போர் நடந்தால் இந்தியா 20 வருடம் பின்னோக்கி போய்விடும் நோபல் பரிசு வென்ற பொருளாதார மேதை PaulKrugman?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமா பகுதியில் தாக்குதலை மேற்கொண்டது ஜெய்ஷ் இ முகம்மது என்கிற தீவிரவாத அமைப்பு. பிப்ரவரி 26-ம் தேதி அதிகாலையில் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் 250-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை குண்டு போட்டு அழித்தது இந்தியா.

 

இப்போது பாகிஸ்தான் எல்லைக்குள் அனுமதி இல்லாமல் புகுந்து குண்டு போட்ட இந்தியா மீது கோபத்தில் இருக்கிறது பாகிஸ்தான். இதில் ஒரு இந்திய விமானி ப்வேறு பாகிஸ்தான் வசம் இருக்கிறார். ஆக எல்லா சிக்னல்களூம் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் போர் நடக்கும் என்பது போலவே இருக்கிறது. அப்படிப் போர் நடந்தால் என்ன மாதிரியான பிரச்னைகளை இந்தியா சந்திக்கும் என யோசித்துப் பார்த்தீர்களா..? வாருங்கள் பார்ப்போம்.

இதில் ஒவ்வொரு பிரச்னை குறித்தும் ஒரு பெரிய கட்டுரைகளையே எழுதலாம். அந்த அளவுக்கு ஒவ்வொரு பாதிப்பும் முக்கியமானது என்பதால் மிகச் சுருக்கமாக மட்டுமே இங்கே விளக்கி இருக்கிறோம். மேற்கொண்டு உங்கள் மனதில் தோன்றும் விஷயங்களையும் இதில் கீழே கமெண்டில் பதிவிடுங்களேன்.

சொத்துக்கள் சேதம்

சொத்துக்கள் சேதம்

இந்தியா மீது பாகிஸ்தான் விமானப் படை மூலமாகவோ, காலாட்படைகள் மூலமாகவோ தென் இந்த்யாவை கப்பற் படை முலமாகவோ தாக்கத் தொடங்கினால் சொத்துக்கள் கணக்கிட முடியாத அளவுக்கு சேதமாகும். இதில் சொத்துக்கள் என்பது வெறும் அரசாங்கத்தின் சாலைகள், பேருந்துகள், அலுவலகங்கள் மட்டும் கிடையாது. ஒரு மாதம் வெறும் 15,000 ரூபாய் சம்பளத்தில் நான்கு பேர் வாழப் பயன்படுத்தும் பாத்திரங்கள், கேஸ் அடுப்புகள், மிக்ஸி, க்ரைண்டர், டிவி, ஃப்ரிட்ஜ், என எல்லாமே அந்த நபருக்கு ஒரே வாங்க சாத்தியமில்லாதது தான். ஒரு முறை அவர்கள் தங்கள் சொத்துக்களை இழந்துவிட்டால் பின் அவைகளை மீண்டும் சம்பாதிக்க எத்தனை வருடங்கள் ஆகும் என்பதை நாம் நன்கு அறிவோம். இது உலகில் உள்ள எல்லா போர்களுக்கும் பொருந்தும் உலகப் போர்1 & 2 தொடங்கி நேற்று வரையான இந்தியா பாகிஸ்தான் போர் வரை.

வேலை வாய்ப்புகள்
 

வேலை வாய்ப்புகள்

போர் காலங்களில் மக்களை காக்க, எல்லோரையும் ராணுவ பங்கர்களில் (பதுங்கு குழிகளுக்கு) அடைப்பார்கள். அப்போது நமக்கு வேலை கொடுக்கும் முதலாளி கூட அதில் நம்மோடு சேர்ந்து ஒலிந்து கொண்டிருக்காலாம். இந்த போரில் மேலே சொல்லிய படி ஒரு சில குண்டுகள் நாம் வேலை பார்க்கும் அலுவலகத்தின் மீது விழுந்தால், போர் முடிந்த பின் எங்கே சென்று வேலை பார்ப்பது. அந்த முதலாளி தான் போட்ட முதல் பணத்துக்கு எங்கே போவார். அப்படியே வேலை கொடுத்தாலும், எவ்வலவு சம்பளம் கொடுக்க முடியும்..? இப்படி ஒரு சின்ன அமைப்புசாரா தொழிலாளர் தொடங்கி தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் வரை எல்லோரும் இந்த பிரச்னை எழும். எடுத்துக்காட்டு ஆஃப்கானிஸ்தான். இன்றுவரை நிறுவனங்கள், கார்ப்பரேட்டுகள் என எதுவும் த்லை எடுக்க முடியவில்லை. வேலைவாய்ப்புகளும் சரி இல்லை. ஆகையால் பலரும் தீவிரவாதம் பக்கம் திரும்புகிறார்கள்.

சாவு

சாவு

பொதுவாக போர் என்று வந்தால் ராணுவத்தினர் சாவதை விட சாதாரன அப்பாவில் மக்கள் தான் முதல் பலியாவார்கள். இரண்டு நாட்டு ராணுவமும் தங்கள் எதிரி நாட்டு மக்களை எதிரியாகவே நினைத்து சண்டை போடுவார்கள். இதற்கு சிறந்த உதாரணம் இரண்டாம் உலகப் போர். இந்த போரில் இறந்த ராணுவ வீரர்கள் 2 கோடி பேர். இறந்த சிவிலியன்ஸ் 4 கோடி பேர்.

நுகர்வோர்கள் காலியா..?

நுகர்வோர்கள் காலியா..?

ஒரு நாட்டில் மக்கள் தொகை என்பதும் ஒரு விதமான செல்வம் தான். இன்ரு இந்தியாவை இத்தனை மேற்கத்திய தேசங்கள் கண்ணத்தைக் கிள்ளி கொஞ்சுகிறது என்றால், இந்தியாவில் இருக்கும் நுகர்வுப் பனம் தான் காரணம். இந்தியாவில் 120 கோடி வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். அரசும் கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போகிறது சீனா போல அடம் பிடிப்பதில்லை என்பதால் தான் இந்தியா பலரின் நல்ல பிள்ளையாக இருக்கிறது. அப்படி நம் இந்திய மக்களில் ஒரு பெரு பகுதியினர் இந்தோ பாக் போரில் சாக நிறைய வாய்ப்பிருக்கிறது. அப்படி செத்தால், வாடிக்கையாளர்களைத் தேடி அடுத்த நாடுகளுக்குச் செல்வார்கள். இந்தியாவை விட்டுவிடுவார்கள்.

லேபர் ஃபோர்ஸ்

லேபர் ஃபோர்ஸ்

ஒரு நாட்டில் உழைக்கும் மக்களைத் தான் லேபர் ஃபோர்ஸ் என்போம். இந்தியாவில் இப்போது தான் 20 - 40 வயதினர்கள் ரொம்ப அதிகமாக இருக்கிறார்கள். இந்த இளைஞர்களின் எண்ணிக்கை போர் இறப்பினால் குறைந்தால், மொத்த இந்திய பொருளாதாரமும் பெரிய அடி வாங்கும். இந்தியாவின் ஜிடிபி எல்லாம் கண்ணா பின்னா என சரியத் தொடங்கும்.

அந்நிய செலாவணி

அந்நிய செலாவணி

தற்போது இந்தியாவிடம் 398 பில்லியன் டாலர் அந்நிய செலாவணி இருப்பதாக ஆர்பிஐ சொல்கிறது. போர் என வந்துவிட்டால் இந்த அந்நிய செலாவணி கையிருப்புகள் எல்லாம் கரைந்து எல்லாமே ஆயுதங்களாகி விடும். மிக குறிப்பாக இந்திய பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கை குறைந்துவிடும் என்பதால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்து 1 டாலருக்கு 100 ரூபாய் கூட எளிதில் தொட்டு விடும்.

எல்லாம் ராணுவத்துக்கே..?

எல்லாம் ராணுவத்துக்கே..?

தற்போது இடைக்கால பட்ஜெட்டில் 3 லட்சம் கோடி ரூபாய் பாதுகாப்புத் துறைக்கு கொடுத்திருக்கிறார்கள். இதுவே போர் மூண்டு விட்டால் அதே ரஃபேல் விமானங்களை இரண்டு மடங்கு விலை கொடுத்தாவது வாங்கி பாகிஸ்தானோடு சண்டை செய்தாக வேண்டிய சூழல் உருவாகும். இப்படி இந்திய அரசின் மொத்த வருமானமும் ராணுவத்துக்கே திருப்பி விடப் படும்.

அழியும் கட்டுமானம்

அழியும் கட்டுமானம்

சாதாரண பொதுக் கழிப்பிடம் தொடங்கி ஒட்டு மொத்த ரயில்வே தண்டவாளங்கள் பாலங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் இந்தியாவில் ஏகப்பட்ட முக்கியமான அடிப்படைக் கட்டுமானங்கலை பாகிஸ்தானால் இந்தியாவிலு,. இந்தியாவால் பாகிஸ்தானிலும் சரிக்கப்படலாம். ஒரு பாலம் அமைக்க பல ஆயிரக் கணக்கான கோடிகள் செலவாகும். ஆக ஏற்கனவே கட்டி முடித்த பாலைத்தை மீண்டும் பல ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி மறு சீர் செய்ய வேண்டும் இல்லை என்றால் மறு கட்டுமானம் செய்ய வேண்டி இருக்கும்.

கல்வி அறிவு

கல்வி அறிவு

சாலைகள் பாலங்கள் போவது எல்லாம் ஒரு வித இழப்பு என்றால் குழந்தைகளுக்கான பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள் எல்லாம் அழிக்கப்பட்டால் எங்கு சென்றுகல்வி கற்பார்கள். ஒரு தலைமுறையே கல்வியறிவற்ற தலைமுறை ஆகிவிடாது..? உதாரணம் இலங்கை. இலங்கை ராணுவம் எப்போது விடுதலைப் புலிகள் கூடாரத்தைக் கண்டு பிடித்தாலும் பள்ளிக் கூடங்கள், நூலகங்களை மறக்காமல் நாசம் செய்வார்கள். காரணம் விடுதலைப் புலிகள் அறிவு பெறுவதைத் தடுப்பதற்குத் தான்.

வெளியேற்றம்

வெளியேற்றம்

ஒரு வேளை இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் நடக்கும் போரில் இந்தியா வென்றுவிட்டது என்றே வைத்துக் கொள்வோம். பாகிஸ்தானில் இருந்தும், பாகிஸ்தான் கட்டுப் பாட்டில் இருக்கும் காஷ்மீரில் இருந்தும் வரும் அகதிகளை யார் கவனித்துக் கொள்வது. 1947-களில் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையி போது பஞ்சாபிகள் பட்ட கஷ்டத்தையும், வங்காளிகள் பட்ட கஷ்டத்தையும் கொஞ்சம் படித்துப் பாருங்கள் புரியும். இந்த அகதிகளுக்கு ஒரு குறைந்தபட்ச மனிதாபிமான அடிப்படையில் மூன்ரு வேலை உணவு தங்க ஒரு சின்ன இடம், மற்ற வசதிகள் எல்லாமாவது செய்து கொடுக்க வேண்டும். அதற்கான பணத்தை யார் கொடுப்பார்கள்.

பெண்கள் மீதான வன்முறை

பெண்கள் மீதான வன்முறை

மேலே சொன்னதை எல்லாம் விட எந்த நாட்டு ராணுவமாக இருந்தாலும் வெற்ரி பெற்ற பின் முதலில் கொண்டாடுவது எதிரி நாட்டு பெண்கள் மீது தான். அவர்களைத் துன்புறுத்துவது, அவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைப் படுத்துவது அவர்களுக்கு இருக்கும் குழந்தைகள் முன்னிலையிலேயே இந்த கொடுமைகள் நடப்பது எல்லாம் அந்த குடும்பத்தையே சிதைத்துவிடும். அதன் பின் அந்த மன உளைச்சலில் இருந்து மீண்டு வருவதே அவளின் மிகப் பெரும் பாடாக இருக்கும்.

உலக முன்னேற்றம்

உலக முன்னேற்றம்

உலகில் எல்லா நாட்களிலும் ஏதோ ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் போரில் ஈடுபட்டுக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அவைகள் எல்லாம் உலகப் பொருளாதாரத்தை அதிகம் பாதிக்காத பிரச்னைகள். ஆனால் இப்போது உலகில் டாப் 5 பொருளாதாரங்களில் ஒன்றான இந்தியா இதில் களம் இறங்கி இருப்பதைத் தான் உலகம் வெறித்துப் பார்க்கிறது. ஒட்டு மொத்த உலகப் பொருளாதாரத்தையும் இந்தியா நங்கூரம் போல இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறது என பொருளாதாரத்துக்கு நோபல் பரிசு பெற்ற பால் குருஜ்மென் (Paul Krugmen) சொல்லி இருக்கிறார். அதோடு போர் போன்றவைகள் நடந்தால் குறிப்பாக இந்தியாவில் நடந்தால் இந்தியாவே 20 வருடங்களுக்கு பின் தங்கி விடும் என பயமுறுத்துகிறார். ஆக இந்தியாவுக்கு விழும் பிரம்படி, மற்ற நாடுகளின் முதுகிலும் ஒரு பலமான பிரம்படி போலத் தான் விழும். ஆகையால் போர் இந்தியாவும் பாகிஸ்தானும் போரை தவிர்த்துக்கொள்வது நல்லது. இந்தியாவாவது 20 வருடங்கள் பின்னோக்கிப் போகும். பாகிஸ்தான் காணாமலேயே போய்விடும். மேலே எழுதியதை படிக்க 2 நிமிடங்கள் தான். ஆனால் இந்த போரின் பாதிப்புகளில் இருந்து வெளிவர 20 வருடங்களுக்கு மேல் ஆகும். தயவு செய்து போர் செய்யாதீர்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

if india and pakistan indulge in a war then indian may go back 20 years

if india and pakistan indulge in a war then indian may go back 20 years
Story first published: Thursday, February 28, 2019, 16:09 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X