எவ்வளவு தள்ளுபடி கொடுத்தாலும்.. விற்க முடியலேயேப்பா.. 1,40,000 வாகனங்கள் தேக்கம்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

ஏப்ரல் 1,2017 முதல் பிஎஸ்-III ரக வாகனங்களை விற்பனை மற்றும் பதிவு செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் இந்தியாவில் அனைத்து ஆட்டோமொபைல் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்களும் தங்களிடம் இருக்கும் பிஎஸ்-III ரக வாகனங்களை விற்பனை செய்தாக வேண்டிய சூழ்நிலையில் தள்ளப்பட்டனர்.

இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில் வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்கள் இரு சக்கர வாகனத்திற்கு 5,000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாய் வரையிலான தள்ளுபடியை அறிவித்தனர்.

இதன் காரணமாக வாகன ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆனாலும் என்ன பயன்..?

என்ன பயன்

வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்கள் தள்ளுபடிகளை வாரி வழங்கியும், இந்தியா முழுவதும் சுமார் 1,40,000 பிஎஸ்-III ரக வாகனங்கள் விற்பனை ஆகாமல் தேக்கம் அடைந்துள்ளது.

முக்கிய நிறுவனம்

தேக்கம் அடைந்துள்ள 4 சக்கரம் மற்றும் அதற்கும் அதிகமான வாகனங்களில் டாடா மோட்டார்ஸ், ஆசோக் லெய்லாண்டு, மஹிந்திரா & மஹிந்திரா, வால்வோ ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பு விற்பனை ஆகாமல் முடங்கிக் கிடக்கிறது.

இந்த வாகனங்களின் மொத்த மதிப்பு 5,076 கோடி ரூபாய்.

 

இரு சக்கர வாகனங்கள்

இரு சக்கர வாகன பிரிவில் ஹீரோ மோட்டோகார்ப், ஹோண்டா, டிவிஎஸ் ஆகிய நிறுவனங்களின் 78,638 வாகனங்கள் தேக்கம் அடைந்துள்ளது. இதன் மதிப்பு

இந்த வாகனங்களின் மொத்த மதிப்பு 336 கோடி ரூபாய்.

 

நஷ்டம்

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து நிறுவனங்கள் 10-50 சதவீதம் வரையிலான ஆஃப்ரை அளித்த நிலையில், சுமார் 1,200 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.

குழப்பம்..

தற்போது நிறுவனங்களுக்கு இருக்கும் ஓரே வழி தேக்கம் அடைந்த வாகனங்களை ஏற்றுமதி செய்வது தான். காரணம் ஏற்றுமதி செய்யாவிட்டால் இந்தியா முழுவதும் இருக்கும் பிஎஸ்-III வாகனங்களைத் தொழிற்சாலைக்குக் கொண்டு வந்து அதனைப் பிஎஸ்-IV தரத்திற்கு மாற்ற வேண்டும். இது மிகவும் காஸ்ட்லியான வழி என்பதால் நிறுவனங்கள் அதனைத் தவிர்த்து வருகிறது.

இதனால் இவ்விரண்டுக்கும் மாற்று வழி ஏதேனும் உண்டா என்பதை ஆராய்ந்து வருகிறது.

 

மார்ச் 20

ஆட்டோமொபைல் உற்பத்தி அமைப்பு அளித்த தகவலின் படி மார்ச் 20 வரையில் இந்தியாவில் சுமார் 8,24,000 வாகனங்கள் இருந்துள்ளது. இதில் 6,71,000 இரு சக்கர வாகனங்கள், 96,700 வர்த்தக வாகனங்கள், 40,048 சக்கர வாகனங்கள், 16,198 பயணிகள் வாகனங்கள் என் புள்ளிவிவரங்களை SIAM அமைப்பு வெளியிட்டுள்ளது.

இதன் ஒட்டுமொத்த மதிப்பு 20,000 கோடிக்கும் அதிகம்.

 

90 சதவீதம்..

பொதுவாக 90 சதவீத இருசக்கர வாகனங்கள் இருப்பு நிலையிலேயே இயங்குவதால், உச்ச நீதிமன்றத்தின் அறிவிப்புக் காரணமாகச் சுமார் 40 சதவீத வாகனங்கள் தேக்கம் அடைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Despite heavy discounts, automakers stuck with 140,000 BS III vehicles

Despite heavy discounts, automakers stuck with 140,000 BS III vehicles
Story first published: Wednesday, April 12, 2017, 15:29 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns