நாட்டின் பாதுகாப்பை காக்கும் மதுரையில் பிறந்த பெண்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

அருண் ஜேட்லி நிதி அமைச்சகத்துடன் கூடுதல் பொறுப்பாக பாதுக்காப்பு துறையை கவனித்து வந்த நிலையில், சமீபத்தில் நடந்த அமைச்சரைவை மாற்றத்தில் நிர்மலா சீதாராமன் நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இந்திய பாதுக்காப்பு துறை அமைச்சராக முழு நேர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட முதல் பெண்மனி நிர்மலா சீதாராமன் தான் என்பது இவருக்கு தனி பெறுமை.

பிறந்த இடம்..

ஆகஸ்ட் 18, 1959ஆம் ஆண்டு நிர்மலா சீதாராமன் மதுரையில் பிறந்தார்.

இவரது தந்தை திருச்சி அருகில் இருக்கும் முசிறி-யை சேர்ந்த நாராயண சீதாராமன் ஆவார், அவரது தாய் சேலம், திருவென்காடு பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாராயண சீதாராமன் இந்திய ரயில்வேயில் பணிபுரிந்த காரணத்தால், இந்தியாவில் பல பகுதிகளில் நிர்மலா சீதாராமன் வாழ்ந்து வந்தார்.

கல்வி

நிர்மலா சீதாராமன் தனது பள்ளி கல்வியை சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளியில் முடித்தார். அதன் பின் திருச்சிராப்பள்ளி சீதாலக்ஷிமி ராமசாமி கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார்.

இதை தொடர்ந்து பொருளாதாரத்தில் முதுகலை பட்டத்தை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பெற்றார். இப்போது நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு டெக்ஸ்டைல் துறையில் ஆர்வம் மிகவும் அதிகமாக இருந்த காரணத்தால் இந்திய ஐரோப்பிய டெக்ஸ்டைல் வர்த்தகம் குறித்து பிஎச்டி ஆய்வை மேற்கொண்டார்.

 

பணி அனுபவம்

இதன் பின் லண்டனில் Agricultural Engineers Association அமைப்பின் பொருளாதார வல்லுனருக்கு உதவியாக பணியாற்றினார் நிர்மலா, இதை தொடர்ந்து பிரைஸ் வாட்டர்ஹவுஸ் நிறுவனத்தில் ஆய்வு மற்றும் ஆராய்ச்சி பிரிவில் உயர் மேலாளராக பணியாற்றினார்.

இந்த பணிக்காலத்தில் அவர் பிபிசி வோல்டு சர்வீஸிலும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்தியா...

லண்டனில் இருந்த இந்தியா வந்த நிர்மலா சீதாராமன் ஹைதரபாத்தில் இருக்கும் பொது கொள்கை ஆய்வு மையத்தின் துணை தலைவராக பணியாற்றினார்.

பள்ளி துவக்கம்

கல்வியில் மீது இவருக்கு இருந்த ஆர்வம் ஹைதரபாத்தில் Parnava என்ற பள்ளியை துவக்க முக்கிய காரணமாக அமைந்தது. மேலும் 2003-2005ஆம் ஆண்டுகலில் பெண்களுக்கான தேசிய அமைப்பில் முக்கிய உறுப்பினராக இருந்தார். அதுமட்டும் அல்லாமல் பெண்களுக்கான உரிமை கோரும் பல பிரச்சனைகளுக்கு நிர்மலா குரல் கொடுத்துள்ளார்.

பிஜேபி

2008ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார், கட்சியில் இணைந்த சில மாதங்களிலேயே நேசிய நிர்வாக குழுவில் உறுப்பினராக பணியாற்றினார்.

கட்சியில் முழுநேரம் பணியாற்ற துவங்கியபோது 2010ஆம் ஆண்டு பிஜேபி கட்சியின் செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டார்.

 

அமைச்சர்

அதன் பின் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பின்னர் 26 மே 2014ஆம் ஆண்டு காமர்ஸ் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் மாநில அமைச்சராக பதவியேற்றார்.

பாதுகாப்பு அமைச்சர்

சமீபத்தில் செய்யப்பட்ட அமைச்சரவை மாற்றத்தில் நிர்மலா சீதாராமன் நாட்டின் முதல் பாதுகாப்பு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவருடைய பாதுகாப்பு அமைச்சர் பணி செப் 07, இன்று முதல் துவங்குகிறது.

கணவர் மற்றும் மகள்

இவர் டாக்டர் பிராகலா பிரபாகரன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ் கல்லூரிகளில் பட்டம்பெற்றவர். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் உள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nirmala Sitharaman charge as Defence Minister of india

Nirmala Sitharaman charge as Defence Minister of india | நாட்டின் பாதுகாப்பை காக்கும் மதுரை பெண்..!
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns