ஆப்பிள் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? வருகிறது இந்தியர்களுக்கான 4,000 வேலை வாய்ப்புகள்..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

ஐடி ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. விரைவில் ஆப்பிள் நிறுவனம் 4,000 இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பினை அளிக்க உள்ளது.

இந்திய பயனர்களுக்கு ஏற்ற வகையில் ஆப்பிள் நிறுவனம் மேப்ஸ் மற்றும் பிற தயாரிப்புகளை உருவாக்கி வருவதாகவும் இதனால் 4,000 நபர்களுக்கும் அதிகமான வேலை வாய்ப்பினை பெறுவார்கள் என்று அமெரிக்க ஆப்பிள் அலுவலகத்தில் இருந்து தகவல்கள் வந்துள்ளது.

பெங்களூரு அலுவலகம்

2017-ம் ஆண்டு அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் பெங்களூரு பீனியாவில் தனது நிறுவனத்தினைத் துவங்கியது மட்டும் இல்லாமல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு ஐஓஎஸ் குறித்த பயிற்சியையும் அளித்துள்ளது.

ஐஓஎஸ்

ஐஓஎஸ் மொபைல் இயங்குதளமானது ஆப்பிள் மொபைல் போனில் மட்டும் செயல்படும். ஆப்பிள் ஐபோன், ஐபாடு டச் அல்லது ஐபாடு போன்றவற்றுக்குச் செயலிகளை ஒருவர் உருவக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு ஐஓஎஸ் டெவலப்பர்களின் உதவி தேவைப்படும்.

இந்திய ஐபோன் ஆப்ஸ்

இந்தியாவில் இருந்து மட்டும் ஆப்பிள் ஸ்டோருக்காக 1,00,000-க்கும் அதிகமான செயலிகளை உருவாக்கியுள்ளனர் என்றும், 2016-ம் ஆண்டில் மட்டும் 57 சதவீத செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் குரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

செயலி - வேலை வாய்ப்பு

இன்றைய ஸ்மார்ட்போன் உலகில் 7,40,000 அதிகமான செயலிகளை உறவாக்கும் பணி வாய்ப்புகள் உருவாக இருப்பதாக ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது.

ஆப்பிள் இந்தியா

இந்தியாவில் இருந்து 2017-ம் ஆண்டு ஆப்பிள் ஐபோன் எஸ்ஈ தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தாலும் ஆப்பிள் நிறுவனத்திற்கு அதில் திருப்தி இல்லை என்றும் விரைவில் இந்தியர்களுக்கு ஏற்ற ஆப்பிள் போன் மாடல்கள் வரும் என்றும் கூறுகின்றனர்.

இந்திய வாடிக்கையாளர்கள்

இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாரு இந்தி தட்டச்சு கீபோர்டு மற்றும் பிற மொழி கீபோர்டு, மேப்ஸ், கிரிக்கெட் செயலி போன்றவற்றை வெளியிட இருப்பதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப்பிள் மேப்ஸ்

ஆப்பிள் நிறுவனத்தின் மேப்ஸ் செயலிக்காக ஹைதராபாத்தில் இருந்து பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், அதன் அடுத்தகட்டமாக 4,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பும் ஆப்பிள் நிறுவனம் அளிக்க உள்ளது என்றும் கூறியுள்ளனர்.

ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனத்தில் வேலைகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தினைப் பார்க்கலாம். ஆப்பிளில் பணிபுரியும் ஊழியர்கள் இங்கே உற்பத்திகளை மட்டும் உருவாக்கவில்லை - அவை முழுத் தொழில்களிலும் புரட்சியை ஏற்படுத்தியுள்ள அதிசயத்தை உருவாக்குகின்றன.

ஊழியர்களுக்கான வசதி

ஆப்பிள் என்பது, சமமான வாய்ப்பினை வழங்குதல் மற்றும் பன்முகத்தன்மைக்கு உறுதுணையாக உள்ளது, மேலும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் வேலைவாய்ப்பு மற்றும் மேம்பாட்டு வாய்ப்புகளை வழங்குவதற்கான உறுதியான நடவடிக்கைகளையும் எடுத்துக்கொள்கிறோம். ஆப்பிள் நிறுவனம், உடல் மற்றும் மனநல குறைபாடுகளுடன் விண்ணப்பதாரர்களுக்கு நியாயமான விடுதிகளை வழங்குவதற்கும், வழங்குவதற்கும் உறுதியளித்துள்ளது. மருந்துகள் ஏதும் பயன்படுத்தாத பணியிட வசதியை ஆப்பிள் அளித்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Want to work with Apple? Get ready for 4000 new jobs to India

Want to work with Apple? Get ready for 4000 new jobs to India
Story first published: Saturday, January 20, 2018, 13:54 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns