அடேய் இதுக்காடா ரூ.132 கோடி செலவு செய்றீங்க..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

ஆடம்பரத்திற்காக வெட்டியாக லட்சங்கள், கோடிகள் செலவு செய்வதை நாம் அவ்வப்போது கேட்டு ஆச்சரியப்படுவது வழக்கம். அதில் ஒன்று தான் கார் எண்களுக்காகச் செலவு செய்வது. இந்தியாவில் பேன்சி எண்களுக்கு அதிகளவில் கட்டணங்கள் இல்லை என்றாலும் வெளிநாடுகளில் சிறப்பு எண்கள் என்ற பெயரில் ஏலம் விடுவதும், அதனை லட்சம், கோடி எனக் கொடுத்து வாங்குவதும் சாதாரணம். அப்படித் தான் ஒருவர் 'F1' என்ற கார் எண்ணை 132 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார்.

ரேஞ்ச் ரோவர், மெர்சிடஸ்-மெக்லாரன் எஸ்எல்ஆர் எனச் சில ஆடம்பர கார்களைப் பயன்படுத்தும் நபர்கள் மட்டுமே விருப்பப்பட்டு வாங்கும் இந்த 'F1' கார் எண்ணை 10 வருடங்கள் வரை மட்டுமே உபயோகிக்க முடியும். ஆனால் 2018-ம் ஆண்டு அதனை இங்கிலாந்தில் ஒருவர் 132 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார்.

முந்தைய ஏலம்?

‘F1' எண் பலகையானது 1904 முதல் எசெக்ஸ் சிட்டி கவுன்சிலின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது. கடைசியாக 2008-ம் ஆண்டு இந்த எண்ணை ஏழம் விட்ட போது 4 கோடி ரூபாய் கொடுத்து வங்கியிருந்தனர்.

யார் இவர்?

கான் டிசைன் எனப்படும் இங்கிலாந்தைச் சேர்ந்த தனித்துவமான வாகன டிசைன் நிறுவனத்தின தலைவர் அஃப்சல் கான் தற்போது இந்த ‘F1' எண்ணை வாங்கியுள்ளார்.

முந்தைய சாதனை

‘F1' என்ற கார் எண் இங்கிலாந்து மட்டும் இல்லாமல் உலகளவில் மிகவும் பிரபலமானது ஆகும். இதே போன்று சென்ற ஆண்டுத் துபாயில் இந்தியர் ஒருவர் டி 5 என்ற எண்ணை 67 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருந்ததே அதிகமாக இருந்த நிலையில் தற்போது அந்தச் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பேன்சி எண் முறை?

இந்தியாவில் இது போன்று தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட கார் எண் வாங்கும் முறை இல்லை என்றாலும் இரண்டு சக்கர வானங்களில் பேன்சி எண் 5,000 முதல் 50,000 ரூபாய் வரையிலும், 4 சக்கர வாகன எண்கள் 15,000 முதல் 1 லட்சம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்கின்றனர்.

ஒரே எண் இருவருக்கு வேண்டும் என்றால் என்ன ஆகும்?

சில சமயங்களில் ஒரே எண்ணை ஒன்றுக்கும் அதிகமானவர்கள் கேட்கும் போது குழுக்கள் முறையில் யாருக்குக் கிடைக்கிறதோ அவர்களுக்கு அளிக்கின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

World's Most Expensive Car Number Plate On Sale In UK For Rs 132 Crore!

World's Most Expensive Car Number Plate On Sale In UK For Rs 132 Crore!
Story first published: Monday, April 9, 2018, 18:13 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns