'இன்போசிஸ்' நிறுவனத்தை விட இரண்டு மடங்கு அதிக லாபத்தில் 'டிசிஎஸ்'..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான டிசிஎஸ், 2015ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டில் 16 சதவீத லாப உயர்வைச் சந்தித்துள்ளது. ஆனால் கடந்த சில காலாண்டுகளின் லாப அளவுகளை ஒப்பிடுகையில் இதன் அளவுகள் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது.

 

டிசிஎஸ் நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனம் திங்கட்கிழமை தனது 2ஆம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. இக்காலகட்டத்தில் இன்போசிஸ் 8.8 சதவீதம் மட்டும் லாப உயர்வைச் சந்தித்துள்ளது.

மொத்த லாபம்

மொத்த லாபம்

ஜூலை -செப்சம்பர் மாத காலகட்டத்தில் டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த லாப அளவு 16 சதவீதம் உயர்ந்து 6,084.66 கோடியாக உள்ளது. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இதன் மதிப்பு 5,244.28 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வருவாய்

வருவாய்

நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டிசிஎஸ் 2015ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டில் சுமார் 27,867.90 கோடி ரூபாய் வருவாயாகப் பெற்றுள்ளது, கடந்த வருடம் அதன் அளவு 24,479.11 கோடி ரூபாயாகும்.

சந்திரசேகரன்..

சந்திரசேகரன்..

காலாண்டு முடிவுகள் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டிசிஎஸ் நிறுவனத்தின் சீஇஓ என்.சந்திரசேகரன் கூறுகையில், இந்தக் காலாண்டு நிறுவனத்திற்கு வெற்றிகரமாக அமைந்தது. எப்போதும் போலவே முதல் காலாண்டை விட 2வது காலாண்டில் அதிகளவிலான லாபத்தை இம்முறையும் பெற்றுள்ளோம் என அவர் தெரிவித்தார்.

டிஜிட்டல் வருவாய்
 

டிஜிட்டல் வருவாய்

டிசிஎஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் வருவாய் 2வது காலாண்டில் 13.3 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த காலாண்டில் இதன் அளவு 12.5 சதவீதமாகும்.

ஈவுத்தொகை..

ஈவுத்தொகை..

இந்நிறுவன முதலீட்டாளர்களுக்கு டிசிஎஸ் நிறுவனம் ஈவுத்தொகையாக ஒரு பங்கிற்கு 5.50 ரூபாய் அளிக்கிறது.

ஆனால் இன்போசிஸ் நிறுவனம் 10 ரூபாய் அளித்தது குறிப்பிடத்தக்கது.

பணியாளர்கள் நியமனம்

பணியாளர்கள் நியமனம்

நடப்பு நிதியாண்டில் டிசிஎஸ் நிர்வாகம் 75,000 புதிய பணியாளர்களை நியமனம் செய்யத் திட்டமிட்டுள்ளது. கடந்த வருடம் இதன் அளவு 60,000 ஆக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

சந்தைக் கணிப்புகள்

சந்தைக் கணிப்புகள்

சந்தைக் கணிப்புகளைத் தவறவிட்டது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்.. என்ன காரணம்..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TCS Q2 net profit rises 16% on strong volume growth

IT bellwether Tata Consultancy Services (TCS) posted a 16 per cent rise in net profit in the second quarter, riding on strong volume growth and rising revenues from digital services.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X