2019 தேர்தலிலும் மோடிக்கு வாய்ப்புக் கொடுத்தால் இந்தியாவிற்கு நல்லது.. நாராயண மூர்த்தி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2019-ம் ஆண்டுக்கான பொதுத் தேர்தல் இன்னும் 6 மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் இன்போசிஸ் இணை நிறுவனரான நாராயண மூர்த்தி மோடி ஊழலுக்கு எதிராகக் கடுமையாகப் போராடி வருவதாகவும் நடப்பு அரசுக்கு மீண்டும் வாய்ப்பு அளிப்பது இந்தியாவிற்கு நல்லது என்றும் தெரிவித்துள்ளார்.

 

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு நாராயண மூர்த்தி அளித்த பேட்டியில் அரசு மற்றும் ஆர்பிஐ உள்ளிட்ட உள்ளிட்ட நிறுவனங்கள் இடையில் உள்ள சண்டை குறித்துக் கேட்ட போது இந்த நிறுவனங்கள் எல்லாம் வலுவாக இருக்க வேண்டும். வலிமையின்றி இருந்தால் சிக்கல் தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சிலை

சிலை

சிலைகள் மற்றும் கோவில்கள் போன்றவற்றுக்கு அரசு செலவு செய்வது குறித்துக் கேட்ட போது இது போன்றவற்றில் மோடி கவனம் செலுத்தக் கூடாது என்று கூறியுள்ளார்.

 ஊழல்

ஊழல்

பிரதமர் மோடி மற்றும் அவரது அமைச்சர்கள் மத்தியில் இருந்து ஊழலுக்கு எதிராகக் கடுமையாகப் போராடி வருகிறார்கள். எப்போதாவது தான் நடப்பு அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வருகின்றன. ரஃபேல் ஒப்பந்த டீல் தரவுகள் குறித்த சரியான விவரங்கள் கிடைக்காததால் அது உன்மையா என்று தெரியாது என்றார்.

ஜிஎஸ்டி மற்றும் ஐபிசி
 

ஜிஎஸ்டி மற்றும் ஐபிசி

ஜிஎஸ்டி மற்றும் ஐபிசி போன்ற சீர்திருத்தங்களில் உள்ள தேக்கங்கள் குறித்துக் கேட்டதற்கு மோடி அரசு வலுவான பொருளாதாரத்தினை உயர்த்துவதற்கான எண்ணம் உடையது, பணிகள் சரியாக நடைபெறவில்லை என்பதற்காக நாம் மோடியை குறை கூறக்கூடாது என்றார். இன்போசிஸ் நிறுவனம் தான் ஜிஎஸ்டி மென்பொருளினை உருவாக்கியது என்றும் அதில் இன்று வரை குறைபாடுகள் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மோடியை குறை கூற கூடாது

மோடியை குறை கூற கூடாது

நாட்டில் உள்ள அனைத்துக் கிராமங்களையும் மோடியால் சென்று சுத்தம் செய்ய முடியாது. மோடி சார்பாகச் செய்பவர்களின் தாமதம் தான் அது. இந்தியர்களின் மனப்போக்கு மற்றும் ஆன்மாவில் தான் பிரச்சனை உள்ளது, நாம் கருணையற்று, ஒழுங்கற்று இருக்கிறோம். பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கு முன்பு நாம் அவசரமாக நமது கலாச்சாரத்தினை மாற்றி அமைக்க வேண்டும் என்று நாராயண மூர்த்திக் கூறினார்.

பெருமைப்பட வேண்டும்

பெருமைப்பட வேண்டும்

கடந்த 5 வருடத்தில் மோடி தேசம், ஒழுக்கம், சுத்தம், பொருளாதார இலக்கு என்று அனைத்திலும் கவனம் செலுத்தியுள்ளார் இப்படிப்பட்ட ஒரு தேசிய தலைவரைப் பெற்றதற்கு நாம் பெருமைப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

உண்மை ஜனநாயகம்

உண்மை ஜனநாயகம்

கடைசியாக இந்தியாவில் உள்ள 1.3 பில்லியன் மக்களும் முக்கியம். உண்மை ஜனநாயகம் என்பது கருத்துச் சுதந்திரம், நம்பிக்கை மற்றும் விரும்பும் மற்றும் பயத்திலிருந்து விடுபடுதல் ஆகியவையே என்றும் நாராயண மூர்த்தித் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Modi Should Get Another Term Is Good For India: Narayana Murthy

Modi Should Get Another Term Is Good For India: Narayana Murthy
Story first published: Wednesday, November 14, 2018, 11:44 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X