பெங்களூரு: 2016ஆம் ஆண்டின் 1.1 டிரில்லியன் செலவின அறிக்கையை வடிவமைக்கும் பணியில் ஈட்டுப்பட்டுள்ள அமெரிக்க அரசு, 40 ஆண்டுகளாக விதிக்கப்பட்டு இருந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி தடையை நீக்கியுள்ளது.
இதனால் அமெரிக்கா, ஈரான் நாடுகளில் இருந்து வர்த்தகம் மற்றும் ஏற்றுமதிக்காகச் சந்தையில் புதிதாகக் கச்சா எண்ணெய் குவிந்து வருகிறது.
இதன் காரணமாகப் பிரென்ட் கச்சா எண்ணெய்யின் விலை சர்வதேச சந்தையில் 11 வருடச் சரிவை அடைந்துள்ளது.
36.32 டாலர்
சர்வதேச சந்தையில் திங்கட்கிழமை வர்த்தகம் துவங்கிய சில நொடிகளில் பிரென்ட் கச்சா எண்ணெய்யின் விலை 2004ஆம் ஆண்டு வர்த்தகத்திற்கு நிகரான விலையில் ஆதாவது 36.32 அமெரிக்க டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டது.
அமெரிக்கச் சந்தை
இதன் எதிரொலியால் அமெரிக்க ஃப்யூச்சர் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை 20 சென்ட்கள் குறைந்து பீப்பாய்க்கு 34.53 டாலராகக் குறைந்துள்ளது.
40 ஆண்டுக் காலத் தடை..
அமெரிக்க அரசு தனது 40 ஆண்டுக் காலத் தடையை நீக்கியதன் மூலம் சந்தையில் முக்கிய ஏற்றுமதியாளர்களான ரஷ்யா, OPEC நாடுகளுக்கு இணையாக அமெரிக்கா உயரத் துடித்து வருகிறது.
ஏற்கனவே அளவிற்கு அதிகமாக இருக்கும் கச்சா எண்ணெய் இருப்பில் அமெரிக்காவின் கூடுதல் இருப்பு நிலைகள் இச்சந்தையை முழுவதுமாகப் பாதிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் உற்பத்தி
தற்போதைய நிலையில் ரஷ்யா ஒரு நாளில் 10 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து வருகிறது. அதேபோல் OPEC நாடுகளும் தனது உற்பத்தி அளவுகளைக் குறைக்க முடியாது என்று ஒரு நாளைக்கு 31.5 பில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து சந்தையைச் சரிவு பாதைக்குத் தள்ளி வருகிறது.
தெஹ்ரான்
2016ஆம் ஆண்டில் உலக நாடுகள் தெஹ்ரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையை நீக்க உள்ளதால், ஈரான் கூடிய விரைவில் தனது கச்சா எண்ணெய் உற்பத்தியை முழுவீச்சில் செயல்படுத்த உள்ளது.
யூரேனியம்
இந்நிலையில் பொருளாதாரத் தடை நீக்கப்படுவதால் தெஹ்ரான் அடுத்தச் சில மாதங்களில் தனது யூரேனியம் தாதுப்பொருட்களை ரஷ்யாவிற்கு அளிக்கத் துவங்க உள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications