இந்தியாவில் தங்கம் விலை ஏறுவதற்கும் இறங்குவதற்கும் இவ்வளவு காரணங்கள் உள்ளதா..?

இந்தியாவில் தங்கம் விலை ஏறுவதற்கும் இறங்குவதற்கும் இவ்வளவு காரணங்கள் உள்ளதா..?

By Batri Krishnan
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் இந்தியாவில் தங்கத்தின் விலைப் போக்கை நன்கு கவனித்தீர்கள் எனில், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நகரத்திலும் தங்கத்தின் விலை சற்றே வேறுபடுவதைக் கவனிக்கலாம். ஒரு சில நகரங்களில், தங்கத்தின் விலை அதிகமாகவும், வேறு சில நகரங்களில் முந்தைய நகரத்தை விடச் சற்று விலை குறைவாகவும் காணப்படும்.

இது உங்களுக்கு ஆச்சர்யமாகத் தோன்றுகின்றதா? இதற்கு என்ன காரணம்? இந்தியாவில் தங்கத்தின் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றது.? இதைப் பற்றித் தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.

இந்தியத் தங்கத்தின் விலை சர்வதேச சந்தை விலையைச் சார்ந்தது

இந்தியத் தங்கத்தின் விலை சர்வதேச சந்தை விலையைச் சார்ந்தது

இந்திய நகரங்களில் நிலவும் தங்கத்தின் விலை, சர்வதேச சந்தையைச் சார்ந்தது. எனவே, சர்வதேச நிலையில் தங்கத்தின் விலை உயர்ந்தது எனில், இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் தங்கத்தின் விலை கண்டிப்பாக உயர்ந்து விடும்.

இந்தியாவில் நல்ல நிலையில் இயங்கி வரும் தங்கச் சுரங்கம் எதுவும் கிடையாது. நாம் நம்முடைய தேவைக்கு, தங்கத்தைப் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகின்றோம். இந்தியாவில் தங்கம், மத்திய அரசாங்கம், பொதுத்துறை மற்றும்தனியார் வங்கிகள், அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட முகவர் மற்றும் நிறுவனங்கள், போன்றவர்களால் இறக்குமதி செய்யப்படுகின்றது. அதன் பின்னர் அவர்களின் வழியாக மிகப் பெரிய விநியோகஸ்தர்களுக்கு அனுப்பப்படுகின்றது. இறக்குமதியாளர்கள் பட்டியலில் மாறிக்கொண்டே இருக்கும். மத்திய அரசாங்கம் தகுந்த இடைவெளியில் புதுப் பட்டியலை வெளியிடுகின்றது.

 

 

இந்தியாவிற்குத் தங்கத்தை யார் கொண்டு வருகின்றார்கள்?
 

இந்தியாவிற்குத் தங்கத்தை யார் கொண்டு வருகின்றார்கள்?

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆ பரோடா, தாது மற்றும் உலோகம் வியாபார நிறுவனம், யூனியன் வங்கி, சிண்டிகேட் வங்கி போன்ற இறக்குமதியாளர்கள், இந்தியாவில் தங்கத்தை இறக்குமதி செய்கின்றனர். உண்மையில், கிட்டத்தட்ட 38 வங்கிகள் இந்தியாவில் தங்கத்தை இறக்குமதி செய்கின்றனர். இறக்குமதி செய்த பின்னர், அவர்கள் தங்கத்தின் சர்வதேச விலைக்கு இணையான உள்நாட்டு மதிப்பை இந்திய ரூபாயில் கணக்கிட்டு, அதனுடன் இறக்குமதி வரி போன்ற பிற வரிகளைச் சேர்த்து, தங்கத்தின் விலையை நிர்ணயிக்கின்றனர். இந்த விலைதான், இந்தியாவில் தங்கத்தின் முதல் ஆரம்ப விலை.

தங்கத்தின் இறுதி சில்லறை விலை ஏன் மொத்த விலையில் இருந்து மாறுபடுகின்றது?

தங்கத்தின் இறுதி சில்லறை விலை ஏன் மொத்த விலையில் இருந்து மாறுபடுகின்றது?

மும்பை போன்ற நகரங்களில் புல்லியன் அசோசியேசன் மூலம் விலை நிர்ணயிக்கப்படுகின்றது. உதாரணமாக மும்பையில் உள்ள IBJA (இந்திய புல்லியன் ஜுவல்லர்ஸ் சங்கம்) தங்க விநியோகஸ்தர் சங்கம் ஒரு குறிப்பிட்ட விலையை நிர்ணயித்து அந்த விலையைச் சில்லறை தங்க விற்பனையாளர்களுக்குத் தெரிவிக்கின்றனர். தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதற்கு முன்னர்ச் சங்கம், பெரிய விநியோகஸ்தர்களைத் தொடர்பு கொண்டு, அவர்களின் கருத்தை தெரிந்து கொள்ளும், மற்றும் எதிர்காலத் தேவையைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, தங்கத்திற்கு விலையை நிர்ணயிக்கும்.

தங்கம் விலை கணக்கிட பல்வேறு வழிகள் உள்ளன

தங்கம் விலை கணக்கிட பல்வேறு வழிகள் உள்ளன

தங்கம் விலை கணக்கிட வேறு சில மாற்று வழிகள் உள்ளன. நீங்கள் தங்கத்தின் சர்வதேச விலையைத் தெரிந்து கொண்டு அதனுடன், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பைப் பெருக்கினால் தங்கத்தின் உண்மையான மதிப்பைத் தெரிந்து கொள்ளலாம். இந்த விலையுடன் தங்கத்தை இறக்குமதி செய்யும் நிறுவனத்தின் லாபம், மதிப்புக்கூட்டு வரி, நகரின் சுங்க வரி மற்றும் உள்ளூர் தீர்வைகள் போன்றவற்றைச் சேர்த்தால் தங்கத்தின் இறுதி சில்லறை விலையைத் தெரிந்து கொள்ளலாம். நீங்கள் உள்ளூரில் நகைக்கிடையில் தங்கத்திற்குச் செலுத்தும் பணத்தில் இவை அனைத்தும் அடக்கம் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

தங்கத்தின் விலை இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் ஏன் வேறுபடுகின்றது?

தங்கத்தின் விலை இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் ஏன் வேறுபடுகின்றது?

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் அந்த மாநிலத்திற்கு உரிய உள்ளூர் தீர்வைகள் வேறுபடுகின்றது. அதோடு போக்குவரத்துச் செலவுகள் மாநிலங்களுக்கு இடையே மிகவும் வேறுபடுகின்றது. ஒரு சில தனிநபர்கள் மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற துறைமுகம் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை மிகவும் குறைவாக இருக்கும் என நினைக்கின்றனர். ஏனெனில் இந்த நகரங்களில் தங்கத்தை இறக்குமதி செய்த பின்னர் ஏற்படக்கூடிய போக்குவரத்துச் செலவு மிகவும் குறைவு. எனினும் இது எப்போதும் உண்மையாக இருப்பதில்லை. தங்கத்தின் விலையைப் போக்குவரத்து செலவைத் தவிர்த்து பல்வேறு காரணிகள் பாதிக்கின்றது.

தங்கத்தின் விலையில் பணப் பரிமாற்றம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது

தங்கத்தின் விலையில் பணப் பரிமாற்றம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது

நாணயப் பரிமாற்ற விலை தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. உதாரணமாக, நாம், தங்கத்தை இறக்குமதி செய்வதால், அதற்குரிய பணத்தை டாலரில் தான் செலுத்த வேண்டும். எனவே, இப்பொழுது இந்திய ரூபாயின் மதிப்பு 67 ல் இருந்து 68 ஆகக் குறையும் பொழுது, நாம் தங்கத்திற்கு 1 ரூபாய் அதிகமாகச் செலுத்த வேண்டும். தங்கம் அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டால், இந்தியாவில் இருந்து அதிக அளவு அன்னியச் செலாவணி வெளியே செல்கின்றது எனப் பொருள் கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Like this only Gold prices changes in India: How Gold Prices In Indian Cities Are Fixed?

Like this only Gold prices changes in India: How Gold Prices In Indian Cities Are Fixed?
Story first published: Saturday, March 18, 2017, 10:30 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X