பருத்தி உற்பத்தியில் சீனாவை ஓரம்கட்டி முதல் இடத்தைப் பிடித்தது இந்தியா..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோயம்புத்தூர்: 2015-16ஆம் நிதியாண்டில் உள்நாட்டு வர்த்தகச் சந்தையில் பருத்தி உற்பத்தியின் அளவு சுமார் 400 லட்சம் பேல் ஆக உயர்ந்து, உலக நாடுகளில் அதிகளவில் பருத்தி உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உயர்ந்துள்ளது.

 

இக்காலகட்டத்தில் இந்தியாவைத் தவிர உலகின் அனைத்து நாடுகளிலும் பருவநிலை மாற்றம் எனப் பல்வேறு காரணங்களால் பருத்து உற்பத்தி குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சீனா

சீனா

கடந்த வருடம் பருத்தி உற்பத்தியில் முதல் இடத்தைப் பிடித்திருந்த சீனா, 2015-16ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் உற்பத்தி குறைந்து 2ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டு முதல் இடத்தை இந்தியா பிடித்துள்ளதாகத் தென் இந்தியா ஸ்பின்னர்ஸ் அமைப்பான SIMA தெரிவித்துள்ளது.

பருத்தி உற்பத்தி

பருத்தி உற்பத்தி

நடப்பு நிதியாண்டின் பருவநிலை மற்றும் வர்த்தகப் பிரச்சனைகள் காரணமாக உலக நாடுகளின் மொத்த பருத்தி உற்பத்தி அளவுகள் சுமார் 23.68 மில்லியன் டன்னாக இருக்கும் என அமெரிக்காவின் விவசாயத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் இதன் அளவு 25.90 மில்லியன் டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

ஏற்றுமதி
 

ஏற்றுமதி

உலக நாடுகளை ஒப்பிடுகளையில் இந்தியாவில் பருத்தி உற்பத்தி அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வர்த்தகப் பற்றாக்குறையில் சாதகமான நிலை உருவாகவும் வாய்ப்புகள் உள்ளதாகச் சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

11.26 மில்லியன் ஹெக்டர்

11.26 மில்லியன் ஹெக்டர்

2015-16ஆம் நிதியாண்டில் இந்தியாவில் சுமார் 11.26 மில்லியன் ஹெக்டர் அளவிற்குப் பருத்தி உற்பத்தி செய்யப்பட்டு இருந்ததாகவும், இதன் மூலம் 370 லட்சம் பேல் பருத்தி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க விவசாயத் துறை புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India to emerge as largest cotton producer

With domestic trade estimating cotton production at around 400 lakh bales, India is expected to emerge as the largest cotton producer in the world in 2015-16.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X