீதமும், மொபைல் நிமிடங்கள் 7.4 சதவீதமாகவும் உயர்ந்துள்ளதாக ஏர்டெல் நிறுவனத்தின் இந்தியா மற்றும் தென் ஆசிய பகுதியின் நிர்வாகத் தலைவர் மற்றும் சீஇஓ கோபால் விட்டல் தெரிவித்தார்.

வாடிக்கையாளர் எண்ணிக்கை

வாடிக்கையாளர் எண்ணிக்கை

மேலும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதாகக் கோபால் தெரிவித்தார்.

ஆப்பிரிக்காவில் ஏர்டெல்

ஆப்பிரிக்காவில் ஏர்டெல்

ஆப்பிரிக்கா சந்தை வர்த்தகம் குறித்து இப்பகுதி தலைவரஹ் கிரிஸ்டியன் டி ஃபாரியா கூறுகையில், முதல் காலாண்டில் வாடிக்கையாளர் எண்ணிக்கை 13.4 சதவீதம் உயர்ந்து 78.3 மில்லியனாக உள்ளது. மேலும் புதிய திட்டங்களின் மூலம் வாடிக்கையாளர் வெளியேற்றத்தை 7.0% இருந்து 5.4% ஆகக் குறைந்துள்ளது எனத் தெரிவித்தார்.

பங்குச்சந்தை

பங்குச்சந்தை

புதன்கிழமை வர்த்தகத்தில் ஏர்டெல் நிறுவன பங்குகள் துவக்கத்தில் 3.35 சதவீதம் வரை உயர்ந்தாலும், 11.45 மணியளவில் 1.55 சதவீதமாக உயர்ந்து 419.90 ரூபாய்க்கு இந்நிறுவன பங்குகள் விற்கப்படுகிறது.

வழக்கு

வழக்கு

ஏர்டெல் வேண்டாம் என ரிலையன்ஸ் நிறுவனத்தில் இணைந்த ஊழியர் மீது தகவல் திருட்டு வழக்கு!

ஏர்டெல்

ஏர்டெல்

ஏர்டெல் நிறுவனத்தை பற்றி பிற முக்கிய செய்திகளை தெரிந்துக்கொள்ள இதை கிளிக் செய்யவும்

சமுக வளைதள இணைப்புகள்

சமுக வளைதள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bharti Airtel gains as Q1 net profit jumps 40%

Shares of Bharti Airtel gained 3.35 per cent in trade on Wednesday, a day after the company beat Street expectations and posted a 40 per cent jump in net profit in the April-June quarter of the ongoing financial year.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X