கோடிஸ்வரர்கள் ஆன பேடிஎம் ஊழியர்கள்.. ஆச்சரியத்தில் மூழ்கிய தொழில்நுட்ப சந்தை..!

நொய்டா அலுவலகத்தில் பணி புரியும் 500 ஊழியர்களில் 47 ஊழியர்கள் தங்களது தாய் நிறுவனத்திற்கு உள் மற்றும் வெளி முதலீட்டாளர்கள் அதிகரிப்பதற்காகக் கடந்த சில வாரங்களில் விற்றனர்.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் அன்மையில் நடந்த மதிப்பீட்டு ஆய்வில் நிறுவனத்தின் பங்குகள் நன்கு விலை உயர்ந்ததை அறிந்த ஊழியர்கள் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளதாக அறிக்கை கூறுகின்றது.

நொய்டா அலுவலகத்தில் பணி புரியும் 500 ஊழியர்களில் 47 ஊழியர்கள் தங்களது தாய் நிறுவனத்திற்கு உள் மற்றும் வெளி முதலீட்டாளர்கள் அதிகரிப்பதற்காகக் கடந்த சில வாரங்களில் விற்றனர்.

சென்ற 4 முதல் ஐந்து மாதங்களாக நன்கு வளர்ந்து வந்த பேடிஎம் நிறுவனத்தின் வணிகத்தினால் மதிப்பீடு 4.8 பில்லியன் டாலர்களாக அதிகரித்தது, எனவே ஊழியர்களுக்குத் தங்களது பங்குகளை விற்றதன் மூலம் நல்ல லாபத்தைப் பெற்றனர்.

ஊழியர்களிடம் உள்ள பங்குகள்

ஊழியர்களிடம் உள்ள பங்குகள்

பேடிஎம் நிறுவனத்தின் ஊழியர்களில் மொத்தம் 100 நபர்கள் பேடிஎம் நிறுவனத்தின் பங்குதாரர்களாக உள்ளனர் என்றும் அறிக்கை கூறுகின்றது.

சில பேடிஎம் நிறுவன அதிகாரிகள் 2016-ம் ஆண்டுக் கூகுள் மற்றும் ஊபர் நிர்வாகியான அமித் சிங்கால், வாட்ஸ் அப்-ன் நீரஜ் அரோரா மற்றும் பேஸ்புக் பென் பொறியாளர் ருச்சி சாங்வி ஆகியோருக்கு தங்களது பங்குகளை விற்றனர்.

 

செல்லா ரூபாய் நோட்டுகள்

செல்லா ரூபாய் நோட்டுகள்

மத்திய அரசு 2016 நவம்பர் 8-ம் தேதி பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்ததில் இருந்து நாடு முழுவதும் வாடிக்கையாளர்கள் அதிகரித்தனர். அதிலும் குறிப்பாக மாநகரங்கள், நகரங்கள் மற்றும் சிறு நகரங்கள் பலர் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்காகப் பேடிஎம் நிறுவனத்திற்கு மாறியதால் பயனர்கள் அளவு அதிகரித்தது.

இரட்டைச் சதம்

இரட்டைச் சதம்

பேடிஎம் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான விஜய சேகர் ஷர்மா பிப்ரவரி மாதம் அளித்த பேட்டி ஒன்றில் 200 மில்லியன் பயனர்கள் பேடிஎம்-ல் உள்ளதாகவும், 2020-ம் ஆண்டிற்குள் 500 மில்லியன் பயனர்கள் பெறுவதையே இலக்காக வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் "இரட்டை சதம்" அடுத்த இலக்கு 2020-ம் ஆண்டிற்குள் 500 மில்லியன் வாடிக்கையாளர் என டிவிட் செய்திருந்தார்.

 

அலிபாபா

அலிபாபா

பேடிஎம் நிறுவன ஊழியர்கள் தங்களது பங்குகளை விற்க முடிவெடுத்ததால் சீன நிறுவனங்கள் அலிபாபா மற்றும் இதன் பேமெண்ட்ஸ் பிரிவாப ஆண்ட் ஃபினான்ஷியல் ஆகியோர் ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் மேலும் பங்குகளை வாங்க முடிந்தது.

இன்னொரு பக்கம் விஜய் சேகர் ஷர்மா மற்றும் இந்த நிறுவனத்தின் துவக்க கால முதலீட்டாளர் சைப் பார்ட்னர்ஸ் இருவரிடமும் 95 சதவீத நிறுவனத்தின் பங்குகள் உள்ளன.

 

ரிலையன்ஸ் கேப்பிட்டல்

ரிலையன்ஸ் கேப்பிட்டல்

பேடிஎம் நிறுவனத்தின் மதிப்பீடு உயர்ந்ததை அடுத்து ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த ரிலையன்ஸ் கேப்பிட்டல், சாமா கேப்பிட்டல் மற்றும் எஸ்ஏபி நிறுவனங்கள் ஆகியோர் தங்களது பங்குகளைச் சீனாவின் அலிபாபா நிறுவனத்திற்கு விற்றனர்.

இந்தியாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனத்தின் மதிப்பு குறைந்து வந்த நேரத்தில் பேடிஎம் நிறுவனத்தின் மதிப்பு அதிகரித்தது, முதலீட்டலர்களும் அதிகரித்தனர்.

 

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிளிப்கார்ட் நிறுவனத்தின் மதிப்பு 15.2 பில்லியன் டாலரில் இருந்து மோர்கன் ஸ்டான்லி, வாலிக் கோ, வான்கார்ட், ஃபெடிலிட்டி மற்றும் டி ரோவ் உடபடப் பல முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டின் மதிப்பைக் குறைத்ததால் 10 முதல் 12 பில்லியன் டாலர்களாகக் குறைந்தது.

கடந்த ஒரு வருடமாக முதலீட்டிற்காகப் போராடி வந்த பிளிப்கார்ட் அன்மையில் ஈபே மற்றும் சீனாவின் டென்செண்ட் நிறுவனங்களிடம் இருந்து 1.5 பில்லியன் பெறப் போவதாக அறிவித்துள்ளது.

 

ஸ்னாப்டீல்

ஸ்னாப்டீல்

இதே போன்று இந்தியாவின் மூன்றாம் மிகப் பெரிய ஸ்னாப்டீல் நிறுவனமும் தன்னுடைய மதிப்பில் 6.5 முதல் 7 பில்லியன் டாலரில் இருந்து 3 பில்லியன் டாலர்களாக இழந்தது. ஸ்னாப் டீல் நிறுவனமும் தன்னுடைய மிகப் பெரிய முதலீட்டாளரான ஜப்பானின் சாப்ட் பாங்க் நிறுவனத்திடம் இருந்து 100 முதல் 150 மில்லியன் டாலர்களைத் தற்போதைய நிறுவனத்தின் மதிப்பில் பெற இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Several Paytm staff become crorepatis by exercising their ESOPs in recent weeks

Several Paytm staff become crorepatis by exercising their ESOPs in recent weeks
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X