ஐடி,மருத்துவ துறையில் வேலை பார்க்க விரும்புவோர்களுக்கு ஜாக்பாட்,அதிக ஆட்களைப் பணிக்கு எடுக்க முடிவு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த இரண்டு நிதி ஆண்டில் வேலைவாய்ப்பு துறை மிகவும் பரிதாபமான நிலையில் இருக்கிறது, இது தற்போதுள்ள நிதி ஆண்டில் சிறிது வளர்ச்சி பெரும் எனக் கணித்துள்ளனர். ஆனாலும் இது 2016 நிதி ஆண்டை விடக் குறைவாக தான் இருக்குமாம். வல்லுநர்களின் கருத்துப் படி ஐடி துறை, ரீடெயில், மருத்துவ துறை, கட்டுமானம் மற்றும் உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்புகள் திடீர் வளர்த்தியைக் காணும் எனக் கூறியுள்ளனர். இதை அடுத்து இந்த வருடம் வேலைவாய்ப்பு சந்தை 4.1% வளர்ச்சி பெரும், இதுவே கடந்த ஆண்டு 3.3% தான் இருந்தது.

 

CLSA எனும் நிறுவனத்தின் கருத்து படி கடந்த நான்கு ஆண்டில் 2018 நிதி ஆண்டு தான் மிகக் குறைந்த வளர்ச்சி வேலைவாய்ப்பு சந்தையில் பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக 2016 ஆண்டில் 4.2% வளர்ச்சியாகி உள்ளது. இந்த நிதி ஆண்டில் கணிதத்தை விட அதிக நபர்களைப் பணிக்கு எடுக்க வாய்ப்புள்ளது ஆனால் டெலிகாம் மற்றும் எப்எம்ஜிசி துறையினால் இந்த அளவு பாதிக்கப்படலாம்.

ஐடி துறை

ஐடி துறை

ஐடி துறையில் இந்த ஆண்டு 8-10% அதிக ஆட்களைப் பணிக்கு எடுக்கலாம், அதே போல கட்டுமான துறையில் அதிகப் படியான ஆட்கள் தேவை என்பதால் இதில் 8% வரை புதிதாக பணிக்கு அமர்த்தலாம்.

எல்&டி

எல்&டி

எல்&டி-ல் பணிபுரியும் ஒரு முத்த அதிகாரி கூறுகையில் அதிக அளவில் கட்டுமான துறையில் ஆர்டர்கள் உள்ள நிலையில், இந்தத் துறையில் அதிகப் படியான ஆட்கள் தேவைப்படுகிறது. எல்&டி-ஐ பொறுத்தவரை எந்தளவிற்கு முக்கியமான ஆர்டர்கள் பெறப்படுகிறதோ அந்த அளவிற்கு அதிகப் படியான ஆட்களை எல்&டி பணிக்கு அமர்த்தும் என அவர் தெரிவித்தார் குறிப்பாகக் கடற்கரை சாலை, நீர் சம்மந்தப்பட்ட வேலைகள். இந்தப் பிரிவில் வேலை செய்பதன் மூலம் ஒருவர் தனது கேரியரை சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல முடியும் என அவர் கூறினார்.

ஹின்டால்கோ
 

ஹின்டால்கோ

ஹின்டால்கோ பொறுத்தவரைக் கடந்த ஆண்டு 180 பேரை வேளைக்கு எடுத்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு இதை விட அதிகமாக நிச்சியம் இருக்கும் என நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 நிதி ஆண்டைப் பொறுத்தவரை 230 நபர்கள் வரை பணிக்கு எடுக்க முடிவு செய்துள்ளது ஹின்டால்கோ அதுவே 2020 ஆண்டில் 350 நபர்களைத் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய டெக்னாலஜி

புதிய டெக்னாலஜி

ஐடி துறை பொறுத்தவரை நிறைய புதிய டெக்னாலஜி வளர்ச்சி காரணமாக இந்தத் துறை மிகவும் வளர்ச்சி காணப்போகிறது எனக் கூறுகின்றனர். 2018 நிதி ஆண்டில் வேளையில் சேர்க்கப்பட்ட 40% ஊழியர்களிடம் முக்கிய திறன்கள் இருந்துள்ளன இது 2017 ஆண்டை விட இரு மடங்கு ஆகும். இந்த ஆண்டு எச்சிஎல் நிறுவனம் சுமார் 25,00-30,000 ஊழியர்களைப் பணிக்கு எடுக்க முடிவு செய்துள்ளது. ஐபிஎம் 1,000 ஊழியர்களையும் அது போக பெரு நிறுவங்களின் இன்சூரன்ஸ் துறையில் 60,000 நபர்கள் வரை பணிக்கு எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Randstad இந்தியாவைச் சேர்ந்த ஒரு அதிகாரி கூறுகையில் இந்த ஆண்டு கிளவுட் கம்ப்யூட்டிங், நெட்வொர்க்கிங், சைபர் பாதுகாப்பு, மெஷின் லேர்னிங் மற்றும் AI பிரிவில் அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் எனத் தெரிவித்தார்.

டிசிஎஸ்

டிசிஎஸ்

டிசிஎஸ் நிறுவனம் கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரை மட்டும் கூடுதலாக 10,227 ஆட்களைப் பணியில் அமர்த்தியுள்ளது. டிசிஎஸ் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் கோபிநாத்," சேவைக்கும் மேம்பட்ட தொழில்நுட்பத்திற்கும் அதிக தேவை இருப்பதனால் தான் இந்த அளவிற்குப் புதிதாக ஊழியர்களைப் பணிக்கு எடுக்க முடிகிறது எனத் தெரிவித்தார்".

ஆயுஷ்மான் பாரத்

ஆயுஷ்மான் பாரத்

அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தினால் சுகாதார துறையில் வேலைவாய்ப்பு மிகப் பிரகாசமாக உள்ளது எனக் கருதுகின்றனர். இது அதிகப்படியாக 1-1.5 லட்சம் நபர்களுக்கு வேலை அளிக்கும் எனத் தெரிகிறது.

இ-கமெர்ஸ்

இ-கமெர்ஸ்

புதிய முதலீடுகளின் மூலம் சில்லறை வணிகம் மற்றும் இ-கமெர்ஸ் துறைகளும் அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும் துறைகளாக மாறப்போகின்றனர்.

ஆனால் உற்பத்தி, டெலிகாம் மற்றும் வங்கித் துறைகளில் எந்த ஓர் வளர்ச்சியும் இருக்காது அப்படி இல்லை என்றால் மிகக் குறைந்த அளவில் வாய்ப்புகள் கிடைக்கும்.

 நிதி சேவைகள்

நிதி சேவைகள்

அதே போல நிதி சேவைகள் துறையில் 3% வேலைவாய்ப்பு வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, ஏன் என்றால் வங்கி அல்லாத நிதி நிறுவங்களின் விரிவாக்கத்தின் பெயரில் அதிக கடன்கள் வழங்கப்படும் இதனை வைத்து அந்தத் துறையில் சுமார் 1.5 லட்சம் புதிய வேலைகள் கிடைக்கும் என ஒரு வல்லுநர் கூறுகிறார். இந்த வளர்ச்சி குறிப்பாக tier-2 நகரங்களில் இருக்கும்.

MSME

MSME

MSME-க்காக அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய கடன் திடங்களுக்காக வங்கிகள் அதன் வேலையாட்களைக் கட்டாயமாக அதிகப்படுத்த வேண்டும். முக்கியமாக ஐடி, வாடிக்கையாளர் சேவை மற்றும் கடன் கட்டுப்பாட்டுப் பாத்திரங்கள் பிரிவில்.

டெலிகாம்

டெலிகாம்

கடைசியாக டெலிகாம் துறை, மிகப் பரிதாபமான நிலைக்குச் செல்லும். 2018 முடிவுக்குள் 50,000-75,000 நபர்கள் வேலை இழக்க நேரிடலாம். இந்தக் கணக்கு 90,000 வரை நீளும் எனக் கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Good news on job front: IT, healthcare, retail hiring in FY 2019; FMCG, telecom disappoint

Good news on job front: IT, healthcare, retail hiring in FY 2019; FMCG, telecom disappoint
Story first published: Monday, November 12, 2018, 11:55 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X