பிளாஷ்பேக்: 2016-ம் அண்டு பங்கு சந்தையை மோசமாக தாக்கிய ஐந்து நிகழ்வுகள்..!

2016-ம் ஆண்டின் இறுதி நாட்களில் உள்ளோம்.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2016-ம் ஆண்டின் இறுதி நாட்களில் உள்ளோம். 2017 துவங்கு இன்னும் 16 நாட்களே உள்ள நிலையில் 2016-ம் அண்டு பங்கு சந்தையை மோசமாகத் தாக்கிய ஐந்து நிகழ்வுகள் பற்றி இங்குப் பார்ப்போம்.

 

ரூபாய் நோட்டுகள்

ரூபாய் நோட்டுகள்

மத்திய அரசு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததில் இருந்து பயன்பாட்டில் இருந்து86 சதவீத நோட்டுகள் செல்லாமல் போனது. இதனைத் தொடர்ந்து சில நாட்கள் பங்குச் சந்தை சரிவை மட்டுமே சந்தித்தது.

நபம்பர் 8 ஆம் தேதி இந்த அறிவிப்பு வந்ததை அடுத்து நவம்பர் 9-ம் தேதி 4 சதவீதம் வரை சென்செக்ஸ் குறைந்து காணப்பட்டது.

 

டாடா குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து சைரஸ் மிட்டரி நீக்கம்

டாடா குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து சைரஸ் மிட்டரி நீக்கம்

அக்டோபர் 24 ஆம் தேதி டாடா குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து சைரஸ் மிட்டரி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அக்டோபர் 25 ஆம் தேதி டாடா நிறுவனத்தின் பங்குகள் குறைந்து செசெக்ஸ் ஆட்டம் கண்டது.

டாடா ஸ்டீல் நிறுவனத்தின் பங்குகள் 2.6 சதவீதமும், டிசிஎஸ் மற்றும் டாடா மோடார்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 1 சதவீதமும் சரிந்து காணப்பட்டது.

 

பாக்கிஸ்தான மீது தொடுக்கப்பட்ட சர்ஜிக்கல் தாக்குதல்
 

பாக்கிஸ்தான மீது தொடுக்கப்பட்ட சர்ஜிக்கல் தாக்குதல்

பாக்கிஸ்தான் தீவிரவாதத்திற்கு எதிராகத் தகுந்த பதிலடி கொடுக்க செப்டம்பர் 29-ம் தேதி எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் உரி தாக்குதலுக்கு எதிராக சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தப்பட்டது.

இது போன்ற நடவ்வடிக்கை இந்திய அரசு எடுத்தது அப்போது தான் முதல் முறை. இது குறித்த செய்திகள் வெளியான உடன் சென்செக்ஸ் 500 புள்ளிகள் வரை சரிந்தது குறிப்பிடத்தக்கது.

அதே நேரம் பாக்கிஸ்தானின் பங்குச் சந்தையும் 500 புள்ளிகள் சரிந்து ஆட்டம் கண்டது.

ரகுராம் ராஜன்

ரகுராம் ராஜன்

2016 ஜூன் 18 ஆம் தேதி சனிக்கிழமை ஆர்பிஐ ஆளுநர் பதவியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்ததை அடுத்து இரண்டாம் முறையாகப் பதிவை தொடரப்போவதில்லை என்று அறிவித்தார்.

அப்போது சந்தையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை ஆனால் செப்டம்பர் 23 ஆ தேதி இவர் அதிகாரப்பூர்வமாக வெளியேறியதைத் தொடர்ந்து 374 புள்ளிகள் வர்த்தகம் சரிந்து காணப்பட்டது.

 

இந்தியா-மொரிஷியஸ் வரி ஒப்பந்தத்தில்

இந்தியா-மொரிஷியஸ் வரி ஒப்பந்தத்தில்

1982, ஆகஸ்ட் 24 இந்தியா-மொரிஷியஸ் இடையே இருந்த பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு வரி இல்லை என்ற ஒப்பந்தத்தில் 2017 முதல் 50 சதவீத வரி மற்றும் 2019 முதல் 100 சதவீத வரி என்று கையெழுத்து போடப்பட்ட உடன் மே 11 ஆம் தேதி 175 புள்ளிகள் சென்செக்ஸ் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Five domestic events that hit equity markets in 2016

Five domestic events that hit equity markets in 2016
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X