இனி ஐடி ஊழியர்களுக்கு 'ஆன்சைட்' வெறும் 'கனவு' தான்..!

சுத்தி சுத்தி அடிவாங்கும் ஐடி ஊழியர்கள்.. எல்லாம் வல்லரசு நாடுகளின் சதி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: தன் நாடு, தன் மக்கள் மட்டும் போதுமெனப் பிரிட்டன் சுயநலமாக, ஐரோப்பிய கூட்டணி நாடுகளில் இருந்து வெளியேறியது, சர்வதேச சந்தை மட்டும் அல்லாமல் மக்கள் மனதிலும் மிகப்பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்தப் பிரிவிற்கு முக்கியக் காரணம் ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிகளவிலான மக்கள் பிரிட்டன் நாட்டுக்கு வந்து பணிபுரிவதால் பிரிட்டன் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை என்பது பிரிட்டன் நாட்டின் வாதம், இதனால் தனது பொருளாதாரமும் பாதிப்படைந்து வருவதாவும் பிரிட்டன் கூறி பல ஆண்டுகள் கூட்டணியில் இருந்து பிரிந்துள்ளது.

தன் நாட்டு மக்களுக்கும் மட்டும் அதிகளலிலான வேலைவாய்ப்புகள் வழங்க வேண்டும் என்ற நோக்குடன், பிரிட்டனில் பிற நாட்டு மக்கள் ஆதிக்கத்தைக் குறைக்கும் வகையில் விசா விதிமுறைகளில் சில முக்கிய மாற்றக்களைச் செய்துள்ளது.

இதனால் இந்தியர்கள் குறிப்பாக ஐடி ஊழியர்கள் அதிகளவில் பாதிக்கப்பட உள்ளனர்.

விசா

விசா


அமெரிக்காவில் பணிபுரிய ஹெச்-1பி மற்றும் எல்-1பி விசாக்களை இந்திய நிறுவனங்களை அதிகளவில் பயன்படுத்துவது போலப் பிரிட்டன் நாட்டிற்குச் செல்ல ICT என்னும் விசா வழியைப் பயன்படுத்தி வருகிறது.

இதன் வாயிலாகத்தான் இந்தியாவில் இருந்து பிரிட்டன் செல்லும் 90 சதவீத ஐடி ஊழியர்கள் செல்வதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகிறது.

 

புதிய கட்டுப்பாடுகள்

புதிய கட்டுப்பாடுகள்

அமெரிக்கா அரசு தனது விசா கட்டணத்தை உயர்த்தி இனி யாரும் அமெரிக்காவில் சென்று வேலை செய்ய முடியாத நிலையை உருவாக்கி வைத்திருக்கும் நிலையில் தற்போது பிரிட்டனும் இப்பட்டியலில் இணைந்துள்ளது.

பிரிட்டன் ஹோம் ஆபீஸ்

பிரிட்டன் ஹோம் ஆபீஸ்

நவம்பர் 24ஆம் தேதிக்குப் பின் Tier 2 ICT விசா பெற வேண்டும் என்றால் விண்ணப்பதாரர் 30,000 பவுண்ட் அளவிலான சம்பளத்தைப் பெற வேண்டும் முக்கிய விதிமுறையாக வைத்துள்ளது. முன்பு சம்பள அளவு 20,800 பவுண்டாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டன் பிரதமர்

பிரிட்டன் பிரதமர்

இப்புதிய மாற்றம் அமலாக்கப்பட்டு 3 நாட்கள் பின் பிரிட்டன் பிரதமர் தெரெசா மூன்று நாள் பயணமாக வருகிற 27ஆம் தேதி இந்தியா வருகிறார்.

பிற விசாக்கள்

பிற விசாக்கள்

Tier 2 ICT விசாவின் சம்பள உயர்வுடன், டையர் 2 (ஜெனரல்) விசாவில் அனுபவம் பெற்ற ஊழியர்களின் சம்பள அளவுகளை 25,000 பவுண்ட் உயர்ந்துள்ளது, இதில் சில விலக்குகளும் அளிக்கப்பட்டுள்ளது.

டையர் 2 (ICT) கிராஜுவேட் டிரைனி சம்பளத்தை 23,000 பவுண்ட் குறைத்துள்ளது. மேலும் டையர் 2 (ICT) ஸ்கில் டிரான்பர் என்ற துணை பிரிவையும் மூடியுள்ளதாகப் பிரிட்டன் ஹோம் ஆபீஸ் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் நடந்த கொடுமை பாருங்க..

 

அமெரிக்காவில் புதிய மசோதா

அமெரிக்காவில் புதிய மசோதா

அமெரிக்காவில் 2 செனேட்டர்கள் ஹெச்-1பி விசாவை இனி ஊதிய அடிப்படையிலான அமைப்பில் மட்டுமே வழங்க வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்தனர். இதற்கான ஒப்புதல்களை நெல்சன் மற்றும் ஜெஃப் தலைமையிலான ஆலோசனை கூட்டம் அளித்து.

இந்த மசோவின் பாதிப்பு என்ன..?

 

பாதிப்பு..

பாதிப்பு..

அமெரிக்க நாடாளுமன்றத்தில் சில மாதங்களுக்கு முன் ஒப்புதல் அளிக்கப்பட்ட மனுவின் படி 85,000 விசாக்களில் முதல் 15,000 விசாக்களை அதிகச் சம்பளம் வாங்குவோருக்கு மட்டும் அளிக்க வேண்டும் எனவும், மீதமுள்ள 70,000 விசாக்களையும் அதிக ஊதிய அடிப்படையில் வழங்க வேண்டும் எனச் செனேட்டார்கள் தங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இத்தகைய முறையின் மூலம் அதிகச் சம்பளம் வாங்குவோருக்கு எளிதாக அமெரிக்க ஹெச்-1பி விசா கிடைப்பது மட்டும் அல்லாமல், அவுட்சோர்சிங் நிறுவனங்களால் குறைவான சம்பளம் பெறும் ஊழியர்களை, அமெரிக்க நிறுவனங்களில் நியமிக்க முடியாது. மேலும் அமெரிக்கா வரும் பிற நாட்டவர்களுக்கு அமெரிக்கக் குடிமக்களுக்கு இணையான சம்பளத்தைப் பெறுவார்கள் எனவும் இந்த மனு விவரிக்கிறது.

 

விசா கட்டணம் உயர்வு

விசா கட்டணம் உயர்வு

அமெரிக்கக் காங்கிரஸ் அளித்த மனுவின் படி ஹெச்-1பி விசா கட்டணத்தை 4,000 டாலராகவும், எல்-1 விசாவிற்கான கட்டணத்தை 4,500 டாலராகவும் உயர்ந்த அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு நடைமுறைக்குக் கொண்டு வரப்பட உள்ளது.

 நோ ஆன்சைட்..

நோ ஆன்சைட்..

இந்திய ஐடி நிறுவனங்கள் அமெரிக்க விசாவிற்குக் கட்டணத்தை உயர்த்திய நிலையில், பிரிட்டன் பக்கம் தனது வர்த்தகத்தை உயர்த்தத் திட்டமிட்டு இருந்தது. ஆனால் தற்போது பிரிட்டனும் தனது விசா கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

இதனால் இனி இந்திய ஐடி நிறுவனங்களில் ஆன்சைட் போகும் வாய்ப்பு அதிகளவில் குறைய உள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

UK's New Visa Rules To Impact Indian IT Professionals

UK's New Visa Rules To Impact Indian IT Professionals - Tamil Goodreturns
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X