டிவி, ரேடியோ, சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்ய மோடி அரசு செய்த செலவு எவ்வளவு தெரியுமா?

மத்திய அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.3,000 கோடிக்கு மேல் விளம்பரங்களுக்காகச் செலவு செய்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிவித்துள்ளது.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014-ம் ஆண்டு பதவி ஏற்றதில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் விளம்பரத்துக்காக கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவரை ரூ.3,000 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் தெரியவந்துள்ளது.

 

பிரபல டிவி சேனல்களில் ஆங்கிலத்திலும் இந்தியிலும் பிராந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும் மோடி அரசின் சாதனைகளை விளக்கும் ஏராளமான விளம்பரங்கள் வெளியாகின்றன. மோடி தலைமையிலான அரசு மக்களின் வரிப்பணத்தை விளம்பரத்துக்காக தண்ணீர் போல் செலவு செய்வது சமூக ஊடகங்களில் விமர்சனத்தை ஏற்படுத்தின, எதிர்க்கட்சிகள் கண்டித்தன.

 
டிவி, ரேடியோ, சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்ய மோடி அரசு செய்த செலவு எவ்வளவு தெரியுமா?

இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவி ஏற்று 5 ஆண்டுகளில் விளம்பரத்துக்காக எத்தனை கோடி பணம் செலவு செய்துள்ளது என்பதை அறிய அரசு அதிகாரி சஞ்சீவ் சதுர்வேதி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டுள்ளார்.

இவர் கோரிய தகவல்களுக்குத் தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் அவுட்ரீச் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் பீரோ பதில்களை வழங்கியுள்ளது. அதில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மின்னணு ஊடகங்களின் வாயிலான விளம்பரத்துக்கு ரூ.2,374 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும், வெளி விளம்பரங்களுக்கு ரூ.670 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மின்னணு ஊடகங்களைப் பொறுத்தவரையில் சமூக ஊடக தளங்கள், தொலைக்காட்சிகள், ரேடியோ வழியான செலவுகளே முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆல் இந்தியா ரேடியோ, தூர்தர்சன், எஸ்எம்எஸ், சினிமா தியேட்டர்களில் விளம்பரம் செய்ய செலவிடப்பட்டுள்ளது.

இச்செலவுகள் 2014-15 நிதியாண்டில் ரூ.470.39 கோடியாகவும், 2015-16 நிதியாண்டில் ரூ.541.99 கோடியாகவும், 2016-17 நிதியாண்டில் 613.78 கோடியாகவும், 2017-18 நிதியாண்டில் ரூ.474.76 கோடியாகவும் உள்ளது.

2018-19 நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் காலத்தில் ரூ.273.54 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. அகில இந்திய வானொலி, டிடி நேஷனல், இணையம், குறுஞ்செய்திகள், தியேட்டர்கள், தொலைக்காட்சி போன்ற வழிகளில் இந்த தொகை செலவிடப்பட்டுள்ளது.

வெளி விளம்பரச் செலவுகளைப் பொறுத்தவரையில் 2014-15 நிதியாண்டில் ரூ.81.27 கோடியாகவும், 2015-16 நிதியாண்டில் ரூ.118.51 கோடியாகவும், 2016-17 நிதியாண்டில் 186.37 கோடியாகவும், 2017-18 நிதியாண்டில் ரூ.208.54 கோடியாகவும் உள்ளது. 2018-19 நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் காலத்தில் ரூ.75.08 கோடியும் செலவிடப்பட்டுள்ளது என்று அந்தப் பதிலில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லோக்சபாவில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் மற்றும் விளம்பர செலவு பற்றி நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர்கள் எழுத்து பூர்வமாக பதில் அளித்துள்ளனர். அதில் கடந்த 4.5 ஆண்டுகளில் 84 முறை மோடி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக ரூ.2,013.76 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே. சிங் கூறியுள்ளார். இதில் பிரதமர் மோடிக்கான தனி விமான பராமரிப்பு, பிரத்யேக தொலைத் தொடர்பு இணைப்பு உருவாக்கம் போன்ற செலவுகளும் அடக்கம். இதே போல் பிரதமரின் திட்டங்களை விளம்பரப்படுத்துவதற்காக ரூ.4,602.88 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மற்றொரு மத்திய அமைச்சர் ராஜவர்தன ரத்தூர் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Modi govt spent Rs 3000cr on publicity in 5 years

The Narendra Modi government has spent over Rs 2374 crore on publicity in the electronic media and another 670 crore on outdoor publicity in the past five year.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X