இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் 'டாப் 10' ஐடி நிறுவனங்கள்..!

ஐடி மற்றும் டெக்னாலஜி நிறுவனங்கள் சரிவில் உள்ளதா.? இந்த நிறுவனங்களை பார்த்த அப்படி ஒன்னும் தெரியலையே பாஸ்.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2016ஆம் ஆண்டுக்கான இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் டெக்னாலஜி நிறுவனங்கள் குறித்த ஆய்வை டெலாய்ட் நிறுவனம் செய்துள்ளது. இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள 50 நிறுவனங்களும் தங்களது வருவாய் அளவுகளை மையமாக வைத்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இதில் ஆச்சரியம் என்வென்றால் டாப் 50 இடங்களில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களின் குறைந்தபட்ச வருவாய் வளர்ச்சி 300 சதவீதம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. உண்மையில் சில நிறுவனங்கள் 10 மடங்கு அதாவது 1000 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை பெற்றுள்ளது.

வாங்க அப்படி எந்த நிறுவனம் என்று பார்க்கலாம்.

கிரேகேம்பஸ் எடுடெக்

கிரேகேம்பஸ் எடுடெக்

ஹைதராபாத் நகரத்தை தலைமையிடமாக கொண்டு வல்லுனர்களுக்கு ஆன்லைன் மற்றும் கிளாஸ்ரூம் வகுப்புகளை நடத்தும் கிரேகேம்பஸ் எடுடெக் இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் டாப் 10 நிறுவன பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இந்நிறுவனம் மென்பொருள் வல்லுனர்களுக்குக பிராஜெட் மேனேஜ்மென்ட், பிக் டேட்டா, டேட்டா சயின்ஸ், சர்வீஸ் மேனேஜ்மென்ட் மற்றும் குவாலிட்டி மேனேஜ்மென்ட் போன்றவற்றுக்கு வகுப்புகள் எடுக்கிறது.

கடந்த 3 வருடத்தில் இந்நிறுவனம் சுமார் 1622 சதவீத வருவாய் வளர்ச்சியை அடைந்துள்ளது.

 

ஸ்டெல்ஆப்ஸ் டெக்னாலஜிஸ்

ஸ்டெல்ஆப்ஸ் டெக்னாலஜிஸ்

இண்டர்நெட் ஆப் திங்க்ஸ் பிரிவில் புல் ஸ்டாக் சேவை அளிக்கும் ஸ்டெல்ஆப்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் பெங்களுரூ நகரில் உள்ளது.

கடந்த 3 வருடத்தில் இந்நிறுவனம் 1278 சதவீத வருவாய் வளர்ச்சியை அடைந்துள்ளது.

 

போல்ஸ்டார் சொல்யூஷன்ஸ் அண்ட் சர்வீசஸ்

போல்ஸ்டார் சொல்யூஷன்ஸ் அண்ட் சர்வீசஸ்

நொய்டா நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் போல்ஸ்டார் சொல்யூஷன்ஸ் அண்ட் சர்வீசஸ் நிறுவனம் அனலிடிக்ஸ், டேட்டா வேர்ஹவுசிங், எண்டர்பிரைசர்ஸ் அப்பிளிகேஷன் டெவலப்மென்ட் மற்றும் கண்டென்ட் மேனேஜ்மென்ட் ஆகிய பல சேவைகளை அளித்து வருகிறது.

இந்நிறுவனம் 1166 சதவீத வருவாய் வளர்ச்சியை கடந்த 3 வருடத்தில் சந்தித்துள்ளது.

 

ஃபோர்க் மீடியா பிரைவேட் லிமிடெட்

ஃபோர்க் மீடியா பிரைவேட் லிமிடெட்

ஆன்லைன், மொபைல் மற்றும் வீடியோ தளங்களில் விளம்பர சேவையை அளிக்கும் ஃபோர்க் மீடியா பிரைவேட் லிமிடெட் 1128 சதவீத வருவாய் வளர்ச்சியை பெற்று டாப் 10 பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளது.

குட்வொர்க்லேப்ஸ் சர்வீசஸ்

குட்வொர்க்லேப்ஸ் சர்வீசஸ்

மும்பையை சேர்ந்த குட்வொர்க்லேப்ஸ் சர்வீசஸ் நிறுவநம் மொபைல் ஆப், வெப்/கிளவுட்/SaaS பிராடெக்ட்ஸ் போன்ற பல்வேறு சேவைகளை அளிக்கும் இந்நிறுவனம் கடந்த 3 வருடத்தில் 1112 சதவீத வருவாய் உயர்வை பெற்றுள்ளது.

ஸ்பையர் டெக்னாலஜிஸ் அண்ட் சொல்யூஷன்ஸ்

ஸ்பையர் டெக்னாலஜிஸ் அண்ட் சொல்யூஷன்ஸ்

டாப் 10 பட்டியலில் இணைந்துள்ளது மற்றொரு பெங்களுரூ நிறுவனம்

பிக் டேட்டா மற்றும் அனலிட்டிக்ஸ் சேவை அளிக்கும் இந்நிறுவனம் 2013-15 வரையிலான காலத்தில் சுமார் 1003 சதவீதம் அளவிலான வருவாய் வளர்ச்சியை அடைந்துள்ளது.

 

 

சோமேட்டோ

சோமேட்டோ

இந்தியா முழுவதும் பிரபலமான ஆன்லைன் உணவு நிறுவனமான சோமேட்டோ 23 நாடுகளில் இயங்கி வருகிறது.

கடந்த 3 வருடத்தில் இந்நிறுவனத்தில் வருவாய் அளவுகள் 504 சதவீதம் அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.

 

பைஜூஸ்

பைஜூஸ்

மொபைல் ஆப்ஸ் மற்றும் டேப்லெட் மூலம் மாணவர்களுக்கு புதிய முறை கல்வியை புகுத்தும் பைஜூஸ் நிறுவனம் கடந்த 3 வருடத்தில் 470 சதவீதம் அளவிலான வருவாய் வளர்ச்சியை பெற்றுள்ளது.

மொபிசி டெக்னாஜிஸ்

மொபிசி டெக்னாஜிஸ்

வர்த்தக சந்தையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் சேல்ஸ், டிஸ்ரிபியூடர் மற்றும் சப்ளை செயின் சேவைகளை மொபைல் வாயிலாக அளிக்கிறது மொபிசி டெக்னாஜிஸ் .

இந்நிறுவனத்தின் வருவாய் கடந்த 3 வருடத்தில் 370சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

 

 

டைகர் அனலிட்டிக்ஸ்

டைகர் அனலிட்டிக்ஸ்

டாப் 10 பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தாலும் டைகர் அனலிட்டிக்ஸ் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி 367 சதவீதம்.

ரீடைல், டிரான்ஸ்போர்டேஷன்ஷ், மார்கெட்டிங் சையின்ஸ், சோஷியல் மீடியா, ஹெல்த்கேர், BFSI மற்றும் டெலிகாம் துறையில் பல்வேறு அனலிட்டிக்ஸ் சேவை அளிக்கிறது டைகர் அனலிட்டிக்ஸ்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

10 fast growing technology companies in India

10 fast growing technology companies in India - Tamil Goodreturns
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X