மும்பை: டாடா குழுமத்தின் முக்கிய வர்த்தகப் பரிவான டாடா ஸ்கை நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிட இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் பொதுப்பங்கு வெளியிடும் (ஐபிஓ) பணியை டாடா குழுமத்தின் தலைவரான சைரஸ் மிஸ்திரி தொடங்கியுள்ளார்.
இந்திய பங்குச்சந்தையில் டாடா ஸ்கை நிறுவனத்தைப் பட்டியலிடுவதன் மூலம் 2,000 கோடி ரூபாய் நிதி திரட்ட டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனமான டாடா குழுமத்தில் இருந்து 10 ஆண்டுகளுக்குப் பின் வெளியிடப்படும் ஐபிஓ இது.
கடந்த 2004-ம் ஆண்டு டிசிஎஸ் நிறுவனத்தின் ஐபிஓ வெளியானது. அதன் பிறகு டாடா குழுமத்தில் இருந்து எந்த ஐபிஓவும் வெளியாகவில்லை.
டாடா ஸ்கை நிறுவனம் அரசு தரப்பு மற்றும் செபி அமைப்பிடம் முழுமையான ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் டாடா குழுமத்தில் இருந்து பட்டியலிடப்படும் 30-வது நிறுவனமாகும்.