மக்களின் ஆன்லைன் ஷாப்பிங்-ஐ கண்காணிக்க மத்திய அரசு முடிவு.. எதற்காகத் தெரியுமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இணையதளத்தில் அதிகளவில் ஷாப்பிங் செய்பவரா நீங்கள்..? எதை வாங்குகிறீர்கள்..? எவ்வளவு வாங்குகிறீர்கள்..? என்பதை அரசு இனி கண்காணிக்கப் போகிறது.

 

ஆம், அரசு தனது செலவின ஆய்வு அறிக்கையில் முதல் முறையாக ஆன்லைன் ஷாப்பிங் பழக்கும் குறித்த கேள்விகளைச் சேர்த்துள்ளது.

ஜூலை மாதம் முதல்..

ஜூலை மாதம் முதல்..

நாடு முழுவதும் நுகர்வோர் செலவினம் குறித்து தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு (National Sample Survey Organisation) கணக்கெடுப்புச் செய்ய உள்ளது. இந்த அமைப்பு புள்ளியியல் அமைச்சகத்தின் கீழ் வருகிறது, இந்தக் கணக்கெடுப்பு வருகிற ஜூலை மாதம் முதல், ஜூன் 2018 வரை நடக்க உள்ளது.

இந்தக் கணக்கெடுப்பின் மூலம் ஒரு வீட்டு, சரக்கு மற்றும் பொருட்களில் எவ்வளவு செலவு செய்கிறது என்பது தகவல்கள் கிடைப்பது மட்டுமல்லாமல், கிராமங்கள் மற்றும் நகரங்களிலும் இதில் உள்ள வேறுபாடு யாவை என்பதைக் கண்டறிய முடியும்.

ஈகாமர்ஸ்

ஈகாமர்ஸ்

இன்றைய நிலை ஆன்லைன் ஷாப்பிங் என்பது பெரு நகரங்களைத் தாண்டி, 2வது மற்றும் 3வது தர நகரங்களிலும் சென்று மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வரும் நிலையில், நுகர்வோர் செலவினம் கணக்கெடுப்பு குறித்து ஆலோசனை செய்யும் போது ஈகாமர்ஸ் குறித்த கேள்விகளையும் புகுத்த முடிவு செய்தோம்.

வளர்ச்சி
 

வளர்ச்சி

இந்தியாவின் மொத்த நுகர்வோர் செலவின சந்தையான 750 பில்லியன் டாலரில், மொத்த ஈகாமர்ஸ் சந்தையின் மதிப்பு 14.5 பில்லியன் டாலராக மட்டுமே இருந்தாலும், இத்துறை நுகர்வோர் சந்தையில் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது.

ஆசிய பசிபிக் சந்தை...

ஆசிய பசிபிக் சந்தை...

2021ஆம் ஆண்டு ஆசிய பசிபிக் சந்தையில் செய்யப்படும் நுகர்வோர் விற்பனை சந்தையில் 5இல் 1 பங்கு, இணையதளத்தின் வாயிலாக மட்டுமே நடக்கும். இதில் சீனா முதல் இடத்திலும், இந்தியா வேகமாக வளரும் சந்தையிலும் இருக்கும் என அமெரிக்க ஆய்வு நிறுவனமான Forrester தெரிவித்துள்ளது.

கணக்கெடுப்பு

கணக்கெடுப்பு

தற்போது தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு செய்யும் கணக்கெடுப்பு இந்தியாவின் 1.2 லட்சம் வீடுகளில் செய்யப்பட உள்ளது. இதில் 5,000 நகரங்கள், 7,000 கிராமங்கள் இடம்பெறும். மேலும் இதில் மாநில வாரியான தகவல்களும் கிடைக்கும்.

பணவீக்கம்

பணவீக்கம்

இந்தக் கணக்கெடுப்பில் ஆன்லைன் ஷாப்பிங் செய்வது குறித்துப் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள கேள்விகளின் முக்கியக் காரணம், ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் இருக்கும் விலை நிலைகளால் நாட்டின் பணவீக்கம் பாதிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யவே.

அமெரிக்கா

அமெரிக்கா

இந்தியா அரசு மக்களின் ஆன்லைன் ஷாப்பிங் பழக்கத்தைக் கணக்கெடுப்பின் மூலம் ஆய்வு செய்கிறது, அமெரிக்கப் போன்ற பெரு நகரங்கள் மக்களின் வங்கி செயல்பாடு, நிறுவனங்களிடம் திரட்டப்பட்ட தகவல்கள் ஆகியவற்றை வைத்துக் கணக்கெடுப்பை நடத்துகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Government plans to check your online shopping habits

Government plans to check your online shopping habits
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X