விசா பிரச்சனை: சப்-கான்டிராக்டர்களை நம்பி வர்த்தகம் செய்யும் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் 160 பில்லியன் டாலர் தகவல் தொழில்நுட்ப துறை, தனது முக்கிய வர்த்தகச் சந்தையாக விளங்கும் அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது.

இந்நிலையைப் பிரச்சனைகளைச் சமாளிக்க நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களான இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ் வர்த்தகத்தை எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் நடத்த எப்போதும் இல்லாத வகையில் தற்போது சப்-கான்டிராக்டர்களை நம்பிச் செயல்படுகிறது.

விசா பிரச்சனை

விசா பிரச்சனை

அமெரிக்காவில் பணிபுரிவதற்காக வழங்கப்படும் விசாவிற்கான கட்டணம் அதிகரிப்பு, அதிகளவிலான விசா நிராகரிப்பு மற்றும் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு எதிராகச் செயல்படும் அமெரிக்க அரசுகள் எனக் கடுமையான சூழ்நிலையில் ஐடி நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தைச் செய்து வருகிறது.

சப்-கான்டிராக்டர்

சப்-கான்டிராக்டர்

மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலத்தில் இன்போசிஸ், விப்ரோ மற்றும் டிசிஎஸ், தங்களது வாடிக்கையாளர்களின் கணிசமான பிராஜெக்ட்களைச் சப்-கான்டிராக்டர் அதாவது சிறு நிறுவனங்களுக்குக் கைமாற்றியுள்ளது.

செலவுகள் அதிகரிப்பு

செலவுகள் அதிகரிப்பு

சப்-கான்டிராக்டர் கைமாற்றியுள்ள திட்டங்கள் அனைத்தும் ஆன்சைட் அதாவது வாடிக்கையாளர் இடத்தில் (அமெரிக்கா) செய்யப்பட்டுள்ளதால் இந்திய ஐடி நிறுவனங்கள் அதிகளவிலான செலவுகள் செய்யப்பட்டுள்ளதாக இந்நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக இந்திய ஐடி நிறுவனங்களுக்கு அமெரிக்கா நிறுவனங்கள் தான் அதிகளவிலான வாடிக்கையாளராக உள்ளது.

 

டிசிஎஸ்

டிசிஎஸ்

மார்ச் 2016ஆம ஆண்டின் முடிவில் சப்-கான்டிராக்டர்களுக்குக் கைமாற்றியுள்ள திட்டங்களுக்குச் செய்யப்பட்டுள்ள செலவுகள் 6,116 கோடியில் இருந்து 7,823 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என டிசிஎஸ் தெரிவித்துள்ளது.

சப்-கான்டிராக்டர்களுக்குத் திட்டங்கள் அதிகளவில் கைமாற்றியுள்ளதால் டிசிஎஸ் நிறுவனத்தின் வருவாய் அளவு 6.46 சதவீதத்தில் இருந்து 7.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.

 

இன்போசிஸ் மற்றும் விப்ரோ

இன்போசிஸ் மற்றும் விப்ரோ

அதேபோல் இன்போசிஸ் நிறுவனத்தின் செலவு 2,909 கோடியில் இருந்து 4,417 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. விப்ரோ நிறுவனத்தின் செலவு 5,208 கோடி ரூபாயில் இருந்து 6,486 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

எதற்குச் சப்-கான்டிராக்டர்..?

எதற்குச் சப்-கான்டிராக்டர்..?

பொதுவாக ஐடி நிறுவனங்கள் அதிகளவிலான தற்காலிக விசா மற்றும் உள்நாட்டுப் பணியாளர்களைப் பணியில் அமர்த்துதல், லாப அளவுகளை அதிகரிக்கும் பட்சத்தில் சப்-கான்டிராக்டர்களின் தேவையும் அவசியமும் வரும்.

இங்குக் கதையே வேறு

இங்குக் கதையே வேறு

ஆனால் இப்போது விசா கட்டணங்களின் உயர்வும், அதிகளவில் விசா நிராகரிக்கப்படுவதாலும், ஐடி நிறுவனங்கள் சந்தித்து வரும் சப்-கான்டிராக்டர்களை நெருக்கடிகளின் காரணமாகச் சப்-கான்டிராக்டர் நம்பி வர்த்தகம் செய்யத் துவங்கியுள்ளது இந்திய ஐடி நிறுவனங்கள்.

அமெரிக்கச் சந்தை

அமெரிக்கச் சந்தை


இத்துறையின் முக்கியத் தலைவர்கள் கூறுகையில், அமெரிக்கா போன்ற நாடுகளின் ஐடித் துறைக்குத் தேவையான திறன்மிக்க ஊழியர்கள் கிடைப்பது மிகவும் கஷ்டமாக உள்ளதால், செலவுகள் அதிகரித்தாலும் வேறு வழியில்லாமல் சப்-கான்டிராக்டர்களை நம்பிச் செயல்பட்டு வருகிறது இந்திய ஐடி நிறுவனங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IT firms like Infosys, Wipro rely on external subcontractors more than ever before

Amid rising onsite wages, high visa rejection rates and a politically-charged environment in the US, where a debate on outsourcing is waging, India's IT firms including Infosys, Wipro and TCS are relying on external subcontractors more than ever before.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X