ரேஷன் கடைகளை நிரந்தரமாக மூடும் திட்டத்தில் மத்திய அரசு.. விரைவில் தமிழகம்..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

பிரதமர் நரேந்திர மோடி விரைவில் நாடு முழுவதும் பொது விநியோக திட்டத்தினை நீக்கிவிட்டு பயனாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாகப் பணத்தினை டெப்பாசி செய்யும் முறையினை அறிமுகச் செய்ய இருப்பதாகவும், இதன் முதற் கட்ட பரிசோதனை புதுச்சேரி மற்றும் ஹரியானாவில் வெற்றி அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தில்லி, ஜம்மு காஷ்மீர், ஹரியானா, பஞ்சாப், உத்தரகண்ட், இமாசலப் பிரதேசம் மற்றும் சண்டிகர் ஆகிய மாநில பாஜக அமைச்சர்களுடன் நடைபெற்ற விவாதத்தினை அடுத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

புதுச்சேரி

ஹரியானா மற்றும் புதுச்சேரியில் முழுமையான பொது விந்யோக திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஏழைகள் நேரடியாக மானிய தொகையினை வங்கி கணக்கில் பெற்று வருவதாகவும் இதே முறையினைப் பிற இந்திய மாநிலங்களிலும் அமலுக்குக் கொண்டு வர இருப்பதாக மோடி திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.

மண்ணெண்ணெய் இல்லாமல் மாநிலம்

ஹரியானா மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்களில் முழுமையாக மண்ணெண்ணெய் இல்லாமல் மாநிலமாக மாற்றிய பிறகு ஊழல் குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது என்றும் மோடி தெரிவித்தார்.

ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பொருட்கள்

பொது விநியோக திட்டங்களின் கீழ் இந்திய உணவுக் கழகம் மூலமாக ரேஷன் கடைகளில் இந்தியா முழுவதும் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், பொன்ற உணவு தானியங்கள் போன்றவற்றைக் குறைந்த விலையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மத்திய அரசு அளித்து வருகின்றது.

ஜிஎஸ்டி மீது நேர்மறையான கருத்து

சட்ட மன்ற உறுப்பினர்களும் மோடிக்கு ஜிஎஸ்டி மீது நேர்மறையான கருத்து தெரிவித்ததோடு, புதிய சட்ட திருத்தம் சிறிய வணிக முயற்சிகளுக்கு உற்சாகம் அளித்துள்ளது என்று கூறியுள்ளனர்.

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி வரி ஆட்சி முறையினை ஒருமனதாக நாடு முழுவதும் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது. சிறு வணிகர்களும் தங்களை ஜிஎஸ்டி-ன் கீழ் பதிவு செய்ய முன்வந்துள்ளனர். இதுவே ஜிஎஸ்டி சங்கிலி வெற்றி பெற்று வருதற்கான காரணமாக அமைந்துள்ளது என்று மோடி தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Like Haryana & Puducherry PDS scrap model soon in other states as well: PM MOdi

Like Haryana & Puducherry PDS scrap model soon in other states as well: PM MOdi
Please Wait while comments are loading...
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns