தமிழக மக்களுக்கு என்ன செய்தார் 'ஜெயலலிதா'..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

சென்னை: தமிழக அரசியலில் பல தலைவர்கள் மக்கள் மனத்தில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளனர், இதில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கர்மவீரர் காமராஜர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், போன்ற பலபேரை நாம் குறிப்பிடமுடியும்.

அந்த வகையில் தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களும் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளனர். இதற்கு முக்கியக் காரணம் ஜெயலலிதா அவர்கள் தனது ஆட்சிக்காலத்தில் மக்களுக்குப் பயனளிக்கும் பல முக்கியத் திட்டங்களை அறிவித்தது தான்.

அப்படித் தமிழகத்தின் சமாணிய மக்களையும் மகிழ்ச்சி அடையவைக்கும் அளவிற்கு ஜெயலலிதா வகித்த முதல்வர் பதிவுக்கு தான் வரத் துடிக்கிறார் 'சசிகலா'. ஆதிமுக கட்சியிலும் தமிழக அரசியலையும் கைப்பிடிக்க துடிக்கும் சசிகலா அமர நினைக்கும் இடம் தான், முன்னாள் ஜெ. இருந்த முதலமைச்சர் பதவி.

இப்படிப்பட்ட மரியாதைக்குரிய ஜெயலலிதா இறந்து இன்றோடு (2016 டிசம்பர் 5) 1 ஆண்டு முடிவடைந்துள்ள நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களுக்கு அறிவித்த சிறப்புத் திட்டங்களை பற்றி நினைவு கூறும் கட்டுரை தான் இது.

செல்வி ஜெயலலிதா

இந்தியாவிலேயே தனது மாநில மக்களின் நலனுக்கா சிறப்பு மற்றும் இலவச திட்டங்கள் அறிவிப்பதில் முதன்மையானவர் செல்வி ஜெயலலிதா.

இவர் அறிவித்த பெறும்பாலான திட்டங்கள், இலவச திட்டங்களாகவோ அல்லது அதிக மாணியம் கொண்ட திட்டங்களாகவோ இருந்துள்ளது. இலவச திட்டங்கள் என்று அழைப்பதை விரும்பாதவர் ஜெயலலிதா, இதனால் அனைத்து இலவச திட்டங்களையும் விலையில்லா திட்டங்கள் என்று அவர் கூறுவது வழக்கம்.

 

 

பெண்களுக்கு முக்கியதுவம்

தமிழகத்தின் முதல்வராகச் செல்வி ஜெயலலிதாவின் 20 வருடங்களுக்கும் அதிகமான ஆட்சிக்காலத்தில் பெண்களுக்காக, பெண்களை மையப்படுத்திப் பல நல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார். இதை நாம் மறுக்க முடியாத ஒன்றும்.

மேலும் இதுவரை தமிழக முதல்வராக இருந்தவர்களின் பெண்களுக்கு முக்கியதுவம் கொடுத்து அதிகத் திட்டங்களைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்ததும் இவர் தான்.

 

தொட்டில் குழந்தை திட்டம்

1991ஆம் ஆண்டுத் தொட்டில் குழந்தை திட்டம் ஜெயலலிதா பதவிக்கு வந்த உடன் முதன்முதலாக அறிவித்த திட்டம் தொட்டில் குழந்தை திட்டம்.

இத்திட்டத்தின் கீழ் குழந்தையை வளர்க்க முடியாதோர் தங்களது கைக்குழந்தையை அரசு தொட்டிலில் போட்டுவிட்டால், இக்குழந்தைகளை அரசு பொறுப்பேற்றுக் கவணித்துக்கொள்ளும். மேலும் இக்குழந்தைகளைத் தத்துக்கொடுக்கவும் அரசுக்கு உரிமை உண்டு என்பதுதான் இத்திட்டம்.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்திய முதல் தமிழ்நாட்டில் பெண் சிசுக் கொலை அதிகளவில் குறைக்கப்பட்டது மேலும் பாலினத்தின் அடிப்படையில் கருக்கலைப்பும் குறைந்தது.

 

 

தாலிக்கு தங்கம்..!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சிகாலத்தில் 2011ஆம் ஆண்டுத் திருமணத்திற்குத் தங்கம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தைப் பிரபல சமுகச் சேவையாளர் மூவலூர் ராமாமிர்தம் பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் பிற்படுத்தப்பட்டோர் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் பட்டப்படிப்பை அல்லது டிப்லோமோ படித்திருந்தால் அவர்களின் திருமணத்திற்கு 50000 ரூபாய் ரொக்கமும், தாலிக்கு சேவையான 4 கிராம் தங்கத்தையும் தமிழக அரசு இத்திட்டத்தின் வாயிலாக அளிக்கிறது.

 

அம்மா உணவகம்

தமிழ்நாட்டின் பெரு நகரங்களில் மலிவான விலையில் தரமான முறையில் மக்களுக்கு உணவு அளிக்க வேண்டும் என்று திட்டமிட்ட செல்வி ஜெயலலிதா அம்மா உணவகத்தை உருவாக்கினார்.

இப்புதிய திட்டத்தின் மூலம் 1 ரூபாய்க்கு இட்லி முதல் அதிகப்படியாக 10 ரூபாய்க்கு பல உணவுகளைச் சமாணியர்களின் வயிறுநிரம்பச் சாப்பிடும் அளவிற்கு உணவளிக்கும் திட்டத்தை வடிவமைத்து, திறம்படச் செயல்படுத்தியுள்ளார்.

இதன் மூலம் பெரு நகரங்களில் மிகவும் குறைவான வருமானம் கொண்ட மக்கள் தினமும் போதுமான அளவிற்கு உணவு பெறுகின்றனர்.

 

அம்மா லேப்டாப்

தமிழக அரசு நடத்தும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படித்துவரும் மாணவ மாணவிகளுக்குத் தங்களின் அறிவை மேம்படுத்திக்கொள்ளவும், தொழில்நுட்ப கல்வியறிவை சிறப்பான முறையில் பெறவும் விலையில்லா லேப்டாப் வழங்கப்பட்டது.

அம்மா குடிநீர்

தவித்த வாய்க்குத் தண்ணீர்..

தமிழ்நாட்டில் பாட்டில் தண்ணீர் 20-25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் தமிழக அரசு மாணிய விலையில் பஸ்நிலையம், ரயில் நிலையம் என மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் பகுதிகளில் வெறும் 10 ரூபாய்க்குத் தண்ணீர் பாட்டில்களை வழங்கும் திட்டத்தை அறிவித்துத் தற்போது சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது.

 

 

அம்மா குழந்தை பராமரிப்புப் பொருட்கள்

தொட்டில் குழந்தை திட்டம், தாலிக்குத் தங்கம் என்னும் திட்டங்களைத் தாண்டி தமிழக மக்களின் மனதில் நீக்கா இடம்பிடித்திருந்தது அம்மா குழந்தை பராமரிப்புப் பொருடகள் திட்டம் என்று தான் சொல்ல வேண்டும்.

தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனையில் பிறக்கும் அனைவத்து குழைந்தைகளுக்கும் 1000 ரூபாய் மதிப்புள்ள 16 குழந்தை பராமரிப்புப் பொருட்கள் முற்றிலும் இலவசமாக அளிக்கப்பட உள்ளது.

இதில் குழந்தைகளுக்கான துண்டு, மேலாடை, மெத்தை, கொசு வலை, குழந்தைகளுக்கான எண்ணெய், சேப், பொம்பை, மருந்துகள் (குழந்தைக்கும் தாய்க்கும்), சுத்திகரிப்பான் ஆகியவை இதில் அடங்கும்.

 

அம்மா கிரைன்டர், மிக்ஸி, டேபிள் பேன்

2011ஆம் ஆண்டு மீண்டும் முதலமைச்சர் அரியாசனத்தைப் பிடித்த தனது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டவாறு மக்களுக்கு விலையில்லா அம்மா கிரைன்டர், மிக்ஸி, டேபிள் பேன் ஆகியவற்றை அளித்துத் தமிழக அரசு.

அம்மா காப்பீடு

2012ஆம் ஆண்டு ஜெயலலித்தாவின் ஆட்சிக்காலத்தில் தமிழக மக்களுக்கு அனைவருக்கும் மேம்படுத்தப்பட்ட மருத்துவக் காப்பீடு திட்டம் வழங்கப்பட்டது. இத்திட்டத்தை அம்மா காப்பீடு என்ற பெயரில் தமிழக அரசு அறிவித்தது.

இத்திட்டத்தின் கீழ் ஒருவர் ஒரு வருடத்திற்கு 1 லட்ச ரூபாய் மதிப்பிலான மருத்துவச் சேவைகளை இலவசமாகப் பெறலாம். இது 4 வருடத்திற்கான திட்டம்.

 

அம்மா பார்மஸி

சந்தையில் நாளுக்குநாள் மருந்துபொருட்களின் விலை அதிகரித்து வரும் நிலையில், மக்களுக்கு அன்றாட நோய் மற்றும் பாதிப்புகளுக்கான மருந்து பொருட்களை மலிவான விலையிலே் அளிக்க அம்மா பார்மஸி உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் தினசரி சம்பளம் வாங்குவோர் முதல் பல தரப்பு மக்களும் மலிவான விலைக்கு மருந்து பொருட்களை வாங்க முடிந்தது.

 

பிற திட்டங்கள்

இதனை தாண்டி அம்மா உப்பு, அம்மா சிமெண்ட், அம்மா சேவை மையம் என பல திட்டங்களை அடுக்கிக்கொண்டு போகலாம்.

அம்மா பிராண்டு

இத்தகைய திட்டங்கள் மூலம் அம்மா என்ற சொல்லுக்கு மக்கள் மத்தியில் புதிய அர்த்தம் பிறந்தது மட்டும் அல்லாலமல் வர்த்தகச் சந்தையில் 'அம்மா' என்ற புதிய பிராண்டு உருவானது.

செல்வி ஜெயலலிதா

மக்களின் வாழ்வியலை மேம்படுத்தும் பல திட்டங்களை உருவாக்கி சிறப்பான முறையில் செயல்படுத்திய செல்வி ஜெயலலிதா தற்போது உயிருடன் இல்லாவிட்டாலும், மனதளவில் எப்போதும் தமிழ்நாட்டின் மக்கள் மத்தியில் என்றும் உயிர் வாழ்வார்.

மேலும் படிக்க:

ஜெயலலிதாவின் 113.73 கோடி ரூபாய் சொத்து யாருக்கு..?

ஓபிஎஸ் மீது மோடிக்கு தனி பாசம்.. இது தான் காரணமோ..?

 

ஜெ. சொத்துக்கள்..!

28கிலோ தங்கம், 800கிலோ வெள்ளி.. கர்நாடகா கருவூலத்தில் முடங்கிக் கிடக்கும் ஜெ. சொத்துக்கள்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

People welfare schemes implemented by Jayalalithaa

People welfare schemes implemented by Jayalalithaa - Tamil Goodreturns
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns