ஐடி ஊழியர்கள் கவனத்திற்கு: அதிகம் சம்பளம் வாங்க இதை ட்ரை பண்ணுங்க

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

150 பில்லியன் டாலர் வர்த்தகச் சந்தையைக் கொண்ட ஐடி துறை கடந்த சில மாதங்களாக இந்தியாவிலும் சரி உலக நாடுகளிலும் சரி பல பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது. இந்தத் திடீர் பிரச்சனைக்குக் காரணம் இந்திய ஐடி நிறுவன வெளிநாட்டு நிறுவனங்களை மட்டுமே நம்பி இயங்கி வந்ததால் தான்.

 

இதுமட்டும் அல்லாமல் வர்த்தகப் பாதிப்பை குறைக்க ஐடி நிறுவனங்கள் தங்களது லாபத்தை அதிகரிக்கவும், செலவுகளைக் குறைக்கவும் நிரந்தரத் தீர்வாக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருகிறது.

மறுப்பு

மறுப்பு

ஊழியர்கள் பணிநீக்கத்தைத் தொடர்ந்து அனைத்து நிறுவனமும் மறுத்து வந்தாலும் ஒவ்வொரு நாளும் ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறித் தான் வருகிறார்கள். இதை யாராலும் மறுக்க முடியது.

இப்படிப்பட்ட சூழ்நிலையிலேயே இந்தியா ஐடி ஊழியர்களும், நிறுவனங்களும் புதிய மந்திரத்தை உருவாக்கியுள்ளது.

என்ன செய்யவேண்டும்

என்ன செய்யவேண்டும்

இந்திய நிறுவனங்கள் அனைத்தும் ஆட்டோமேஷனில் அதிகளவில் கவனத்தைச் செலுத்தி வரும் நிலையில், ஊழியர்களின் தேவை தற்போது நிறுவனங்களில் அதிகளவில் குறைந்துள்ளது.

இதன் காரணமாக 10 பேர் செய்யும் வேலையை 2 அல்லது 3 பேர் கொண்டு எளிதாகச் செய்கிறது நிறுவனங்கள். இப்படித் தேவையில்லாமல் இருக்கும் 8 ஊழியர்களின் நிலைதான் பணிநீக்கம். இவர்கள் என்ன செய்யவேண்டும்..

புதிய டெக்னாலஜி
 

புதிய டெக்னாலஜி

தற்போதைய நிலையில் அனைத்துத் தொழில்நுட்ப வல்லுனர்களும் புதிய புதிய டெக்னாலஜிகளைப் படித்து வருகிறார்கள். அதிலும்...

கடந்த சில வருடங்களாக உலக நாடுகளில் அதிகம் பிரபலம் அடைந்து வரும் பிக் டேட்டா, மெஷின் லேர்னிங், sas, R, பைத்தான் ஆகியவை ஐடி நிறுவனங்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது. காரணம் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் தற்போது இந்த டெக்லானஜியில் தான் பயணித்து வருகிறது..

அதிகச் சம்பளம் அதிக டூல்கள்

அதிகச் சம்பளம் அதிக டூல்கள்

இந்நிலையில் தற்போது ஐடி ஊழியர்கள் அதிக எண்ணிக்கையிலான டூல்களைக் கற்றாலே அதிகச் சம்பளம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது சம்பளத்தைத் தாண்டி உறுதியாக வேலைக்கு உத்திரவாதம் அளிப்பதாக உள்ளது.

சரி எதைப் படிக்கலாம்...?

சரி எதைப் படிக்கலாம்...?

இன்று சந்தை வர்த்தகம் அனைத்தும் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆட்டோமேஷன்-ஐ சார்ந்து இயங்கி வருகிறது. இதனால் அடுத்த 10 முதல் 15 வருடத்திற்து பிக் டேட்டா மற்றும் மெஷின் லேர்னிங் அதிகளவிலான ஆளுமையில் இருக்கும்.

அதுமட்டும் அல்லாமல் தற்போது இருக்கும் சாரசரி அளவை விடவும் அதிகளவிலான சம்பளமும் கிடைக்கும்.

அப்படி எவ்வளவு சம்பளம் தருகிறார்கள்..?

அப்படி எவ்வளவு சம்பளம் தருகிறார்கள்..?

பிக் டேட்டா மட்டும் நீங்கள் தெரிந்துவைத்திருந்தால் 9.93 லட்சம் ரூபாய்

மெஷின் லேர்னிங் மட்டும் என்றால் 10.43 லட்சம் ரூபாய்

பிக் டேட்டா மற்றும் மெஷின் லேர்னிங் என்றால் 13.94 லட்சம்

இது அனைத்தும் சராசரி அளவுகள் மட்டுமே.

அடுத்தக் கட்டம்

அடுத்தக் கட்டம்

பிக் டேட்டா மற்றும் மெஷின் லேர்னிங் தாண்டி தற்போது ஐடி சந்தையில் முக்கியமாகப் பார்க்கப்படும் தொழில்நுட்பம் என்றால் sas, R, பைத்தான். இதற்கு எவ்வளவு சம்பளம்..?

SAS மட்டும் என்றால் 9.54 லட்சம் ரூபாய்

பைத்தான் மட்டும் என்றால் 10.12 லட்சம் ரூபாய்

R மட்டும் என்றால் 10.40 லட்சம் ரூபாய்

புதிய பார்மூலா

புதிய பார்மூலா

தற்போது இந்தியா ஐடி சந்தையில் அதிகச் சம்பளம் அதிக டூல்கள் என்பதே புதிய பார்மூலாவாக இருக்கும் நிலையில் இதற்கான சம்பளத்தையும் பார்க்கொள்ளுங்கள்

SAS மற்றும் R 10.67 லட்சம் ரூபாய்

SAS மற்றும் பைத்தான் 10.88 லட்சம் ரூபாய்

R மற்றும் பைத்தான் 11.26 லட்சம் ரூபாய்

SAS, R மற்றும் பைத்தான் 12.91 லட்சம் ரூபாய்

ஐடி ஊழியர்களே

ஐடி ஊழியர்களே

இப்போது முடிவு செய்துகொள்ளுங்கள் எதைப் படிக்கலாம் என்று.. இன்னும் வேறு ஏதேனும் முக்கியத் தொழில்நுட்பம் சந்தையில் பிரபலமாக உள்ளது, அதை மக்களும், சக ஐடி ஊழியர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்பினால்..

கருத்து பதிவிடும் இடத்தில் உங்களது கருத்தை பதிவிடவும்.

சாமானியர்கள் கவனிக்க வேண்டியவை

சாமானியர்கள் கவனிக்க வேண்டியவை

பர்ஸை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.. சாமானியர்கள் ஜிஎஸ்டி-யில் கவனிக்க வேண்டியவை..!

கோயம்புத்தூர் பேராசிரியர்

கோயம்புத்தூர் பேராசிரியர்

கோயம்புத்தூர் அம்ரிதா பல்கலைக்கழக பேராசிரியரால் இந்திய ராணுவத்திற்கு ரூ. 20,000 கோடி சேமிப்பு..!

சமோசா

சமோசா

கூகிள் வேலையை விட்டுவிட்டு சமோசா விற்க சென்ற முனாப் கபாடியா..!

வீட்டு கடன்

வீட்டு கடன்

இனி குறைவான வட்டியில் வீட்டு கடன்.. ஆர்பிஐ அறிவித்த புதிய தளர்வுகள்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Dear IT people: More Tools, More Salary is New mantra

Dear IT people: More Tools, More Salary is New mantra - Tamil Goodreturns | ஐடி ஊழியர்கள் கவனத்திற்கு: அதிகம் சம்பளம் வாங்க இதை ட்ரை பண்ணுங்க - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X