கார்களை அதிகம் பயன்படுத்தும் இந்திய நகரங்களில் சென்னைக்கு 4-வது இடம்..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு கிலோமீட்டர் சாலையில் எத்தனை கார்கள் ஓடுகிறதோ அதைத் தான் ஒரு கிலோமீட்டருக்கு கார்களின் அடர்த்தி (Car density per km) எனச் சொல்கிறோம்.

 

பொதுவாக மிகச் சிறிய கார்களான மாருதி 800-ன் நீளம் சுமாராக 3.3 மீட்டர், மிகப் பெரிய கார்களான Ford Endeavour, Toyoto Fortunner போன்ற கார்கள் எல்லாம் சுமார் 5 மீட்டர் நீளம் இருக்கும். ஆக சராசரியாக ஒரு காரின் நீளத்தை 4 மீட்டர் என எடுத்துக் கொள்வோம்.

ஒரு காரின் நீளம் 4 மீட்டர் என்றால், ஒரு கிலோமீட்டர் சாலையில் நேராக ஒரு காருக்குப் பின் ஒரு கார் என நிற்க வைத்தால் சுமாராக 250 கார்களை மட்டுமே நிறுத்த முடியும்.

பணச் சலவை செய்யும் அரசியல் கட்சிகள்..! வருத்தப்படும் வருமான வரித் துறை..!

ஆனால்

ஆனால்

மும்பையில் இந்த கார்களின் அடர்த்தி ஒரு கிலோமீட்டருக்கு 510 கார்களாக இருக்கிறது. அதாவது குறைந்த பட்சம் இரு வழிச் சாலைகள் இருந்தால் தான் 510 கார்களை ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்த முடியும். ஒரு வழிச் சாலை என்றால் மும்பையே காலி தான்.

எந்த நகரங்களில் எவ்வளவு

எந்த நகரங்களில் எவ்வளவு

இந்திய பெரு நகரங்களில் கார் அடர்த்தியைக் கணக்கெடுத்தால் மும்பை - 510 கார்கள், புனே - 359 கார்கள், கொல்கத்தா - 319 கார்கள், சென்னை - 297 கார்கள், பெங்களூரூ - 149 கார்கள், டெல்லி - 108 கார்கள் இருக்கின்றனவாம். இதில் சென்னை பெங்களூரூ, டெல்லி ஆகிய நகரங்களில் தான் கார் ஓட்ட கொஞ்சமாவது இடம் இருக்கும், மற்ற நகரங்களில் எல்லாம் காரை உருட்டிக் கொண்டு தான் செல்ல வேண்டும். ஓட்ட முடியாது.

ஆச்சர்யம்
 

ஆச்சர்யம்

மேலே சொன்னதற்கு முரணாக இன்னொரு தரவுகள் நமக்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கின்றன. இந்திய பெரு நகரங்களில் எங்கு அதிக கார்களை வாங்கி இருக்கிறார்கள் என்று பார்த்தால் மீண்டும் எல்லாமே தலைகீழாக இருக்கிறது. மும்பை - 10.2 லட்சம் கார்கள், கொல்கத்தா - 5.91 லட்சம் கார்கள், பெங்களூரூ - 15.23 லட்சம் கார்கள், டெல்லி - 32.46 லட்சம் கார்கள்.

இவர்கள் தான் அதிகம்

இவர்கள் தான் அதிகம்

இந்தியாவிலேயே டெல்லியில் தான் மிகக் குறைவான கார்கள் சாலையில் ஓடுகின்றன. ஆனால் டெல்லி நகர வாசிகள் தான் அதிக கார்களை வாங்கி வைத்திருக்கிறார்கள். அதே போல் டெல்லிக்கு அடுத்து பெங்களூர் தான் குறைவான கார்கள் சாலையில் ஓடுகின்றன. ஆனால் மும்பை நகர வாசிகளை விட அதிக கார்களை வாங்கி வைத்திருப்பது பெங்களூரூ வாசிகள் தான்.

இணைப்புகள்

இணைப்புகள்

ஆக சரியான பொது போக்குவரத்து வசதிகள் இருந்தால், மக்கள் தங்கள் சொந்த கார்களைக் கூட வீட்டில் வைத்துவிட்டு, பொது போக்குவரத்தைப் பயன்படுத்துவார்கள் என்பதை மக்களே நிரூபித்துக் காட்டி இருக்கிறார்கள். குறிப்பாக சாலை வசதிகளையும் மேம்படுத்த வேண்டும். ஒரு சின்ன கிராமத்துக்கு கூட நம்மால் பொது போக்குவரத்து வசதிகளில், நல்ல சாலைகளில் நிம்மதியாக பயணிக்க முடிந்தால் கார்களின் எண்ணிக்கை இன்னும் குறையும், எரிபொருள் தேவையும் பெரிய அளவில் குறையுமென்கிறார்கள். அரசுகள் செய்யுமா..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

chennai is in fourth place in car density

chennai is in fourth place in car density
Story first published: Monday, March 18, 2019, 12:56 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X