பின் கோட் பார்த்து பொருட்களை பிரிக்க ரோபாட்களை வேலைக்கு எடுத்த Flipkart..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரூ: ஃப்ளிப்கார்ட் நிறுவனம் பெங்களூருக்கு அருகில் இருக்கும் தன் டெலிவரி ஹப்களில் புதிதாக 100 ரோபாட்களை வேலைக்கு சேர்த்திருக்கிறார்களாம். ஃப்ளிப்கார்ட் வரலாற்றிலேயே இந்த வேலைக்கு ரோபாட்களை அமர்த்துவது இதுவே முதல் முறையாம்.

 

இந்த ரோபாட்களின் முக்கிய வேலையே கன்வேயர் பெல்ட்களில் வரும் பொருட்களில் இருக்கும் விலாசங்களை ஸ்கேன் செய்து அதில் இருக்கும் பின் கோடை அடிப்படையாக வைத்து டெலிவரி பார்சல்களை பிரித்து வைக்க வேண்டியது தான்.

ஒரு ரோபா இன்னொரு ரோபோ உடனோ அல்லது மனிதர்கள் மீதோ மோதி விடாத படி ரோபாட்களை வடிவமைத்திருக்கிறார்களாம். இந்த புதிய ரோபாட்களினால் ஒரு மணி நேரத்தில் 4,500 பார்சல்களை பிரித்து வைக்க முடிகிறதாம். இது மனித கைகளால் செய்வதை விட 10 மடங்கு அதிக பார்சல்களாம்.

உணவுப் பணவீக்கம் குறைந்து கொண்டே வருவதாக அரசு சொல்கிறது..! உண்மையா..? உணவுப் பணவீக்கம் குறைந்து கொண்டே வருவதாக அரசு சொல்கிறது..! உண்மையா..?

சமாளிக்கலாம்

சமாளிக்கலாம்

ஆக இனி ஃப்ளிப்கார்ட்டின் டெலிவரி ஹப்களில் இருந்து ஒரு மணி நேரத்தில் வெளியே டெலிவரிக்கு வரும் பொருட்களின் எண்னிக்கை 5 மடங்கு அதிகரிக்கும் எனவும் ஃப்ளிப்கார்ட் தெரிவித்திருக்கிறது. அதற்கு இன்னும் கொஞ்சம் உள்கட்டமைப்புகளில் சின்ன சின்ன மாற்றங்களைக் கொண்டு வந்து, ரோபாட்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டி இருக்கிறதாம்.

ஃப்ளிப்கார்ட் தான் ஃபர்ஸ்ட்

ஃப்ளிப்கார்ட் தான் ஃபர்ஸ்ட்

அமேஸான் நிறுவனம் கூட இதுவரை இப்படிப்பட்ட ரோபாட்களை பயன்படுத்துவதில்லையாம். இதுவரை மனிதர்களைக் கொண்டு தான் டெலிவரி ஹப்களில் இருந்து பொருட்களை பிரித்து அனுப்புகிறார்களாம். ஆக இப்போது ஃப்ளிப்கார்ட் தான் ஆன்லைன் ஷாப்பிங்கில் அடுத்த கட்ட புரட்சியைச் செய்திருக்கிறது. அடுத்த இந்த சேவையை மொத்த உலகமும் பின்பற்றும் என எதிர்பார்க்கலாம்.

ஏன் ரோபாட்கள்
 

ஏன் ரோபாட்கள்

இதுவரை ஃப்ளிப்கார்ட் சந்தித்து வரும் மிகப் பெரிய பிரச்னை இந்த சப்ளை செயின் தான். இந்த பிரச்னையை ஆட்டோமேஷன் உதவியோடு செய்து முடிக்க விரும்பினோம். அதிக பொருட்களை எந்த ஒரு மனித தவறுகளும் இல்லாமல் கையாள, அதிக உற்பத்தித் திறனை வெளிப்படுத்த இந்த இயந்திரங்களை இறக்கி இருக்கிறோம் எனச் சொல்கிறார் ஃப்ளிப்கார்ட்டின் மூத்த துணைத் தலைவர் கிருஷ்ண ராகவன்.

அதிக ஆர்டர்களை கையாளலாம்

அதிக ஆர்டர்களை கையாளலாம்

இந்தியாவின் மிகப் பெரிய விழா காலங்களில் எல்லாம் அதிக ஆர்டர்கள் வரும் போது டெலிவரி ஹப்களின் அளவை மாற்ற முடியாது. அப்போது இந்த இயந்திரங்கள் எல்லாம் இருக்கும் போது இன்னும் மூன்று முதல் நான்கு மடங்கு ஆர்டர்களைக் கூட எளிதில் இதே அளவு டெலிவரி ஹப்களை வைத்துக் கொண்டு சமாளிக்கலாம் என்கிறார் இகார்ட் நிறுவனத்தின் ரொபாட்டிக்ஸ் மற்ரும் ஆட்டோமேஷன் துறையின் துணைத் தலிவர் ப்ரணவ் சக்ஸேனா.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

flipkart introduced 100 robots in its bengaluru delivery hub

flipkart introduced 100 robots in its bengaluru delivery hub
Story first published: Thursday, March 21, 2019, 16:06 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X