ஐடி ஊழியர்கள் மட்டுமல்ல.. அரசு ஊழியர்களும் பணிநீக்கம்.. மத்திய அரசின் திடீர் நடவடிக்கை..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

டெல்லி: இந்திய ஐடி நிறுவனங்களின் அறிவிக்கப்பட்டுள்ள பணிநீக்கம் குறித்த அறிவிப்புகள் ஒட்டுமொத்த இந்தியாவையே அதிரவைத்துள்ள நிலையில், அரசு பணியிடங்களில் ஜாலியாக ஒரு வேலையும் செய்யாத 129 அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு கட்டாய ஓய்வை அளித்து அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

இந்த அறிவிப்பை மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் உறுதிப்படுத்தினார்.

திறன்ஆய்வு

மத்திய அரசு பணியில் இருக்கும் ஊழியர்களைத் திறன்ஆய்வு செய்து மரகட்டையாக இருக்கும் ஊழியர்களை அரசுக்குத் தேவையில்லை என மத்திய அரசின் திடீர் நடவடிக்கையின் மூலம் கட்டாய ஓய்வை அளித்துள்ளது.

129 ஊழியர்கள்

இதன் படி கடந்த சில மாதங்களில் குரூப் ஏ பிரிவில் 30 பேரையும், குரூப் பி பிரிவில் 99 பேர் என மொத்தம் 129 மத்திய அரசு ஊழியர்களுக்குக் கட்டாய ஓய்வு என்ற பெயரில் பணியை விட்டு நீக்கியுள்ளது மத்திய அரசு.

ஆய்வு

இந்த அறிவிப்பை வெளியிடும் முன் மத்திய அரசு குரூப் ஏ பிரிவில் 24,000 ஊழியர்களையும், குரூப் பி பிரிவில் 42,251 ஊழியர்களின் செயல்திறனை ஆய்வு செய்து அதன் பின்னரே 129 ஊழியர்களை வேலையை விட்டுத் துரத்தியுள்ளது.

அடுத்தத் திட்டம்

இந்நிலையில் மத்திய அரசு அடுத்தகட்ட திட்டமாகக் குரூப் ஏ பிரிவில் 34,451 ஊழியர்களையும், குரூப் பி பிரிவில் 42,521 ஊழியர்களின் செயல்திறனை ஆய்வு
செய்ய முடிவு செய்துள்ளது.

இந்த ஆய்வில் non-performersஆகக் கருதப்படும் ஊழியர்கள் நிச்சயமாகப் பணியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

 

ஐஏஎஸ் அதிகாரி

கடந்த ஜனவரி மாதத்தில் மத்திய அரசு non-performer என்ற முத்திரை குத்தி உயர் ஐஏஎஸ் அதிகாரியை பணியைவிட்டு நீக்கியது.

350 கோடி ரூபாய்

அதேபோல் மத்திய பிரதேசத்தில் அரவிந்த் மற்றும் டினோ ஜோஷி என்கிற ஐஏஎஸ் தம்பதிகள் திடீரெனப் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். 4 வருடங்களுக்குப் பின் இவர்களின் வீட்டில் சோதனை நடத்தியபோது 350 கோடி ரூபாய் மதிப்புகள் சொத்துக்கள் மற்றும் 3 கோடி ரூபாய் ரொக்கம் இவர்கள் வீட்டில் இருந்து வருமான வரித்துறையினர் கைப்பற்றினர்.

ஆய்வு

மத்திய அரசு பொதுவாக அரசுப் பணியாளர்களின் செயல்திறன் குறித்த ஆய்வைப் பணியில் சேர்ந்து 15 வருடத்திலும், அதன் பின் 25 வருடத்திலும் ஆய்வு செய்வார்கள்.

இதனை ஒவ்வொரு வருடமும் செய்தால் அரசு சேவைகள் மிகவும் வேகமாகவும் சிறப்பாகவும் இருக்கும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Modi govt asks 129 'non-performing' officials to leave: Same Scenario in IT industry

Modi govt asks 129 'non-performing' officials to leave: Same Scenario in IT industry
Please Wait while comments are loading...
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns