தபால் அலுவலகத்தின் இந்தச் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் 8% விடக் கூடுதல் லாபம் கிடைக்கும்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தபால் அலுவலகங்களில் 9 விதமாகச் சேமிப்புத் திட்டங்கள் உள்ள நிலையில் அவை 4 முதல் 8.3 சதவீதம் வரையிலான வட்டி விகிதங்களில் லாபம் அளிக்கின்றன. மேலும் அந்தச் சேமிப்புத் திட்டங்களில் மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் மற்றும் சுகன்யா சம்ரிதி யொஜனா எனப்படும் செல்வ மகள் திட்டம் இரண்டிலும் 8.3 மற்றும் 8.1 சதவீத லாபத்தினை அளிக்கின்றன.

ஆர்பிஐ ரெப்போ விகிதத்தினை ஏற்றியுள்ள நிலையில், அரசு பத்திரங்கள் மீதான லாபம் அதிகரித்துள்ள நிலையில் வரும் காலாண்டில் இந்தத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர வாய்ப்புகள் உள்ள நிலையில் இரண்டு திட்டங்கள் பற்றியும் இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

தபால் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS)

அம்சங்கள்
 

அம்சங்கள்

இந்தத் திட்டத்தில் அதிகபட்சம் 15 லட்சம் ரூபாய் வரை ஒரே டெபாசிட்டாக முதலீடு செய்யலாம். முதலீடு செய்பவர்களின் வயது 55 முதல் 60 வயதிற்குள் இருக்க வேண்டும். ஓய்வு பெற்றவர்கள், ஓய்வு பெற இருப்பவர்கள் என யார் வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். மேலும் தங்கள் மனைவி அல்லது கணவருடன் சேர்ந்து கூட்டு கணக்காகவும் இதில் முதலீடு செய்யலாம்.

 முதிர்வு காலம்

முதிர்வு காலம்

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு 5 ஆண்டுகள் முதிர்வு காலம் ஆகும். அதே நேரம் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளைத் திறந்தும் முதலீடு செய்ய முடியும். தேவைப்பட்டால் ஒரு தபால் அலுவலகத்தில் இருந்து வேறு அலுவலகத்திற்கு மாற்றமும் செய்யலாம். ஒருவரே எத்தனை கணக்குகள் வேண்டும் என்றாலும் திறக்கலாம்.

முதிர்வு காலம் முடிவடைந்த பிறகு மூன்று ஆண்டுகளை வரை கூடுதலாக இந்த முதலீட்டினை தொடர முடியும். முதிர்வு காலம் முடிந்த பிறகு ஒரு வருட நீட்டிப்பிற்குப் பிறகு கணக்கு செயல்படாது.

வட்டி விகிதம்

வட்டி விகிதம்

முத்த குடிமக்கள் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு ஒவ்வொரு காலாண்டிலும் அதாவது ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மற்றும் ஜனவரி மாதங்களில் வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படும். தற்போது இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு 5.3 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கப்படுகிறது.

முன்கூடிட்யே கணக்கை மூடுதல்
 

முன்கூடிட்யே கணக்கை மூடுதல்

மூத்த குடிமக்கள் திட்டத்தில் முதலீடு செய்த ஒரு வருடத்திற்குப் பிறகு கணக்கை இடையில் மூடும் போது 1.5 சதவீத தொகை கழித்துக்கொண்டு திருப்பி அளிக்கப்படும். இரண்டு வருடத்திற்குப் பிறகு கணக்கை மூட முயலும் போது 1 சதவீத டெபாசிட் தொகை பிடித்தம் செய்யப்பட்டு மீத தொகை திருப்பி அளிக்கப்படும்.

அம்சங்கள்

அம்சங்கள்

பெண் குழந்தைகளுக்கான இந்தத் திட்டத்தில் ஆண்டுக்குக் குறைந்தது 1,000 ரூபாய் முதல் 1,50,000 ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும். மொத்த தொகை அல்லது மாத தவனை முறையிலும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

பெண் குழந்தைகளின் தந்தை அல்லது காப்பாளர்கள் துணை உடன் இந்தக் கணக்கினை துவங்கலாம். ஒரு பெண் குழந்தை பெயரில் ஒரு கணக்கு மட்டுமே என இரண்டு பெண் குழந்தைகளுக்கு இந்தக் கணக்கினை துவங்க முடியும்.

காலவரையறை

காலவரையறை

பெண் குழந்தைகளுக்கு 10 வயது நிறைவடைவதற்குள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தில் 15 வருடங்களுக்குத் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். இடையிலே தவணை தொகையினைத் தாமதமாகச் செலுத்தினால் 1,000 ரூபாய்க்கு 50 ரூபாய் வரை அபராதமும் செலுத்த வேண்டும்.

இடையில் வெளியேறுதல்

இடையில் வெளியேறுதல்

பெண் குழந்தைக்கு 18 வயது நிரம்பிய பிறகு 50 சதவீத தொகையினை எடுக்க முடியும். 21 வயது முடிந்த பிறகு மொத்தமாக இந்தக் கணக்கு மூடப்படும். பெண் குழந்தைகளுக்கான திருமண வயதான 18 வயது நிரம்பிய பிறகு தான் இந்தக் கணக்கினை இடையில் மூட முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Post Office Saving Schemes Offer's Over 8% Interest Rates

Post Office Saving Schemes Offer's Over 8% Interest Rates
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X