இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வருமா?பைனரி திட்டம் பற்றிய விரிவான அலசல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குறைந்த காலத்தில் அதிக லாபம் பெற, அனைத்து வித முதலீட்டு திட்டங்களிலும் நம் பணத்தை முதலீடு செய்வோம்.

உங்களுக்கு முழுமையாக தெரியாத விசயத்தில் நீங்கள் கண்டிப்பாக முதலீடு செய்யக்கூடாது என பலர் அறிவுரை செய்து கேட்டிருப்பீர்கள். எது எப்படியோ, கிரிப்டோ கரன்சி முதலீடுகளை போல இல்லாமல், பைனரி திட்டம் என்பது புரிந்துகொள்ள மிகவும் எளிமையானது. ஆனால் இவற்றை முழுமையான முதலீட்டு கருவியாக எடுத்துக்கொள்ள முடியாது.

இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வருமா?பைனரி திட்டம் பற்றிய விரிவான அலசல்..!

 

பைனரி திட்டங்கள் என்றால் என்ன?

குறிப்பிட்ட விலை மற்றும் கால அளவில் நிதி பத்திரங்கள் அல்லது பங்குகளை வாங்கி விற்கும் பாரம்பரிய முதலீட்டு முறையை போல இல்லாமல், இந்த பைனரி திட்டம் முற்றிலும் வேறுபட்டது.

இந்த பைனரி முதலீட்டில், சந்தையின் விலை ஏற்ற இறக்கத்தை அடிப்படையாக கொண்டு வர்த்தகம் செய்ய வேண்டும். இதில் யூகிப்பதன் மூலமே வர்த்தம் நடைபெறும். எடுத்துக்காட்டாக, ஒரு நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு அடுத்த 5 நிமிடத்தில் ஏற்றம் அல்லது இறக்கத்தை சந்திக்குமா என கணிப்பதன் மூலம் பணம் பெறலாம்.

இந்த வர்த்தகத்தில் பங்குபெற ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை முதலீடு செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக நீங்கள் ரூ100 முதலீடு செய்கிறீர்கள் என்றால், சரியாக கணிக்கும் பட்சத்தில் ரூ500ஐ லாபமாக பெறலாம். தவறாக கணித்து தோல்வியுறும் பட்சத்தில் முதலீடு செய்ய ரூ100ஐ இழக்க நேரிடும்.

இங்கு இரண்டு வித பதில்கள் மட்டுமே. சரி அல்லது தவறு, வெற்றி அல்லது தோல்வி. எனவே தான் இதன் பெயர் 'பைனரி'. ஆனால் இங்கு பங்குகள் எவ்வளவு சதவீதம் ஏற்ற இறக்கங்களை சந்திக்கும் என்பதை கணிக்க வேண்டிய அவசியமில்லை.

இந்த பைனரி திட்டத்தில் உற்சாகமளிக்கக்கூடிய விசயம் என்னவென்றால், இதன் விதிகள் மிகவும் எளிமையானவை மற்றும் நேரிடையானவை. உங்கள் கணிப்பு சரியாக இருந்தால் ஒப்புக்கொண்ட பணம் உங்களுக்கு வழங்கப்படும். தவறாக இருந்தால் முதலீடு செய்த மொத்தத்தையும் இழக்க நேரிடும். ஒன்று நிறைய கிடைக்கும் அல்லது அனைத்தும் போகும்.

தவறாக கணிக்கும் பட்சத்தில், சில தரகர்கள் மட்டும் நீங்கள் முதலீடு செய்த பணத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை திருப்பி அளிப்பர். எனவே மேலே குறிப்பிட்ட எடுத்துக்காட்டின் படி, நீங்கள் தோல்வியுற்றாலும் ரூ20 திரும்பகிடைக்கும். இந்த விதிகள் தரகர்களால் வகுக்கப்படுகின்றன.

இதில் உள்ள மற்றொரு கவர்ச்சிகரமான அம்சம் என்னவென்றால், இணையதள வர்த்தக வசதி. இந்த வர்த்தகத்தை கணிணி மற்றும் மொபைலில் உள்ள செயலிகளின் வாயிலாக மிக எளிதாக செய்யமுடியும் மற்றும் உங்களின் பணபரிமாற்றத்தையும் எளிதாக பின்தொடர் தொடரலாம்.

உங்களுக்கு விருப்பமான நேரத்தில் பணத்தில் முடிவு செய்யலாம்.

உங்கள் பணத்தை தனிப்பட்ட நிறுவன பங்குகளில்(சர்வதேச சந்தைகளில் கூட) மட்டுமில்லாமல், பொருட்கள், குறியீடுகள், பங்குகள் மற்றும் வெளிநாட்டு பரிமாற்றங்களில் கூட உங்கள் விருப்பத்திற்கு ஏற்பவும், தரகர்களின் முடிவுகளின் படியும் முதலீடு செய்யலாம்.

ஏன் பைனரி திட்டத்தில் முதலீடு செய்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்?

பைனரி திட்டத்தை மிக எளிதாக சூதாட்டம் என கூறிவிடலாம். ஒரு விசயம் நடக்குமா நடக்காதா என பந்தயம் கட்டுவது தான் இந்த திட்டம். அடுத்த 5நிமிடத்தில் சந்தையில் என்ன நடக்கப்போகிறது என கணிக்க எந்த வல்லுநராலும் முடியாது(ஏதேனும் பெரிய அறிவிப்புகளால் ஏற்படும் மாற்றங்களை தவிர்த்து). எனவே ' சிறப்பான முதலீட்டு திட்டம்' என்ற விளம்பரங்களை கண்டு ஏமாறாதீர்கள்.

 

இவ்வகை திட்டங்கள் தனிநபர் தரகர்களால் பரிமாற்ற அடிப்படையில்லாமல் வழங்கப்படுகின்றன. எந்த ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழும் இவை செயல்படவில்லை என பதையே இது குறிக்கிறது. செபி அமைப்பு இவற்றிற்கு அங்கீகாரம் வழங்கவில்லை. எனவே பல்வேறு மோசடிகள் நடைபெறவும் வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் ஏமாற்றப்பட்டாலும் கூட புகார் அளிப்பது என்பது மிகவும் கடினமான காரியம். சுருக்கமாக கூறவேண்டுமென்றால், இந்த பைனரி திட்டங்கள் சட்டப்படி இந்தியாவில் அனுமதிக்கப்படவில்லை.

பைனரி திட்டத்தில் சிறிய அளவிலான பணத்தை கூட முதலீடு செய்ய அனுமதிப்பதால், சிறு முதலீட்டாளர்களை கூட எளிதில் கவர முடிகிறது. நீங்கள் குறைந்த அளவு பணத்தை தினமும் முதலீடு செய்தாலும் கூட, சூதாட்டம் போல இதற்கும் அடிமையாக நேரிடும். நேரமின்மை மற்றும் சரியான பண மேலாண்மை இல்லாதுத போன்றவற்றால் அனைத்தும் கை நழுவிபோய்விடும்.

மற்ற முதலீட்டு திட்டங்களை போல இல்லாமல், இதில் முதிர்ச்சி அடைவதற்கு முன்பு விற்கமுடியாது(மேலே கூறிய உதாரணத்தில் முதிர்ச்சி காலம் 5 நிமிடங்கள்)

பைனரி திட்டத்தின் பொதுவான வகையில் ,லாபத்தை விட ஆபத்து தான் அதிகம். நீங்கள் வெற்றி பெற்றால் முதலீடு திரும்ப கிடைக்கும் ஆனால் தோல்வி அடைந்தால் அனைத்தும் போய்விடும்.

நிகழ்தகவின் படி, வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் 50% தான். தொழில்முறை வர்த்தகர்களால் கூட தொடர்ந்து வெற்றி பெற முடியாது. நீங்கள் பந்தயம் கட்டுவதில் ஆர்வம் உள்ளவர் எனில், நேரம் மற்றும் முதலீடு செய்யும் பணத்தின் அளவை பொறுத்து லாபம் எடுக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Binary Options: Why It May Not Be Good For You

Binary Options: Why It May Not Be Good For You
Story first published: Monday, April 30, 2018, 15:52 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X