ஐடி ஊழியர்களுக்கு அதிர்ச்சி தகவல்.. ஆட்டோமேஷன் மூலம் 3 கட்ட பாதிப்பு..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

மென்பொருள் உலகில் பணியாற்றும் லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு இன்று மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது ஹெச்1பி விசாவோ, சம்பளமோ அல்ல.. இருக்கும் வேலையைப் பிடுங்கும் ஆட்டோமேஷன் தான்.

ஆனால் ஆட்டோமேஷன் பாதிப்புகள் ஐடித்துறைக்கு மட்டும் தானா என்றால் கண்டிப்பாக இல்லை, போக்குவரத்துத் துறை முதல் கல்வி துறை வரையில் ஆட்டோமேஷன் பாதிப்புகள் உள்ளது.

அடுத்த 20 வருடத்தில் இத்துறையில் வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை பாதியாகக் குறையும் அளவிற்கு மிகப்பெரிய பாதிப்புகள் ஆட்டோமேஷன் மூலம் உருவாகி வருகிறது என்பதை PwC ஆய்வின் முடிவுகள் கூறுகிறது.

3 கட்ட பாதிப்புகள்

ஆட்டோமேஷன் எல்லோரும் கூறுவது போல் ஓரே நேரத்தில் அனைத்து வேலைவாய்ப்புகளும் விழுங்கிவிடுவது எல்லாம் பொய். தற்போது வெளியான ஆய்வின் படி ஆட்டோமேஷன் 3 கட்ட பாதிப்புகளாக வரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

அல்காரிதம் வேவ், ஆகுமென்டேஷன் வேவ், ஆட்டோனமி வேவ் என 3 கட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும், இன்றைய நிலையில் இந்த 3 கட்ட பாதிப்புகளும் 2030ஆம் ஆண்டுக்குள்ளாகவே நிகழும் எனத் தெரிகிறது.

 

ஆய்வு

ஆட்டோமேஷன் குறித்த ஆய்வுகளை PwC நிறுவனம் 29 நாடுகளில் சுமார் 2,00,000 ஊழியர்கள் மத்தியில் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் துறை, பாலினம், வயது, கல்வித் தகுதி எனப் பலவற்றைக் கருத்தில் கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகப் பாதிப்புகள்

இந்த ஆய்வின் படி போக்குவரத்து மற்றும் சேமிப்புத் துறையில் இருக்கும் ஊழியர்களுக்குத் தான் அதிகளவிலான வேலைவாய்ப்புப் பாதிப்புகள் ஏற்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

குறைந்த அளவிலான பாதிப்பு பெறும் துறைகளில் கல்வித்துறை உள்ளது.

 

பிற முக்கியத் துறைகள்

போக்குவரத்து மற்றும் சேமிப்பு துறையைத் தொடர்ந்து அதிக வேலைவாய்ப்பு பாதிப்புகளைப் பெறும் துறைகள் பின்வருமாறு..

உற்பத்தி
கட்டுமானம்
நிர்வாகம் மற்றும் துணை சேவை
மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை
மக்கள் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு
நிதியியல் மற்றும் இன்சூரன்ஸ்
தகவல் மற்றும் தொலைத்தொடர்பு
professional, scientific and technical
தங்கும் மற்றும் உணவு வசதி
மனிதனின் சுகாதாரம்ம மற்றும் சமூகப் பணிகள்
கல்வி

இதுவே அதிகப் பாதிப்படையும் துறைகள்.

 

52 சதவீத வேலைவாய்ப்பு

இந்த ஆய்வின் மூலம் 2030ஆம் ஆண்டிற்குள் போக்குவரத்து மற்றும் சேமிப்புத் துறையில் இருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை 29 நாடுகளில் சராசரியாக 52 சதவீதம் வரையில் குறையும் எனத் தெரிகிறது.

அதேபோல் கல்வி துறையில் 8 சதவீதம் வேலைவாய்ப்புகள் குறையும் எனத் தெரிகிறது

 

பாலினம் பாதிப்புகள்

இந்த ஆட்டோமேஷன் அலைகளில் பெண்களை விட ஆண்களுக்குத் தான் வேலை இழப்புப் பாதிப்புகள் மிகவும் அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆண்களுக்கு 33 சதவீதமும், பெண்களுக்கு 26 சதவீதமும் பாதிப்புகள் உள்ளது.

 

வயது வித்தியாசம்

ஆட்டோமேஷனின் 55 வயதுக்கும் அதிகமானவர்களுக்கு 36 சதவீத பாதிப்புகளும், 25 வயதுக்கும் அதிகமானவர்களுக்கு 35 சதவீத பாதிப்புகளும், 25-54 வயதுடையவர்களுக்கு 28 சதவீதம் அளவிலான பாதிப்புகள் ஏற்படும் என இந்த ஆய்வின் மூலம் அறியப்படுகிறது.

கல்வி திறன்

இதில் ஆச்சரியம் படும் அளவிற்கு எதுவுமில்லை, குறைந்த கல்வி திறன் கொண்டவர்களுக்கு வேலை இழப்புப் பாதிப்புகள் அதிகமாகவும், அதிகக் கல்வி திறன் கொண்டவர்களுக்குக் குறைந்த பாதிப்புகளும் இருக்கும் என இந்த ஆய்வுகள் கூறுகிறது.

டெக் சேவை

ஆட்டோமேஷன் பாதிப்புகள் டெக் துறையைச் சார்ந்து இருப்பவர்களுக்கு மட்டுமே இருக்கும் என அதிகளவில் நம்பப்பட்ட நிலையில், தற்போது டெக்னாலஜியை பயன்படுத்தி மனிதனின் வேலைகளைக் குறைக்கும் அனைத்துத் துறைகளிலும் இந்தப் பாதிப்புகள் இருக்கும் என்பது இந்த ஆய்வின் மூலம் தெளிவாகியுள்ளது.

ஐடி ஊழியர்கள்

மேலும் இந்த ஆய்வின் மூலம் ஐடி ஊழியர்களுக்கும் மட்டும் தான் வேலைவாய்ப்பு இழப்புகள் ஏற்படுகிறது என்ற அதிர்ச்சியில் இருந்து மீண்டு, பிற துறைகளில் ஐடி துறையை விட அதிகப் பாதிப்புகள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளோம்.

இதனால் பிற துறைகளில் தற்போது இருக்கும் வேலைவாய்ப்புகளைக் காப்பாற்றவும், மாற்று வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தி வேண்டிய கட்டாயத்தில் அனைவரும் உள்ளோம்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Three waves of automation will hit the world now

Three waves of automation will hit the world now
Story first published: Thursday, February 8, 2018, 13:09 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns