மும்பை: ஏற்கனவே வாடிக்கையாளர் இழப்பு, ஆட்டோமேஷன் என பல்வேறு காரணங்களாக அதிகளவிலான வேலைவாய்ப்புகளை இழந்து தொடர்ந்து வர்த்தக சரிவை சந்தித்து வருகி இந்திய ஐடி நிறுவனங்கள்.
இந்நிலையில் இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் மூலம் இந்திய ஐடி நிறுவனங்களின் சேவை பிரிவுகளில் அடுத்த 5 வருடத்தில் சுமார் 1 லட்சம் வரையிலான வேலைவாய்ப்புகளை இழக்க நேரிடும் என கன்சல்டிங் ஆய்வு நிறுவனமான Zinnov கூறியுள்ளது.
இதனால் ஒட்டுமொத்த ஐடி சந்தையும் தற்போது ஆடிப்போய்யுள்ளது.

ஆட்டோமேஷன்
ஆட்டோமேஷன் மூலம் உலகத்தில் அனைத்து ஐடி நிறுவனங்களுக்கும் பாதிக்கப்பட்டு வருகிறது உண்மை தான். ஆனால் இந்த பாதிப்பு இந்தியாவிற்கு அதிகம்.
காரணம் இந்தியாவில் தான் பெரும் பகுதி மக்கள் ஐடி நிறுவனங்களிலும், இதனை சார்ந்துள்ள நிறுவனங்களிலும் பணிபுரிந்து வருகின்றனர். எனவே இதன் பாதிப்பும் அதிகமாக தான் இருக்கும்.

1,20,000 வேலைவாய்ப்புகள்
ஆட்டோமேஷன் மூலம் ஐடித்துறையில் அன்-ஸ்கில்டு மற்றும் ப்ளு காலர் வேலைவாய்ப்புகள் அதிகளவில் குறையும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.
சர்வதேச சந்தையில் முக்கிய தொழில்நுட்பமாக பார்க்கப்படும் இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் மூலம் இந்தியாவில் 1,20,000 வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் என் கன்சல்டிங் ஆய்வு நிறுவனமான Zinnov செய்த முக்கிய ஆய்வில் இத்தகவல் கிடைத்துள்ளது.

2021ஆம் ஆண்டு
அடுத்த 5 வருடத்தில் இந்திய ஐடி சந்தையில் IoT என சுருக்கமாக அழைக்கப்படும் இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் தொழில்நுட்பத்தின் மூலம் 25,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டாலும், 1,20,000 வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுகிறது.
இதன் மூலம் இந்திய மக்களும் அரசும் அதிகளவில் நம்பிக்கை வைத்துள்ள ஐடித்துறையில் 2021ஆம் ஆண்டுக்குள் சுமார் 94,000 வேலைவாய்ப்புகள் இழப்பு ஏற்படும் என Zinnov நிறுவனத்தின் உயர் தலைவர் ஹர்திக் திவாரி ஆய்வுக்குறித்து கூறினார்.

இண்டர்நெட் ஆஃப் திங்ஸ்
இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் பெரிய மிஷன்களில் சில சென்ஸார் மற்றும் சிப்-களை பொருத்துவதன் மூலம் அனைத்து செயல்பாடுகளையும் நாம் இண்டர்நெட் வாயிலாக எளிமையாக இயக்கவும் கண்காணிக்கவும் முடியும்.
இதனால் ஐடி நிறுவனங்களில் ஸ்ப்போர்ட் பரிவு, மேலாண்மை, மேற்பார்வை பிரிவுகளில் இருக்கும் ஊழியர்களுக்கு அதிகளவிலான பாதிப்பு உருவாகும்.

Hfs ஆய்வு
இதேபோல Hfs நிறுவனம் செய்த ஆய்வில் அடுத்த 5 வருடத்தில் ஆட்டோமேஷன் மற்றும் பிற முக்கிய காரணங்களாக 6.4 லட்ச வேலைவாய்ப்புகள் இழக்க நேரிடும் என தெரிவித்துள்ளது.

40 சதவீதம்
தற்போத நிலையில் இந்திய ஐடி நிறுவனங்கள் 40 சதவீதம் வர்த்தகம் இண்டர்நெட் ஆஃப் திக்ஸ் தொழில்நுட்பத்தை சார்ந்துள்ளது.

வளர்ச்சி
வேலைவாய்ப்புகள் குறைந்தாலும், 1.6 பில்லியன் டாலர் வர்த்தக சந்தை கொண்ட loT, அடுத்த 5 வருடத்தில் 3.8 பில்லியன் டாலர் வரை உயர வாய்ப்புகள் உள்ளதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.

முக்கிய நிறுவனங்கள்
இந்திய சந்தையில் பேஸ்புக், கூகிள் போன்ற பெரு நிறுவனங்கள் முதல் இன்போசிஸ், விப்ரோ, எச்சிஎல் உட்பட முக்கிய நிறுவனங்கள் அனைத்தும் loT தொழில்நுட்பத்தில் அதிகளவிலான கவனத்தை செலுத்தி வருகிறது.
கல்வி தகுதி
தென்னிந்திய நிதியமைச்சர்களின் கல்வி தகுதி இதுதான்..!

கத்தி 'விஜய்'
கத்தி விஜயாக மாறியது 'பதஞ்சலி'.. ஒன்று சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனங்கள்..!