அமெரிக்க நிறுவனங்களின் திடீர் முடிவால் டிசிஎஸ், இன்போசிஸ்-க்கு ரூ.40,000 கோடி இழப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான 'டிசிஎஸ்' மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் துவங்கி 2 மணிநேரத்தில் 6 சதவீதம் சரிந்து 6 மாத சரிவை அடைந்து, முதலீட்டாளர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

 

இதன் எதிரொலியாக இந்திய சந்தையின் டாப் 5 ஐடி நிறுவனங்கள் சுமார் 40,000 கோடி ரூபாயை இழந்துள்ளது. இந்தப் பெரும் இழப்பில் டிசிஎஸ் நிறுவனத்திற்குத் தான் அதிகளவிலான மதிப்பு..!

எல்லாவற்றுக்கும் அமெரிக்க நிறுவனங்கள் எடுத்த ஒரே முடிவுதான் காரணமாக அமைந்துள்ளது. என்ன முடிவு..?

டிசிஎஸ்

டிசிஎஸ்

இந்திய பங்குச்சந்தையில் அதிகச் சந்தை முதலீட்டு கொண்டுள்ள நிறுவனங்களில் டிசிஎஸ் முதலிடம், அதுமட்டும் அல்லாமல் டாடா குழுமத்தின் 55 சதவீத வருவாய் மற்றும் லாபத்தைத் தனது மென்பொருள் வர்த்தகத்தின் வாயிலான பெறுகிறது. அதாவது டிசிஎஸ் நிறுவனத்தின் வாயிலாகப் பெறுகிறது.

இத்தகைய சூழ்நிலையில் தான் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

அறிவிப்பு..

அறிவிப்பு..

அமெரிக்கச் சந்தையில் வங்கி, நிதியியல் மற்றும் இன்சூரன்ஸ் சேவை பிரிவில் இருக்கும் நிறுவனங்கள் தொழில்நுட்ப சேவைகளுக்காகச் செலவிடும் தொகையைத் தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளது.

இதனால் அடுத்தச் சில மாதங்களுக்கு டிசிஎஸ் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் வர்த்தகத்தில் பாதிப்புண்டாகும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சரிவு..
 

சரிவு..

அமெரிக்க நிறுவனங்களின் இந்த அறிவிப்பின் காரணமாகப் பங்குச்சந்தையில் எப்போதும் இல்லாத அளவிற்குச் சுமார் 6 சதவீதம் வரை சரிந்துள்ளது.

டொனால்டு டிரம்ப் தான் காரணமாம்.. கடைசி வரை படியுங்கள். விடை தெரியும்.

BFSI பிரிவு

BFSI பிரிவு

அமெரிக்கச் சந்தையின் மூலம் இந்தியா ஐடி நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெறுவது வங்கி, நிதியியல் மற்றும் இன்சூரன்ஸ் சேவை (BFSI) பிரிவின் வாயிலாகத் தான்.

அதிலும் டிசிஎஸ் நிறுவனம் மிகவும் அதிகளவிலான அமெரிக்க நிறுவனங்கள், மாநில அரசுகளுக்கான வரி வசூல், நிதி பரிமாற்ற சேவைகளை வழங்கி வருகிறது. இதன் காரணமாகவே வளர்ச்சியில் பாதிப்புண்டாகும் என டிசிஎஸ் அறிவித்துள்ளது.

பிற ஐடி நிறுவனங்கள்

பிற ஐடி நிறுவனங்கள்

டிசிஎஸ் நிறுவனத்தைப் போல் BFSI பிரிவில் அதிகளவிலான வர்த்தகத்தைக் கொண்டுள்ளது இன்போசிஸ். இதற்கு அடுத்து விப்ரோ, எச்சிஎல் டெக்னாலஜிஸ், டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் டாப் 5 பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

கோவிந்தா கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா

நேற்றை வர்த்தக முடிவில் 4,82,164 கோடி ரூபாயாக இருந்த டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை முதலீட்டு அளவுகள் வியாழக்கிழமை வர்த்தகத்தில் 6.53 சதவீதம் அளவில் சரிந்து தற்போது 4,56,854 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.

2 மணிநேரத்தில் 25,310 கோடி ரூபாய் இழப்பு..

இன்போசிஸ் முதல் டெக் மஹிந்திரா வரை

இன்போசிஸ் முதல் டெக் மஹிந்திரா வரை

டிசிஎஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து இன்போசிஸ் 6,477 கோடி, விப்ரோ 2,661 கோடி, எச்சிஎல் 3,160.44 கோடி, டெக் மஹிந்திரா 1,268 கோடி ரூபாய் என் இந்தியாவில் டாப் 5 ஐடி நிறுவனங்கள் வெறும் 2 மணிநேரத்தில் 38876.44 கோடி ரூபாயை இழந்து முதலீட்டாளர்களின் வயிற்றில் அடித்துள்ளது.

அதிகளவிலான கவனம்

அதிகளவிலான கவனம்

இந்திய சந்தையில் டெக் மஹிந்திரா, எச்சிஎல் நிறுவனங்களைக் காட்டிலும் டிசிஎஸ், காக்னிசென்ட் மற்றும் இன்போசிஸ் ஆகிய நிறுவனங்கள் BFSI பிரிவில் அதிகளவில் சார்ந்துள்ளது.

வளர்ந்து வரும் இந்திய சந்தைக்கும் இந்திய நிறுவனங்களுக்கு இது முற்றிலும் தவறான போக்கு. இதேப்போன்று இன்னும் சில ஆண்டுகளுக்கு ஐடி நிறுவனங்கள் தனது வர்த்தகத்தைச் செய்தால் மிகப்பெரிய அளவிலான வீழ்ச்சியைச் சந்திக்கும் குட்ரிட்டன்ஸ் சந்தை ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.

விரிவாக்கம்

விரிவாக்கம்

ஆனால் இந்திய ஐடி நிறுவனங்கள் தங்களது BFSI பிரிவின் சேவையைத் தற்போது பிரிட்டன் நாட்டுப் பக்கம் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு அதற்கான பணிகளையும் செய்யத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

திடீர் முடிவு..?!

திடீர் முடிவு..?!

காலம் காலமாக இந்திய ஐடி நிறுவனங்களிடம் சேவையை பெற்று வரும் அமெரிக்க நிறுவனங்கள் திடீரென இப்பிரிவில் மட்டும் செலவிடும் தொகையை தற்காலிகமாக நிறுத்த என்ன காரணமாக இருக்கும்.?!

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் ஆதிக்கமா..?

டிரம்ப்

டிரம்ப்

நவம்பர் 8ஆம் தேதி நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் அதிகளவிலான அதிக்கம் செலுத்துகிறார் என ஒருபக்கம் கருத்து நிலவினாலும் மறுபக்கம் டிரம்புக்கு எதிராக பல வேலைகள் நடத்து வருகிறது.

இந்நிலையில் டிரம்ப் வெற்றி பெற்றால் இந்திய ஐடி நிறுவனங்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க நேரிடும். இதனை கருத்தில் கொண்டு தான் அமெரிக்க நிறுவனங்கள் தற்காலிமாக செலவுகளை நிறுத்தியுள்ளது.

அமெரிக்க நிறுவனத்தின் இந்த முடிவை இத்தகைய பார்வையிலும் பார்க்கலாம்.

rn

யுபிஐ செயலி

யுபிஐ செயலி-ஐ பயன்படுத்துவது எப்படி..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TCS, infosys lose 40,000 crores in 2 hours: Big blow on USA BFSI sector

Big blow on US BFSI sector, top Indian It companies loses 40,000 crore in just 2 hours of trading. -Tamil Goodreturns
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X