10 வயது சிறுவனோடு மோதும் ஆஸ்திரேலியாவின் 100 ஆண்டு பழைய Qantas விமான நிறுவனம்..! பிசினஸ் மோதல்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆஸ்திரேலியா: அந்த சிறுவனின் பெயர் அலெக்ஸ் ஜாக்வட் (Alex Jacquot). வயது 10. சொந்தமாக விமான நிறுவனம் தொடங்கி நடத்தி வருகிறார்.

இந்த சிறுவன் தொடங்கி இருக்கும் பயணிகள் விமான சேவை நிறுவனத்தின் பெயர் ஓசியானியா எக்ஸ்பிரஸ் (Oceania Express).

தன் விமான சேவை நிறுவனத்தில் எத்தனை விமானங்கள் தேவைப்படும், எந்த ரக விமானங்கள் எந்த வழித் தடங்களுக்கு சரியாக இருக்கும்..? போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் தடையை எப்படி எதிர் கொள்வது..? என எல்லா கேள்விகளுக்கும் கட் அண்ட் ரைட்டாக பதில் வைத்திருக்கிறார்.

பிசினஸ் விரிவாக்கம்.. ஐடிசியின் ஜான் பிளேயர் பிராண்டை லபக்குகிறது ரிலையன்ஸ்! பிசினஸ் விரிவாக்கம்.. ஐடிசியின் ஜான் பிளேயர் பிராண்டை லபக்குகிறது ரிலையன்ஸ்!

 அந்த கரடி பொம்மை

அந்த கரடி பொம்மை

அலெக்ஸ் தொடங்கி இருக்கும் நிறுவனத்துக்கு அலெக்ஸ் தான் நிறுவனர் மற்றும் சி இ ஓ வாம். ஓசியானியா எக்ஸ்பிரஸ் விமான சேவை நிறுவனத்தின் துணை சி இ ஓ-வாக பதவியில் இருப்பது அலெக்ஸின் நண்பர் பட்டி உல்ஃப் (Buddy Wolf). இந்த பட்டி உல்ஃப் ஒரு பொம்மை.

 பெரும் திட்டம்

பெரும் திட்டம்

எடுத்த எடுப்பிலேயே ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய மற்றும் பழைய விமான நிறுவனமான Qantas நிறுவனமே பயப்படும் சிட்னி முதல் லண்டன் வரையான நான் ஸ்டாப் சேவையை கையில் எடுத்து வியாபாரத்தை தொடங்கி இருக்கிறார் ஓசியானியா எக்ஸ்பிரஸ் நிறுவன சி இ ஓ அலெக்ஸ்.

 ப்ராஜெக்ட் சன்ரைஸ்

ப்ராஜெக்ட் சன்ரைஸ்

Qantas நிறுவனமே இந்த சிட்னி முதல் லண்டன் வரையான நான் ஸ்டாப் சேவையை நடத்த திணறிக் கொண்டிருக்கிறது. அந்த வழி தடங்களில் சிறப்பாக விமானங்களை இயக்க தனி திட்டமே போட்டு வேலை செய்து வருகிறார்கள். அந்த திட்டத்தின் பெயர் தான் ப்ராஜெக்ட் சன் ரைஸ்.

 என்ன பிரச்னை

என்ன பிரச்னை

சிட்னி முதல் லண்டன் வரையான பயணம் சுமார் 25 மணி நேர பயணம். இந்த 25 மணி நேரத்தில் பயணிகளுக்கு தேவையான உணவு, மதுபானம், பொழுது போக்கு என அனைத்து செலவுகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆக செலவு கூடுதலாகத் தான் இருக்கும். இதனால் விமான பயணச் சீட்டு விலை அதிகமாக இருந்தால் நிறைய பயணிகள் வரமாட்டார்கள். ஆக சிட்னி டு லண்டன் விமானத்தில் இருக்கும் அனைத்து இருக்கைகளும் சரியான நேரத்துக்குள் விற்றுத் தீர்ந்தால் தான் விமானத்தை இயக்க முடியும். அதனால் ஒரு நல்ல விலையில் விமானக் கட்டணத்தை நிர்ணயித்து, சேவைகளையும் நிறைவாக கொடுக்க வேண்டிய பிசினஸ் சவால் நிரம்பி இருக்கிறது.

 நான் ஸ்டாப்பா..?

நான் ஸ்டாப்பா..?

இந்த பயணத்தை நான் ஸ்டாப்பாக நடத்தவே முடியாது. உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானங்களே சுமார் 12 - 13 மணி நேரங்களில்14,000 மட்டுமே பறக்க முடியும். அதன் பின் எரிபொருள் நிரப்ப, சின்ன சின்ன பராமரிப்புகளுக்கு என்று எப்படியாவது விமானத்தை தரை இறக்கியே ஆக வேண்டும். இப்படிப்பட்ட சிக்கலான வழித் தடத்தில் தான் Qantas நிறுவனத்தோடு ஓசியானியா எக்ஸ்பிரஸ் நிறுவனமும், அலெக்ஸோடு Qantas நிறுவனத்தின் சி இ ஓ ஆலன் ஜாய்ஸும் மோதுகிறார்கள்.

 வேண்டுகோள்

வேண்டுகோள்

இந்த திட்டங்களுக்குப் பின் தான் அலெக்ஸ், Qantas நிறுவனத்தின் சி இ ஓ ஆலன் ஜாய்சுக்கு ஒரு கடிதம் எழுதுகிறான். அந்த கடிதத்தில் தன் ஓசியானியா எக்ஸ்பிரஸ் விமான சேவை நிறுவனத்தை சிறப்பாக நடத்த வழிகாட்டும் படி கேட்டிருக்கிறான் சிறுவன் அலெக்ஸ். மிக முக்கியமாக அந்த கடிதத்தின் தலைப்பிலேயே "இந்த கடிதத்தை சீரியஸாக எடுத்துக் கொள்ளுங்கள் எனச் சொல்லி இருக்கிறான் அலெக்ஸ்.

 கேள்விக் கடிதம் சுருக்கம்

கேள்விக் கடிதம் சுருக்கம்

அலெக்சின் கடிதத்தில் தான் புதிதாக தொடங்கி இருக்கும் ஓசியானியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின், பதவி நிர்ணயங்கள், கேட்டரிங் தயாரிப்புகள், ஐடி பொறுப்பு, பராமரிப்பு தலைவர்கள் என பலரையும் தேர்வு செய்துவிட்டாராம். அலெக்ஸும் ஒரு கண்டிப்பான பிசினஸ் மேன் போல மூன்று விஷயங்களை குறிப்பிட்டு கேட்கிறார்.

 முதல் கேள்வி

முதல் கேள்வி

1. என் சொந்த விமான சேவை நிறுவனத்தில் வேலை பார்க்கத் தான் எனக்கு விருப்பம். இப்போது எனக்கு பள்ளி விடுமுறை நான் என்ன வேலை செய்வது என்றே தெரியவில்லை. என்ன செய்யலாம் சொல்லுங்கள். நீங்களும் Qantas சி இ ஓ என்பதால் இதைக் கேட்கிறேன் என்றும் அழுத்தமாக கேட்டிருக்கிறான்.

 இரண்டாம் கேள்வி

இரண்டாம் கேள்வி

2. ஒரு விமான நிறுவனத்தை எப்படித் தொடங்குவது.? அதற்கு ஏதாவது டிப்ஸ் இருக்கிறதா..? சொனால் நன்றாக இருக்கும்..?

 மூன்றாம் கேள்வி

மூன்றாம் கேள்வி

3. ஒரு ஏர்பஸ் ஏ350 ரக விமானத்தை வைத்து சிட்னி முதல் லண்டன் வரை ஒரு சேவையை தொடங்க இருக்கிறேன். இது ஒரு 25 மணி நேர விமானப் பயணம். இந்த சேவையை கொண்டு வருவதில் நிறைய சிக்கல்கள் இருக்கிறது. குறிப்பாக தூக்கம். இது குறித்து உங்களிடம் ஏதாவது அட்வைஸ் இருக்கிறதா..? விரைவில் விடையளிப்பீர்கள் என்று நம்புகிறேன். இப்படிக்கு அலெக்ஸ், நிறுவனர் மற்றும் சி இ ஓ, ஓசியானியா எக்ஸ்பிரஸ் என கடிதத்தை முடித்திருக்கிறான் அலெக்ஸ்.

 Qantas பயம்

Qantas பயம்

Qantas நிறுவனத்தின் சி இ ஓ இந்த சிறுவன் அலெக்ஸின் கடிதத்தை விளையாட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு ஞாயிற்றுக்கிழமை உட்கார்ந்து ஒரு பதில் கடிதத்தை தானே டைப் செய்திருக்கிறார். அந்த கடிதத்தின் தொடக்கத்திலேயே "புதிய விமான சேவை நிறுவனத்தை தொடங்கி இருப்பதை எனக்கு தெரியப்படுத்தியதற்கு நன்றிகள். ஆஸ்திரேலியாவில் ஒரு புதிய விமான சேவை நிறுவனம் களம் இறங்கப் போகிறது என வந்த வதந்ததிகளை கேட்டேன்" என்றே தொடங்கி இருக்கிறார். இனி Qantas நிறுவனத்தின் சி இ ஓவின் கடிதத்தில் இருந்து.

 பதில் கடிதம்

பதில் கடிதம்

பொதுவாக நான் என் போட்டி நிறுவனங்களுக்கு அட்வைஸ் கொடுப்பதில்லை. இந்த விஷயத்தை நீங்கள் புதிதாக நியமித்திருக்கும் சட்ட வல்லுநர் உங்களுக்குச் சொல்லுவார். நானும் ஒரு காலத்தில் உங்களைப் போலவே விமானங்கள் மீது அதீத காதல் கொண்டவன் என்பதால் ஒரு விதி விலக்காக உங்களுக்கு சில அட்வைஸ் கொடுக்கிறேன்.

 நம்பர் 1

நம்பர் 1

எப்போதும் பயணிகளின் பாதுகாப்பு தான் முதல் மற்றும் முக்கிய விஷயமாக இருக்க வேண்டும். அதற்கு அடுத்து பயணிகளுக்கு தகுந்த விலையில் நிம்மதியாக, சுகமாக தங்கள் பயணங்களை மேற்கொள்ள வையுங்கள். இது தான் Qantas நிறுவனத்தின் தாரக மந்திரமாக கடந்த 100 ஆண்டுகளாக இருக்கிறது. இதில் வெற்றியும் கண்டிருக்கிறோம். இன்னும் கண்டு கொண்டிருக்கிறோம்.

 எனக்கும் பிரச்னை தான்

எனக்கும் பிரச்னை தான்

இப்போது உங்களின் 3-வது கேள்விக்கு வருகிறேன். 21 மணி நேர விமான பயணத்தில் பயணிகளின் உறக்கம் என்கிற சவாலை Qantas நிறுவனமும் எதிர் கொண்டு வருகிறது. இதற்காகத் தான் Project Sunrise என்கிற பெயரில் ஒரு திட்டத்தை நடத்தி வருகிறோம். பயணிகளின் உறக்கத்தை உறுதி செய்ய சில மாறுபட்ட விமான கேபின்களைப் பார்த்து வருகிறோம். பயணிகள் கொஞ்சம் நிம்மதியாக தங்கள் உடலை வளைத்துக் கொள்ளும் விதவிதமான கேபின்களைப் பார்த்து வருகிறோம். இன்னும் எப்படி எல்லாம் பயணிகளை நிம்மதியாகவும், சொகுசாகவும் பயணிக்க வைக்க முடியும் என யோசித்து வருகிறோம்.

 ஒரு முறை வாருங்களேன்

ஒரு முறை வாருங்களேன்

இந்த 21 மணி நேர விமான பயணப் பிரச்னைகளைக் கையாள, ஆஸ்திரேலியாவின் மிகப் பழைய விமான சேவை நிறுவனத்தின் சி இ ஓ ஆகிய நான், ஆஸ்திரேலியாவின் மிகப் புதிய விமான சேவை நிறுவனத்தின் சி இ ஓ ஆகிய உங்களை ஒரு Project Sunrise கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கிறேன். அதோடு எங்களின் செயல்பாட்டு மையத்தில் ஒரு சுற்றுலா விசிட் அடிக்கும் வாய்ப்பையும் உங்களுக்கு தர விரும்புகிறேன்.

நன்றி

நன்றி

உங்கள் கடிதத்துக்கு நன்றி, விரைவில் நம் சந்திப்புக்கு நேரம் குறித்துவிட்டு உங்களை நேரில் பார்க்கிறேன். இப்படிக்கு ஆலன் ஜாய்ஸ் என கடிதத்தை முடித்திருக்கிறார். இப்படி ஒரு உருக்கமான நிகழ்வை சமூக வலைதளங்களில் இரண்டு வகையான கருத்துக்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

 ஆலன் ஜாய்ஸ்

ஆலன் ஜாய்ஸ்

ஆலன் ஜாய்ஸ் ஒரு சிறுவனை மதித்து தன் கையாலேயே கடிதம் எழுதியதை ஒரு பக்கம் கொண்டாடித் தீர்க்கிறார்கள். ஆனால் இன்னொரு பக்கம் பார்த்தீர்களா ஆலன் ஜாய்ஸ் கிடைத்த வாய்ப்பை எப்படி சந்தைப் படுத்திவிட்டார் எனவும் குமுறுகிறார்கள்.

அலெக்ஸின் அம்மா

இதுவரை இரண்டு சி இ ஓக்கள் (ஓசியானா எக்ஸ்பிரஸின் அலெக்ஸ் மற்றும் Qantas-ன் ஆலன் ஜாய்ஸ்) சந்திக்கும் தேதி அறிவிக்கப்பட வில்லையாம். இந்த இரண்டு விமான நிறுவன ஜாம்பவான் சந்திக்கும் போது இன்னும் என்ன மாதிரியான விஷயங்கள் எல்லாம் நடக்குமோ..? எனவும் விளையாட்டாக ட்ரோல் செய்திருக்கிறார் அலெக்ஸின் அம்மா.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Qantas oldest 100 year Australian airline company is going to fight with 10 year old boy company

Qantas oldest 100 year Australian airline company is going to fight with 10 year old boy company
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X