ஐடி நிறுவனங்களின் சாட்டையில் இருந்து தப்பிக்க சூப்பர் ஐடியா..! #DoubleJackpot

Written By:
Subscribe to GoodReturns Tamil

இன்றைய நிலையில் நாட்டின் அனைத்து முக்கிய ஐடி நிறுவனங்களும் ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகிறனர். அமெரிக்க விசா கட்டுப்பாடுகள் மற்றும் டொனால்டு டிரம்ப்-ஐ காரணம் காட்டி ஊழியர்களை ஏமாற்றி வெளியேற்றி வருகிறது ஐடி நிறுவனங்கள்.

இந்நிலையில் இந்தப் பணிநீக்கத்தில் இருந்து உங்களைத் தற்காத்துக்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஐடி துறை

இந்திய ஐடி நிறுவனங்களில் இதுவரை செய்யப்பட்ட அனைத்துத் திட்டங்களிலும் (பிராஜெக்ட்) ஆட்டோமேஷன் அதிகளவில் பயன்படுத்திவிட்ட காரணத்தினால், ஊழியர்களின் தேவை குறைந்துள்ளது.

சர்வதேச சந்தைக்குத் தேவையான புதிய தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தாத காரணத்தால் இந்திய ஐடி நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்குத் தேவையற்றதாக மாறியுள்ளது. இதனால் வர்த்தகத்திலும் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இவை இரண்டின் காரணமாக மட்டுமே தற்போது ஐடி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள். இதில் டிரம் பங்கும் உண்டு ஆனால் மிகவும் சிறிய பங்கு.

 

என்ன செய்யலாம்..

ஐடி நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதற்கான காரணம் முழுமையாகத் தற்போது தெரிந்துள்ள நிலையில், அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.

பணிநீக்கத்தில் இருந்து தப்பிக்கவும், ஏதாவது ஒரு வழி கிடைக்காத என்று அனைவரும் தேடி வருகின்றனர்.

 

புதிய தொழில்நுட்பம்

தற்போது வெளிநாடுகளில் அதிகளவில் தேவைப்படும் புதிய டெக்னாலஜிகளை அறிந்து வைத்திருப்பதன் மூலம் பணிநீக்கத்தில் மட்டுமல்லாமல் நிறுவனத்தில் அதிகச் சம்பளத்தையும் வாங்கலாம்.

தற்போதைய நிலையில், புதிய தொழில்நுட்பத்திற்கான சேவையை இந்திய ஐடி நிறுவனங்கள் அளிக்காத நிலையில் வெளிநாட்டு நிறுவனங்கள் Freelancer வாயிலாகத் தங்களது தேவையைப் பூர்த்திச் செய்கிறார்கள்.

 

இது தான் தீர்வு..

எனவே பணிநீக்கத்தை எதிர்கொள்ள வேண்டும் எனத் திட்டமிடுபவர்கள் சந்தைக்குத் தேவைப்படும் புதிய தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்.

எந்த டெக்னாலஜி படிப்பது என்பதில் குழப்பமாக இருக்கும் ஐடி வாசகர்களுக்குத் தமிழ் குட்ரிட்டன்ஸ் பதில் வைத்துள்ளது. சமீபத்தில் அப்வொர்க் என்ற முன்னமி Freelancer எந்த டெக்னாலஜிக்கு அதிகம் சம்பளம் அளிக்கப்படுகிறது என்ற முக்கிய ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது.

 

#DoubleJackpot

புதிய தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்வதன் மூலம் உங்களது வேலைவாய்ப்பை காப்பது மட்டும் அல்லாமல் நீங்கள் எதிர்பார்க்காத சம்பளம் இந்த தொழில்நுட்பத்திற்கு கிடைக்கிறது. 

இதனால் உங்கள் வாழ்கையில் தரமே மாறிவிடும் வாய்ப்பு இது.

முதல் இடம்

இந்தப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருப்பது நேச்சுரல் லேங்குவேஜ் பிராசசிங் தொழில்நுட்பத்திற்குத் தான். இந்தத் தொழில்நுட்பம் ஆப்பிள் சிரி, அமேசான் எக்கோ, மைக்ரோசாப்ட் கார்டானா மற்றும் கூகிள் ஆகியவற்றிப் பயன்படுத்தப்படுகிறது.

இந்த டெக்னாலஜிக்கு ஒரு மணிநேர பணிக்குச் சராசரியாகச் சுமார் 123 அமெரிக்க டாலர் சம்பளமாகக் கொடுக்கப்படுகிறது.

 

டாப் 5 இடங்கள்

நேச்சுரல் லேங்குவேஜ் பிராசசிங் அடுத்த டாப் 5 இடங்களில் இடம்பிடித்திருப்பது Swift, டபுலே, அமேசான் மார்க்கெட் வெப் சர்விசஸ், Stripe ஆகியவை இடம்பெற்றுள்ளது.

#6வது இடம்

இன்ஸ்டகிராம் மார்க்கெட்டிங்

#7வது இடம்

MySQL புரோகிராமிங்

#8வது இடம்

Unbounce

#9வது இடம்

சோசியல் மீடியா மேனேஜ்மென்ட்

#10வது இடம்

ஆங்குளார் ஜேஎஸ்

#11வது இடம்

பிஸ்னஸ் கன்சல்டிங்

#12வது இடம்

மெஷின் லேர்னிங்

#13வது இடம்

பிரான்ட் ஸ்டார்டஜி

#14வது இடம்

3டி ரென்டரிங்

#15வது இடம்

இன்போர்மேஷன் செக்யூரிட்டி

#16வது இடம்

ஆர் டெவல்ப்மென்ட்

#17வது இடம்

நோடு ஜேஎஸ் டெவலப்மென்ட்

#18வது இடம்

யூசர் எக்ஸ்பீரியன்ஸ் டிசைன்

#19வது இடம்

ப்ளூடூத்

#20வது இடம்

சென்டெஸ்க் கஸ்டமர் சப்போர்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

worried about layoffs? Shortcut to win for IT Employees

worried about layoffs? Shortcut to win for IT Employees
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns