ஐடி ஊழியர்களின் பணிநீக்கத்தை தடுக்க இன்போசிஸ் நாராணயமூர்த்தி கூறும் அசத்தலான ஐடியா..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

இந்திய ஐடி நிறுவனங்கள் பல்வேறு வர்த்தகம் மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காகச் சாரசரி அளவை விடவும் அதிகமான அளவிற்கு ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருகிறது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால் இதனை ஐடி நிறுவனங்களும், அதனை உயர் அதிகாரிகளும் தொடர்ந்து மறுத்து வருவதும் வேறு கதை.

இத்தகைய பணிநீக்கம் நடவடிக்கையை முழுமையாகத் தீர்க்கவும் குறைக்கவும் நிறுவனங்கள் மண்டையை உடைத்துக் கொண்டு யோசித்தி வருகம் நிலையில் இன்போசிஸ் நிறுவனரான நாராயணமூர்த்திச் சூப்பரான ஐடியா ஒன்றை பரிந்துரை செய்துள்ளார்.

இன்போசிஸ் நாராயணமூர்த்தி

இந்திய ஐடித்துறையில் இன்னும் எத்தனை ஆண்டுக் காலம் ஆனாலும் சரி இவரின் பெயர் மறையாது. காரணம் நாட்டின் தகவல் தொழில்நுட்ப வர்த்தம் இன்று இந்தியாவையும் தாண்டி உலக நாடுகளில் வெற்றி பெற்றுள்ளதற்கு இவர் முக்கியக் காரணம்.

இதனால் இவர் கூறும் ஐடியா கண்டிப்பாகப் பயனளிக்கும் என்பது உறுதி.

 

பணிநீக்கம்

தற்போது இருக்கும் வர்த்தகச் சூழ்நிலையில் பணிநீக்கத்தைக் குறைக்க வேண்டுமெனில், நிறுவனத்தில் உயர் அதிகாரிகளுக்கு அளிக்கப்படும் போனஸ், சம்பளம் ஆகியவற்றைக் குறைத்து விட்டு. அதில் கிடைக்கும் பெரிய தொகையை ஊழியர்களின் பயிற்சிக்குப் பயன்படுத்த வேண்டும்.

இதன் மூலம் பெரிய அளவிலான நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் வேலைவாய்ப்பையும், வருமானம் ஈட்டக்கூடி ஒரு ஊழியராக மாற்றப்படுவார்கள்.

 

பல முறை..

ஐடித்துறை வர்த்தகச் சிக்கலை சந்திக்கும் போது பலமுறை பணிநீக்கம் வெடித்துள்ளது. இதனால் உயர் அதிகாரிகள் ஒத்துழைத்தால், பல இளைஞர்களின் பணிகள் காப்பாற்றப்படும். இந்த ஒத்துழைப்புகளில் ஒன்று தான் சம்பளத்தைக் குறைத்தல்.

இதேபோன்ற நடவடிக்கையைத் தான் டாட் காம் பிரச்சனையில் நாங்கள் செய்தோம்.

 

புதிய வாய்ப்பு

இந்த இடைப்பட்ட காலத்தில் நிறுவனங்கள் சந்தையில் இருக்கும் புதிய வாய்ப்புகளைக் கண்டறிந்து அதற்கான பணிகளைச் செய்து நிறுவனத்திற்குப் புதிய வர்த்தகத்தையும், வாடிக்கையாளர்களையும் அளிக்க வேண்டும்.

இத்தகை சில நடவடிக்கையின் மூலம் ஐடி நிறுவனங்களின் பணிநீக்கம் இல்லாமல் செய்ய முடியும் என இன்போசிஸ் நாராயணமூர்த்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

நிலையான நிறுவனம்

பணிநீக்கத்தில் நிறுவனங்கள் சற்றுக் கூடுதலாக மனிதாபிமானம் அடிப்படையில் நடவடிக்கையை எடுக்க வேண்டும். இதன் மூலம் அனைத்தும் ஊழியர்களும் மகிழ்ச்சியுடனும் நிலையான நிறுவனத்தை உருவாக்க முடியும் என ஈடிநவ் சேனலுக்குப் பேட்டி அளிக்கும் போது நாராணயமூர்த்திக் கூறினார்.

யூனியன்-க்கு இடமில்லை..

மேலும் ஐடி நிறுவன தலைவர்கள் கருணையுள்ள முதலாளித்துவத்தைக் கடைப்பிடிக்கும் போது ஐடி நிறுவனங்களில் யூனியன்-க்கு இடமில்லை, அவசிமும் இல்லை என்றும் அவர் கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys Narayana Murthy suggests ways to stop Layoff in IT Industry

Infosys Narayana Murthy suggests ways to stop Layoff in IT Industry
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns