தூள் தூளாக உடையும் இன்போசிஸ்.. விஷால் சிக்கா மாஸ்டர் பிளான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: இந்தியாவில் டிசிஎஸ் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய நிறுவனமாக இருப்பது இன்போசிஸ். ஆனால் இரு நிறுவனங்கள் மத்தியிலான வர்த்தக வித்தியாசம் மிகவும் அதிகம் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

 

இந்த வித்தியாசத்தைக் குறைக்கும் முயற்சியாக விஷால் சிக்கா தலைமையிலான இன்போசிஸ் 15 தனித்தனி நிறுவனமாக உடைய உள்ளது.

 இன்போசிஸ்

இன்போசிஸ்

இந்திய ஐடி வர்த்தகச் சந்தையில் மிகப்பெரிய நிறுவனமாக இருக்கும் இன்போசிஸ், அடுத்த நிலைக்குச் செல்ல திட்டமிட்டு ஓரே நிறுவனமாக இருக்கும் இந்நிறுவனம் சுமார் 12-15 தனித்தனி நிறுவனங்களாக உடைக்கத் திட்டமிட்டுள்ளார் இந்நிறுவனத்தின் சீஇஓ விஷால் சிக்கா.

தனித்தனி டார்கெட்

தனித்தனி டார்கெட்

உடைக்கப்படும் தனித்தனி நிறுவனங்களுக்கு 500-700 மில்லியன் டாலர் வர்த்தக இலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தாண்டி ஒவ்வொரு நிறுவனங்களுக்குத் தனி விற்பனை பிரிவு தலைவர்கள், லாப மற்றும் நஷ்ட இலக்கு எனப் பிரிக்கப்பட்டுள்ளது.

4 பிரிவுகள்
 

4 பிரிவுகள்

தற்போது இன்போசிஸ் நிறுவனம் BFSI (3 பில்லியன் டாலர் வருவாய்), ரிடைல் மற்றும் லைப் சையின்ஸ் (2.3 பில்லியன் டாலர் வருவாய்), உற்பத்தி மற்றும் ஹை-டெக் ( 2.2 பில்லியன் டாலர் வருவாய்), எனர்ஜி மற்றும் யுடிலிட்டி, கம்யூனிகேஷன்ஸ் மற்றும் சேவைகள் (1.9 பில்லியன் டாலர் வருவாய்) என 4 பிரிவுகளாக உள்ளது.

இப்பிரிவுகள் தற்போது 12-15 தனித்தனி பிரிவுகளாகப் பரிக்கப்பட உள்ளது.

தலைவர்கள்

தலைவர்கள்

இன்போசிஸ் நிறுவனத்தில் தற்போது இருக்கும் 4 தனிப் பிரிவுகள் சன்தீப் டட்லானி, மோஹித் ஜோஷி, ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ரவி குமார் ஆகியோ தலைமையின் கீழ் இயங்கி வருகிறது.

பிரிவிற்குப் பின்னர், இவர்கள் கீழ் சில தனிப் பிரிவுகள் இருக்கும். யாருக்கு எந்தெந்த எத்தனை பிரிவுகள் தலைமை வகுப்பார்கள் என அக்டோபர் மாதத்திற்குள் இன்போசிஸ் நிர்வாகம் முடிவு செய்யும்.

விஷால் சிக்கா

விஷால் சிக்கா

இத்தகைய பிரிவு மூலம் இன்போசிஸ் சந்தையில் மிகப்பெரிய இடத்தை அடைவது மட்டும் அல்லாமல் வாடிக்கையாளர் மேலாண்மையில் இன்போசிஸ் மேம்படும் என விஷால் சிக்கா புனேயில் நடந்த கூட்டத்தில் தெரிவித்தார்.

ஊழியர்கள்

ஊழியர்கள்

இன்போசிஸ் நிறுவனத்தில் இந்தப் பிரிவினால் இந்நிறுவன ஊழியர்களுக்கு எவ்விதமான பாதிப்பும் இல்லை.

'பலே' திட்டம்..!

'பலே' திட்டம்..!

விஷால் சிக்காவின் 'பலே' திட்டம்..!

rn

யுபிஐ செயலி

யுபிஐ செயலி-ஐ பயன்படுத்துவது எப்படி..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys splits into 15 smaller units: vishal sikka master plan

Indian IT giant Infosys splits into 15 smaller units with 500-700 million dollar business targets: CEO vishal sikka's master plan
Story first published: Thursday, September 8, 2016, 16:51 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X