டிடிஎச் நிறுவனத்தின் 25% பங்குகளை நெட்டிள் இன்ஃப்ராவிற்கு அளிக்கும் பார்தி ஏர்டெல்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பார்தி டெலிமிடியாவின் கீழ் உள்ள டிடிஎச் நிறுவனத்தின் 25 சதவீத பங்குகளைத் துணை நிறுவனமான நெட்டிள் இன்ஃப்ராவிற்கு அளிக்க இருப்பதாகப் பார்தி ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

2018-ம் ஆண்டு ஜனவர் 18ம் தேதி நிறுவனத்தின் முக்கியக் குழு உறுப்பினர்கள் அடங்கிய கூட்டத்தில் இதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது.

நெட்டிள் இன்ஃப்ரா
 

நெட்டிள் இன்ஃப்ரா

நெட்டிள் இன்ஃப்ரா நிறுவனம் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்த நிறுவனத்திற்குத் தான் 25 சதவீத டிடிஎச் பங்குகளை வழங்க உள்ளதாக மும்பை பங்கு சந்தைக்குத் தெரிவித்துள்ளனர்.

பரிவர்த்தனை எப்போது?

பரிவர்த்தனை எப்போது?

இந்தப் பரிவர்த்தனை எப்போது முழுமை அடையும் என்று விவரங்களை ஏர்டெல் தெரிவிக்கவில்லை. ஆனால் டிசம்பர் மாதம் ஏர்டெல் நிறுவனம் தங்களது 20 சதவீத பார்தி டெலிமீடியா பங்குகளைத் தனியார் ஈக்விட்டி நிறுவனமான வார்பர்க் பின்கஸ்க்கு 350 மில்லியன் டாலர் அதாவது 2,310 கோடி ரூபாய்க்கு விற்க முடிவு செய்துள்ளது.

இரண்டும் வெவ்வேறு

இரண்டும் வெவ்வேறு

நெட்டிள் இன்ஃப்ராவிற்கு அளிக்கும் பங்குகளுக்கும், வார்பர்க் பின்கஸ்க்கு விற்கப்படும் பங்குகளுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று ஏர்டெல் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்துடன் பகிர்ந்துகொண்டார்.

 ஏர்டெல் டெலிமீடியா

ஏர்டெல் டெலிமீடியா

வார்பர்க் பின்கஸ் நிறுவனத்துடனான பரிவர்த்தனை நல்லபடியாக முடிந்தால் ஏர்டெல் நிறுவனத்திடம் 80 சதவீத பார்தி டெலிமீடியாவின் பங்குகள் இருக்கும்.

இண்டோ டெலிபோர்ட்ஸ்
 

இண்டோ டெலிபோர்ட்ஸ்

அது மட்டும் இல்லாமல் ஏர்டெல் நிறுவனம் தங்களது துணை நிறுவனமான இண்டோ டெலிபோர்ட்ஸ் நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை ஏர்டெல் நிறுவனம் 2.3 கோடி ரூபாய் கொடுத்து வாங்க முடிவு செய்துள்ளது எனத் தெரிவித்துள்ளது. ஏற்கனவே பார்தி ஏர்டெல் நிறுவனத்திடம் இண்டோ டெலிபோர்ட்ஸ் நிறுவனத்தின் 95 சதவீத பங்குகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bharti Airtel transfers 25 pc stake in DTH arm to Nettle Infra

Bharti Airtel transfers 25 pc stake in DTH arm to Nettle Infra
Story first published: Saturday, January 20, 2018, 16:39 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?