விளை நிலங்களைப் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து வாங்கி சொகுசு பங்களா கட்டிய ஷாருக்கான்..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கான் விளை நிலங்களைப் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து வாங்கிச் சொகுசு பங்களா கட்டியுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்தத் தகவலை ஷாருக்கானின் முன்னால் பட்டைய கணக்கரான மோரேஷ்வர் அஜாகோன்கர் வருமான வரி சோதனையின் போது தெரிவித்துள்ளார்.

மோசடி மற்றும் விதி மீறல்

விவசாயம் செய்வதற்காக நிலம் வாங்குவதாகக் கணக்கு காண்பித்து அதில் ஆடம்பரமான சொகுசு பங்களாவை கட்டியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் கடல் கரையோர பாதுகாப்பு விதிகளை மீறியுள்ளதாகவும் ஷார்க்கான் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அம்சங்கள்

இவர் கட்டியுள்ள பங்களாவின் பின் புறம் 19,960 சதுர மீட்டரில் தனியார் ஹெலிபேடு மற்றும் நீச்சல் குளம் ஒன்றைக் கட்டியுள்ளார்.

போட்டுக்கொடுத்த அஜாகோன்கர்

வருமான துறையுடன் நடைபெற்ற விசாரணையில் 90 வயது ஆன அஜாகோன்கர் அலிபாகில் தன்னைப் போலி ஆவணங்கள் தயார் செய்ய வைத்துத் தான் நிலங்களை வாங்கினார் என்று கூறியுள்ளார்.

எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது?

மாநில வருவாய் துறை பயன்படுத்தும் 7/12 என்ற ஆவணம் மூலமாக இடத்தின் சொந்தக்காரர் மற்றும் விவசாயம் நிலம், அளவு போன்றவற்றின் மூலம் ஷாருக்கான் மோசடி செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.

கூகுள் மேப்ஸ்

1991-ம் ஆண்டு வரை அந்த இடத்தில் வேறு ஒரு பங்களா இருந்ததாகவும் போலி ஆவணம் ஒன்றைத் தயார் செய்துள்ளனர். ஏன் 2003-ம் ஆண்டு வரை அந்த இடத்தில் எந்த ஒரு பங்களாவும் இல்லை கூகுள் மேப்ஸிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

செலவு

ஷாருக்கானின் தேஜா வு ஃபார்ம்ஸ் நிறுவனமும் இந்த இடத்தில் பங்களா கட்டியதிற்கு 16 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. ஆனால் வருமான வரி துறையினர் இந்தப் பங்களா கட்ட மட்டும் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் செலவு செய்யப்பட்டு இருப்பதாகக் கூறுகின்றனர்.

ஆவணங்கள்

இந்த மோசடி குறித்த முக்கிய ஆவணங்கள் தேஜா வு ஃபார்ம்ஸ் நிறுவனத்தில் இருந்து கிடைத்துள்ளதாகவும் இந்தப் பங்களாவுடன் சேர்த்து ஷாருக்கான் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SRK asked me to buy Alibag plots using forged papers, actor's chartered accountant Moreshwar Ajgaonkar

SRK asked me to buy Alibag plots using forged papers, actor's chartered accountant Moreshwar Ajgaonkar
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns