உன் வாழ்க்கை உன் கையில்.. ஐடி ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

இந்திய மட்டுமல்ல உலகம் முழுவதிலும் எப்போதும் நாம் பார்த்திராத ஒரு மிகப்பெரிய டெக்னாலஜி அலைகள் வருகிறது, இந்த அலையில் நீங்கள் தப்பிக்க வேண்டுமெனில் புதிய டெக்னாலஜிகளை கற்றுக்கொள்ளுங்கள்.

இல்லையெனில் பணியில் இருந்து வெளியேற தயாராகுங்கள். மேலும் புதிய தொழில்நுட்பத்தில் நிறுவனங்கள் பயிற்சி அளிக்காது, நீங்கள் தான் அதற்கான பணிகளை செய்ய வேண்டும். இல்லையெனில் நிறுவனத்தில் வெளியேற வேண்டியது நிச்சயம் என டெல் மற்றும் விஎம்வேர் நிறுவனத்தின் சிஐஓ மற்றும் நிர்வாக துணை தலைவர் பாஸ்க் ஐயர் ஐடி ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பணிநீக்கம் கிடையாது..

என்னுடைய நிறுவனத்தில் இருக்கும் ஊழியர்கள் அனைவரும் வருவாய் ஈட்டும் ஒருவராகவும், வர்த்தகத்திற்கு ஏதுவான ஊழியர்களாவும் இருக்கும் வகையில் வைத்துக்கொள்வேன்.

ஊழியர்களை புதிய மற்றும் நிர்வாகத்திற்கு தேவையான பயிற்சி பெற உறுதி செய்துக்கொண்டு, பணிநீக்கத்தில் அவர்களை காப்பாற்றுவேன் என பாஸ்க் ஐயர் கூறினார்.

 

நிறுவனம்...

ரீஸ்கில்ங் என ஐடி நிறுவனங்கள் தொடர்ந்து பேசி வந்தாலும், அவர்களுக்கு எந்த டெக்னாலதியில் பயிற்சி அளிக்க வேண்டும் என்பது தெரியாது, சொல்லப்போனால் சந்தை தற்போது இருக்கும் சூழ்நிலையில், நிறுவனங்களுக்கு பெரிய தொகை முதலீடு செய்து ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க முன்வராது.

ஊழியர்கள் கையில்..

எனவே ஊழியர்கள் தங்களது தேவையை மற்றும் சந்தையை புரிந்துக்கொண்டு, தங்களகு திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில் அடுத்த சில மாதங்களில் மோசமான சூழ்நிலையை சந்திக்க வேண்டியிருக்கும்.

ஐடி துறை

புதிய டெக்னாலஜிகள் ஐடி நிறுவனங்களின் வர்த்தகம் மற்றும் வர்த்தக முறையை முழுமையாக மாற்றி வருகிறது. ஆட்டோமேஷன் மற்றும் கிளவுட் கம்பியூடிங் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ள காரணத்தால் தற்போது மென்பொருள் சேவை மற்றும் மெயின்டனென்ஸ் பிரிவில் மிகவும் குறைவான வர்த்தக்ததை மட்டுமே உள்ளது.

இந்தியாவில் மிகவும் மோசம்..

இந்தியாவில் இந்த மாற்றத்தை ஏற்க நிறுவனங்களே பயப்படும் நிலையில் ஊழியர்களின் நிலை மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது.

மேலும் இந்திய ஊழியர்களின் திறன் மீது தொடர்ந்து குறைகாணும் பன்னாட்டு நிறுவனங்களை சமாளிப்பது சற்று கூடுதல் சுமை தான்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IT employees reskill: do it yourself or be ready to leave

IT employees reskill: do it yourself or be ready to leave
Story first published: Friday, August 4, 2017, 17:22 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns