இந்தியாவை விட அமெரிக்க நிறுவனங்களில் மனஅழுத்தம் குறைவு.. இது டாலர் சம்பளக்காரர்களின் கருத்து..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன்: இந்திய நிறுவனங்களை ஒப்பிடுகையில் அமெரிக்க நிறுவனங்களில் மன அழுத்தும் மற்றும் டென்ஷன் மிகவும் குறைவு என அந்நாட்டு நிறுவனங்களின் பணியாற்றும் இந்திய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

 

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் என்ஆர்ஐகளுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.

டிரான்ஸ்பாஸ்ட்

டிரான்ஸ்பாஸ்ட்

சர்வதேச நிதி பரிமாற்ற சேவை நிறுவனமான டிரான்ஸ்பாஸ்ட் நிறுவனம் அமெரிக்க டாலர்களின் சம்பளம் பெறும் 500க்கும் மேற்பட்ட இந்தியர்களிடம் ஒரு முக்கிய ஆய்வை நடத்தியது.

இதில் இந்திய நிறுவனங்களில் தங்களின் தகுதிக்கு ஏற்ற வேலையும் ஊதியமும் கிடைப்பது இல்லை, அதுமட்டும் அல்லாமல் அமெரிக்க நிறுவனங்களில் மன அழுத்தம் மிகவும் குறைவு எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

சமீஷ் குமார்

சமீஷ் குமார்

அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்களின் மூலம் அமெரிக்கா பொருளாதாரம் மட்டும் அல்லாமல் டாலர் பரிமாற்றத்தின் மூலம் இந்தியாவின் ஜிடிபி-யிலும் சிறிய அளவிலான தாக்கம் ஏற்படுகிறது என டிரான்ஸ்பாஸ்ட் நிறுவனத்தின் தலைவர் சமீஷ் குமார் தெரிவித்தார்.

மன அழுத்தம்
 

மன அழுத்தம்

மேலும் இந்த ஆய்வில் அமெரிக்காவில் பணியாற்றும் 83 சதவீதம் பேர் தங்களது பணிக்கு தேவையானதை விடவும் அதிகளவிலான திறன்களை வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதுமட்டும் அல்லாமல் 62 சதவீதம் பேர் இந்திய நிறுவனங்களை விடவும் அமெரிக்க நிறுவனங்களில் மனஅழுத்தம் மிகவும் குறைவாக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

 

வருமானம்

வருமானம்

ஆய்வு மேற்கொண்ட 500 பேர்களில் 64 சதவீதம் பேர் தங்கள் நினைத்த சம்பாதிக்க முடிகிறது என்றும், 61 சதவீதம் பேர் தங்கள் வருமானத்திற்கு அதிகமாக உழைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

40 மணிநேர வேலைநேரம்..

40 மணிநேர வேலைநேரம்..

மேலும் 60 சதவீதம் பேர் வாரத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமாகத் தங்கள் வேலை செய்வதாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.

வளர்ச்சி

வளர்ச்சி

கடைசியாக இந்த ஆய்வில் கலந்துகொண்ட 83 சதவீதம் பேர் அமெரிக்க நிறுவனங்களில் தங்களின் வளர்ச்சிக்காக ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக்கிடப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indians working in US find their job less stressful: Survey

A majority of Indians who live in the US and send money home say they are overqualified for their jobs here and find their US workplace to be less stressful than workplaces in India, a survey has revealed.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X