3 மாசம் கெடு.. முடிந்தால் தப்பிச்சுக்கங்க.. பிட்காயின் முதலீட்டாளர்களுக்கு கடைசி எச்சரிக்கை..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

இந்திய ரிசர்வ் வங்கி கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்ய மற்றும் நிறுவனங்களை டிரேடிங் செய்ய வங்கிகள் அனுமதிக்கக் கூடாது என்று சென்ற வாரம் தடை விதித்தது.

ஏற்கனவே இந்திய அரசு மற்றும் ஆர்பிஐ என இருதரப்பும் கிரிப்டோ கரன்சிகள் சட்டத்திற்கு உடப்ட்டதல்ல என்று கூறிவந்த நிலையிலும் முதலீட்டாளர்கள் அதிகளவில் பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகளை வாங்கியவர்களுக்கு அதனை என்ன செய்வது அந்தப் பணம் எல்லாம் என்ன ஆகும் என்று அச்சம் எழுந்த நிலையில் புதிய அறிவிப்பில் 3 மாதம் வரை விலக்கு அளித்துள்ளனர்.

மக்கள் அதிர்ச்சி

ஆர்பிஐ வெளியிட்ட உத்தரவால் இந்திய ரூபாயாகப் பிட்காயின் முதலீடுகளைத் திருப்ப முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர். எனவே ஆர்பிஐ வித்துள்ள தடையினால் முதலீட்டாலர்களுக்கு என்ன பாதிப்பு என்று விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.

கிரிப்டோகரன்சிக்கு பாதிப்பில்லை

ஆர்பிஐ எடுத்துள்ள முடிவால் கிரிப்டோ கரன்சி முதலீடுகளுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது, ஏன் என்றால அர்பிஐ பிட்காயின் டிரேடிங்கை தடை செய்யவில்லை. பிட்காயின், லைட் காயின் போன்றவை ஒரு நிறுவனத்தாலோ அல்லது தனிநபர் ஒருவராலோ நிர்வகிக்கப்படவில்லை.

வங்கிகளுக்குத் தொடர்பில்லை

பிட்காயின் வாங்கும் போது செய்யப்படும் அனைத்துப் பரிவர்த்தனைகளும் இடைத்தரகர்கள் யாரும் இல்லாமல் நடைபெறுகிறது. அதாவது வங்கிகளுக்கும் இதில் நடக்கும் பரிவர்த்தனைகளுக்கும் தொடர்பில்லை. பிட்காயின் எக்ஸ்சேஞ்சுகள் பிட்காயினை வாங்க மற்றும் விற்க அனுமதிகளை அளிக்கும்.

மத்திய வங்கிகள்

எனவே உலகம் முழுவதிலும் உள்ள எந்த ஒரு மத்திய வங்கிகளாலும் பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சி டிரேடிங்கை தடை செய்ய முடியாது.

என்ன ஆகும்?

ஆர்பிஐ எடுக்கும் இது போன்ற அதிரடி முடிவுகளால் கிரிப்டோ கரன்சி பயன்பாட்டைக் குறைக்க முடியும் என்று எதிர்பார்க்கின்றனர். ஏற்கனவே பிட்காயினை முதலீட்டை செய்துள்ளவர்கள் அதனைத் தொடரலாம் ஆனால் அவற்றை இந்திய கரன்சிகளாக மாற்ற முடியாது அல்லது இந்திய கரன்சி அடிப்படையில் டிரேடிங் செய்ய முடியாது.

கால அவகாசம்

கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்துள்ள பணத்தினைத் திரும்பப் பெற 3 மாதம் வரை கால அவகாசம் அளிக்க வங்கிகளுக்கு மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது. எனவே இந்த இடைப்பட்ட காலத்தில் மட்டும் கிரிப்டோ கரன்சியை இந்திய ரூபாய் மதிப்பில் விற்கலாம் மற்றும் டிரேடிங் செய்யலாம். அதன் பிறகு வேறு ஒரு நாட்டுக் கரன்சிகளில் மட்டுமே பிட்காயினை வங்க முடியும், விற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI's cryptocurrency Ban: What happens to your Bitcoin investment?

RBI's cryptocurrency Ban: What happens to your Bitcoin investment?
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns