இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயிகளின் வருமானம், உணவு பொருட்களின் விலை சரிவால் அதிகளவில் குறைந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டு விவசாயிகளைத் தொடர்ந்து நாடு முழுவதிலும் இருக்கும் விவசாயிகள் போராட்டத்தில் இறங்க முடிவு செய்துள்ளனர்.
நாட்டின் பொருளாதார வீழ்ச்சியையும், உற்பத்தி துறையில் ஏற்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் குறைப்பு ஆகியவற்றைக் கவனித்து வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு விவசாயிகளின் போராட்டம் மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

கேள்விக்குறி
இதனுடன் நாட்டின் வகைப்படுத்தாத விவசாயப் பொருளாதாரம் தற்போது மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ள நிலையில், மோடி ஆட்சிக்கு வரும் முன்பு தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியாக வேண்டிய கட்டாயச் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். காரணம் 2019ஆம் ஆண்டுத் தேர்தல்..!!

13 நாட்கள் போராட்டம்..
தமிழ்நாடு விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருவதைப் போல், செப்டம்பர் 15ஆம் தேதி பிஜேபி ஆட்சி செய்யும் ராஜஸ்தான் மாநிலத்துடன் இணைந்து உத்திர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநில விவசாயிகள் சுமார் 13 நாட்கள் போராட்டம் நடத்தியனர்.
இதன் பின் மாநில அரசுகள் விவசாயிகளின் கடனை சில தள்ளுபடிகளை அறிவித்த நிலையில் அது விவசாயிகளுக்குப் போதுமானதாக இல்லை.

ஆக்டோபர் 30
இந்நிலையில் அனைத்திந்திய விவசாயிகள் அமைப்பில் இருக்கும் 1.5 கோடி விவசாயிகள் இருட்டில் இருக்கும் மாநில அரசுகளுக்கு வெளிச்சத்தைக் காட்ட தேசிய அளவிலான போராட்டத்தை வருகிற அக்டோபர் 30 நடத்த உள்ளதாக இவ்வமைப்பின் தலைவர் அமர ராம் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் வருமானம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், வேறு வேலைக்குச் செல்ல முடியாமல் இருக்கும் எங்களுக்குப் போராட்டத்தை வேறு வழியில்லை எனத் தெரிவித்தார் அமர ராம் (60).

நவம்பர் 17
இதனைத் தொடர்ந்து விவசாயிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்களில் இருக்கும் 3 கோடி உறுப்பினர்கள் அரசு திட்டங்களை எதிர்த்து நாடாளுமன்றத்தை நோக்கி நடந்து போராட்டம் செய்ய வருகிற நவம்பர் 17ஆம் தேதி முடிவு செய்துள்ளனர்.

விவசாயத் துறை
இந்தியாவில் இருக்கும் ஊழியர்கள் எண்ணிக்கையில் 50 சதவீதம் பேர் விவசாயத் துறையில் மட்டுமே நம்பியுள்ளனர். இந்நிலையில் மோடி அறிவித்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் பயன்பாட்டுத் தடை விவசாயப் பொருட்களின் விலையில் அதிகளவிலான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் தேர்தல்
இதற்குச் சந்தையில் பலவிதமான எதிர்ப்புகள் இருந்தாலும் விவசாயத் துறையில் நல்ல வரவேற்பு கிடைத்து, இதனை அடிப்படையாக வைத்தே உத்தரிபிரதேச மாநில தேர்தலில் பிஜேபி வென்றது குறிப்பிடத்தக்கது.
ஆனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதே விவசாயிகள் தான்.

ஜிஎஸ்டி
பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் ஏற்பட்ட பாதிப்புகளைக் களைவதற்கு முன்னதாகவே எவ்வித திட்டமிடலும் இல்லாமல் அவசரஅவசரமாகச் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டியை மத்திய அரசு அமலாக்கம் செய்யது இதில் சப்ளை செயின் துறை அதிகளவில் பாதிக்கப்பட்டதன் மூலம் நுகர்வோர் பொருட்களின் விலையில் அதிகளவிலான மாற்றங்கள் ஏற்படுத்தியது.
ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்டது பருவமழை காலம் என்பது குறிப்பிடத்தக்கது.

சக்தி
விவசாயிகளுக்கு இந்தியாவில் எந்தொரு ஆட்சியையும் அடியோடும் களைத்திடும் சக்தி உள்ளது. தற்போது ஆட்சியில் இருக்கும் மோடி தலைமையிலான அரசின் மீது விவசாயிகள் எதிர்த்தால் என்ன நடக்கும் என்பது அவர்களுக்கும் தெரியும்.
ஆகவே இந்த இரண்டு போராட்டங்கள் நடக்கும் முன்னரே விவசாயிகளுக்காக ஒரு சாதகமான அறிவிப்பை வெளியிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது மத்திய அரசு.

எதிர்க்கட்சிகள்
தற்போது எதிர்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் 2019ஆம் ஆண்டுத் தேர்தல் பிரச்சாரத்தில் தற்போது விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகளை முக்கியமாகக் கொண்டு பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இப்போது என்ன செய்யப்போகிறார் மோடி..?!