கார் விற்பனை 5.18% குறைவு.. இரு சக்கர வாகன விற்பனை 12.26% உயர்வு..

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2015 ஆம் வருட ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் போது 2016 ஆம் வருடத்தில் கார் விற்பனை 5.18% குறைந்துள்ளது என்று இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கார் விற்பனை 5.18% குறைவு.. இரு சக்கர வாகன விற்பனை 12.26% உயர்வு..

உள்நாட்டுப் பயணிகள் வாகன விற்பனை கடந்த வருட ஜூன் மாதத்தை விட 2016-இல் 2.68% உயர்ந்துள்ளது. கடந்த வருட ஜூன் மாதம் 2,17,620 உள்நாட்டுப் பயணிகள் வகனங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் நடப்பு ஆண்டு ஜூன் மாதம் 2,23,454 உள்நாட்டுப் பயணிகள் வாகனங்களை விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மோட்டார் சைக்கிள் விற்பனை சென்ற வருட ஜூன் மாதத்தை ஒப்பிடும் போது 7.52 % உயர்ந்துள்ளது. கடந்த வருடம் 8,77,690 மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டன, இந்த வருடம் 9,43,680 மோட்டார் சைக்கிள்கள் விற்பானை செய்யப்பட்டுள்ளன.

இரண்டு சக்கர வாகனம் விற்பனை சென்ற வருட ஜூன் மாதத்தை விட 12.26% உயர்ந்துள்ளது. கடந்த வருடம் 13,07,704 இரண்டு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த வருடம் 14,68,035 இரண்டு சக்கர வாகனங்கள் விற்பானை செய்யப்பட்டுள்ளன.

கார் விற்பனை சென்ற வருட ஜூன் மாதத்தை விட 5.18% குறைந்துள்ளதாகவும், 1,62,655 கார்கள் கடந்த வருடம் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த வருடம் 1,54,237 கார்களாக விற்பனை குறைந்துள்ளதாகவும் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மேலும், வர்த்தக வாகனங்கள் விற்பனை, கடந்த வருடம் 56,032 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும், இந்த வருடம் அதிலிருந்து 5.36% உயர்ந்துள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Car Sales Down 5.18%, Two wheeler Up 12.26% In June

car sales were down 5.18 per cent to 1,54,237 units as against 1,62,655 units in June last year, according to data released.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X