ரூ. 1000 கோடி வருவாய் பெறும் திட்டத்தில் காளிமார்க், போவன்டோ நிறுவனம்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: தமிழ்நாட்டில் 100 ஆண்டுகளுக்கும் அதிகமாகச் சிறப்பாக இயங்கி வரும் காளி ஏரேட்டெட் வாட்டர் வொர்க்ஸ் நிறுவனத்தின் குளிர்பான பிராண்டுகள் தான் காளிமார்க் மற்றும் போவன்டோ.

இந்த நிறுவனம் அடுத்த 6 வருடத்தில் அதாவது 2020ஆம் ஆண்டின் இறுதிக்குள் 1,000 கோடி ரூபாய் அளவிலான வர்த்தகத்தை எட்ட மிகப்பெரிய திட்டத்தை வகுத்துள்ளது.

2020ஆம் ஆண்டு

2020ஆம் ஆண்டு

இந்த 6 ஆண்டுகளுக்குள் காளிமார்க் நிறுவனம் புதிய தொழிற்சாலைகளை அமைக்கவும், புதிய முதலீட்டாளர்களைக் கவரவும், மேலும் வர்த்தக விரிவாக்கத்திற்காகப் பல புதிய குளிர்பானங்களைச் சர்வதேச தரத்திற்கு இணையாகக் காளிமார்க் நிறுவனம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

புதிய தொழிற்சாலை

புதிய தொழிற்சாலை

தற்போது ஆந்திர மாநில ஸ்ரீசிட்டி-க்கு அருகில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தொழிற்சாலையை அமைக்கப்பட்ட உற்பத்தியைத் துவங்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளது காளிமார்க் நிர்வாகம்.

தமிழ்நாடு

தமிழ்நாடு

அடுத்த 6 ஆண்டுகளில் தென் தமிழக நிறுவனமாகத் திகழும் இந்தக் காளிமார்க் நிறுவனம் தமிழ்நாட்டு நிறுவனமாக உருமாற வேண்டும் என்பதே எங்களது முக்கியக் குறிக்கோள் என இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.பி.ஆர்.தனுஷ்கோடி தெரிவித்துள்ளார்.

தற்போது இந்நிறுவனம் ஆண்டுக்கு 150 கோடி ரூபாய் வருவாயைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

 

100 ஆண்டுகள்

100 ஆண்டுகள்

1916-ம் ஆண்டு விருதுநகரில் உள்ள விருதுபட்டி கிராமத்தில் தொடங்கப்பட்ட இந்தக் காளிமார்க் நிறுவனம் தற்போது நூற்றாண்டு விழா கொண்டாடி வருகிறது.

இந்நிலையில் காளிமாரக் நிறுவனம் இக்குடும்பத்தின் நான்காம் தலைமுறையினர் இந்நிறுவனத் தயாரிப்புகளைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குப் போட்டியாக நடத்தி வருகின்றனர்.

நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விப்ரோ (VIBRO) என்ற பெயரிலான பன்னீர் சோடாவை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

 

 

வென்டிங் மெஷின்

வென்டிங் மெஷின்

மேலும் கல்லூரி வளாகங்கள் மற்றும் விற்பனை வளாகங்களில் தானியங்கி இயந்திரங்களை நிறுவும் திட்டமும் உள்ளதாகத் தனுஷ்கோடி தெரிவித்தார்.

ஸ்நாக்ஸ்

ஸ்நாக்ஸ்

2018-ம் ஆண்டில் லேஸ், குர்கூரே போன்ற உடனடி ஸ்நாக்ஸ் தயாரிப்பில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளதாக்க இந்நிறுவனம் தலைவர்கள் தெரிவித்தார்கள்.

ஏற்றுமதி

ஏற்றுமதி

அடுத்தச் சில வருடங்களில் தென் இந்தியா மட்டும் அல்லாது வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்காகக் கேன்களில் குளிர்பானங்களைத் தயாரிக்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

‘Bovonto’ owner chalks out plan for Rs.1,000 cr revenue

Kalimark and Bovonto, has chalked out a six-year plan to clock a turnover of Rs.1,000 crore by 2020, according to a top company official.
Story first published: Wednesday, February 24, 2016, 11:38 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X